விகடகவியில் சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை.
காரணம் ஏதும் குறிப்பிடும்படியாக இல்லை. ஆனால் ஏனோ எழுதுவதில்லை.
ஆனால் பொன்னியின் செல்வன் வேறு வகை. கடந்த 4 வாரங்களாக பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கத்தை சொன்ன உமா நேற்று படம் பார்த்து விட்டு வந்ததும் அவரை படத்தைப் பற்றிய கருத்தை வீடியோவில் பேசி அனுப்புவதற்காக காத்திருந்து வலையேற்றுகிறோம்.
பொன்னியின் செல்வன் கல்கியின் வாசகர்களுக்கு ஒரு வாழ்க்கை அனுபவம். வெறுங்கதையல்ல.
அதை எத்தனையோ ஜாம்பவான்கள் முயன்று, எடுக்க வேண்டும் என்று நினைத்து எடுக்காமல் விட்டது ஒரு வகையில் நல்லதாகப் போனது என்று கூட சொல்லலாம்.
இந்த சமயத்தில் இத்தனை தொழிற்நுட்பத்துடன் எடுத்தால் தான் பொ.செல்வனின் பிரம்மாண்டத்தை கொண்டு சேர்க்க முடியும். வெறும் கறுப்பு வெள்ளையில் செட் போட்டு எடுத்திருந்தால் கல்கியே ஏமாற்றமடைந்திருப்பார்.
Leave a comment
Upload