நவராத்திரி கொலு என்பது ஒரு குதுகுலமான ஒன்று தான் .
ஊட்டி குளிர் காலம் துவங்குவதற்கு முன் கொலுவின் சிறப்பு பல வீடுகளில் களைகட்டும் ஒன்று .
சில வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு மிக சிறப்பாக அலங்கரிக்கப்படும் ஒன்றாக இருந்தது .பலர் ஊட்டியை விட்டு இடம்பெயர்ந்து விட்டதால் கொலு அலங்காரம் மிஸ்ஸிங் .
கொரோனா தொற்றுக்கு பின் கொலு அலங்காரம் மிகவும் குறைந்து விட்டதை பார்க்க முடிகிறது .
அதே சமயம் கொலு அலங்கார வீடை தேடி பிடித்தோம் .
ஊட்டி கணபதி திரையரங்கு அருகில் வசிக்கும் இல்லத்தரசி சங்கீதா தன் வீட்டில் ஒரு சூப்பர் கொலு அலங்கரித்துள்ளார் .
விகடகவிக்காக நாம் அவரின் வீட்டிற்கு சென்றோம் .வாசல் முதல் அழகான கோலம் கதவுகள் எல்லாம் மலர்களால் அலங்கரித்துள்ளார் .
வீட்டின் முன் ஹாலில் அழகான கொலு நம்மை வரவேற்றது .
கண்கவர் சாமி உருவ சிலைகள் .பொம்மைகள் என்று அலங்கரித்திருந்தார் .
இந்த வருட கொலுவின் சிறப்பை பற்றி சங்கீதாவிடம் பேசினோம் ,
" எங்க குடும்பத்தில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை நான் திருச்சியில் இருக்கும் போது பல நண்பர்கள் வீடுகளில் கொலு வைத்திருப்பதை பார்க்கும் போது நானும் வைக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது .எங்க வீட்டில் வைக்க முடியவில்லை . திருமணமாகி ஊட்டி வந்தவுடன் இங்கும் என்னால் உடனடியாக வைக்க முடியவில்லை .
பத்து வருடத்திற்கு முன் என் கணவரின் தம்பிக்கு ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற வீடே இருண்டு போய்விட்டது அப்பொழுது நவராத்திரி சமையம் என் மனதில் எதோ தோன்றி என்னிடம் இருந்த சாமி சிலை மற்றும் பொம்மைகளை வைத்து சிறிய கொலு வைத்து சாமி கும்பிட அவர் நலமாகி வருகிறார் என்ற தகவல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது .கொலு முடியவும் அவர் குணமடைந்து வீடு திரும்பியதை மறக்க முடியவில்லை .
அடுத்த வருட கொலு சிறப்பாக அலங்கரிக்க அவரும் குடும்பத்தாரும் கலந்து கொண்டது ஒரு இன்ப அதிர்ச்சி தான் .
அதே சமயம் கடந்த பத்து வருடமாக நான் அலங்கரிக்கும் கொலு ஒரு சென்டிமென்ட்டாகி போனது " என்கிறார் சங்கீதா ரவிக்குமார் .
" எங்க வீட்டு கொலுவில் முந்நூறு பொம்மைகள் அலங்கரிக்கின்றன எல்லா பொம்மைகளும் எங்க திருச்சியில் இருந்து தான் வாங்கி வருவேன் . இந்த வருட எங்க கொலுவின் சிறப்பு அம்மன் அமர்ந்துள்ளது தான் , நானே அலங்கரித்து வைத்துள்ளேன் .
துர்க்கா , விநாயகர் , நரசிம்மர் என்று சாமி சிலைகள் வைத்துள்ளேன் .
அதை விட ராமானுஜர் பாட சாலை ,
அழகர் ஊர்வலம் , விளக்கு பூஜை பொம்மைகள் சிறப்பாக அமைந்து விட்டது " என்கிறார் .
சங்கீதாவின் கொலுவில் இடம்பெற்றுள்ள மற்ற ஒரு கண்கவர் பொம்மைகள் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் .
எதற்கு கிரிக்கெட் பொம்மைகள் ?.என்று கேட்க , பார்க்க அழகாக இருந்தது வாங்கிவிட்டேன் என்கிறார் கூலாக .
வருடம்தோறும் நவராத்திரி கொலு அலங்கரித்து வைப்பது வீட்டிற்கும் குடும்பத்திற்கும் சிறப்பானது அதை விட இந்த கொலு வைத்து பூஜை செய்தால் எங்க குழந்தைகளின் கல்வி மேம்படும் என்ற சென்டிமென்ட் ஏற்பட்டுள்ளது " என்கிறார் சங்கீதா .
" நான் கொலு வைக்க மிகவும் உறுதுணை என் கணவர் ரவிக்குமார் தான் , எல்லா பொம்மைகளையும் மிக பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைப்பது அவர் தான் கொலு அலங்காரத்திற்கு முழு ஐடியா மற்றும் அலங்கரிக்க உதவுவது அவரே என்கிறார் .
எங்க வீட்டு கொலுவில் நவதானியத்தை ஒரு கூடையில் பயிரிட்டு வைத்துள்ளேன் அது சரியாக விஜய தசமி அன்று முளைத்து அழகாக இருக்கும் பின் கொலு எடுத்தவுடன் ஓடையில் விட்டுவிடுவோம் .
ஊட்டியில் சங்கீதாவின் சென்டிமென்ட் கொலு சூப்பர் .
- ஸ்வேதா அப்புதாஸ் .
Leave a comment
Upload