ஊட்டி நீலகிரி லைப்ரரியில் சர்வேதச புகழ் புகைப்பட கலைஞர் ஜெயராமின் இயற்கை அழுகு ஸ்லைடு ஷோ நடை பெற்றது .

இந்த ஸ்லைடு ஷோவை துவக்கி வைத்து ஒன்றரை மணிநேரம் தன் மனைவியுடன் ரசித்து பார்த்து பிரமித்து போனார் மாவட்ட ஆட்சியர் அம்ரீத் .

235 ஸ்லைடு ஷோவை ஒவ்வொன்றாக தான் படம் பிடித்த விஷயங்களை

பிளாஷ் பேக் போல நேரடியாக பார்ப்பது போல விளக்கி கூறினார்.

நீலகிரியின் இயற்கை அழகை தன் பார்வையில் மிக தத்ரூபமாக படம் பிடித்துள்ளார் ஜெயராமன் .அதே போல சிறுத்தை , புலி , யானைகள் மற்றும் அறிய பறவைகள் என்று கலக்கியுள்ளார் இந்த புகைப்பட நிபுணர் .
இவரை மாவட்ட ஆட்சியர் அம்ரித் பாராட்டி கவுரவித்தார் .

ஷோ முடிந்தவுடன் அவரிடம் பேசினோம் .
" நான் சிறுவயதில் இருந்தே படம் எடுப்பதில் கொள்ளை ஆசை தான் .என் அப்பா கிருஷ்ண மூர்த்தி நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு சிறிய பாக்ஸ் கேமரா வாங்கி கொடுத்தார் .

அப்பொழுது வெறும் கருப்பு வெள்ளை படங்கள் தான் அதிலும் 36 ஷாட்ஸ் தான் எடுக்க முடியும் .
ஒருமுறை என் புகைப்படத்திற்கு ஒரு கேமிரா கிபிட் கிடைத்தது .அதில் நிறைய படங்கள் பிடித்துள்ளேன் .
முக்கியமாக இயற்கை மற்றும் அதனுள் வாழும் ஜீவன்கள் தான் என் கேமிராவில் சிக்கும்" என்று கூறும் ஜெயராமன் .

ஒரு முறை முதுமலை காட்டினுள் படம் எடுக்க சென்றபோது ஒரு சிறுத்தை மரத்தின் பின் இருந்து எட்டி பார்த்துள்ளது இவர் அது பாயுமா அல்லது திரும்பி செல்லுமா என்பதை பற்றி கவலை படாமல் அது ஒளிந்து இருந்ததை படம் பிடித்து விட்டு வந்துள்ளார் .

" என் கல்லூரி வாழ்க்கையில் ஏகப்பட்ட படங்கள் அதற்கு பின் பச்சையப்பாஸ் கல்லுரியில் படிக்கும் போது நிறைய வாய்ப்புகள் கணக்கில்லா படங்கள் எடுத்துள்ளேன் .
பல நாடுகளுக்கு சென்று படம் எடுத்த த்ரில்லிங் அனுபவம் என்னுள் இன்னமும் உண்டு .

வட ஷிலோங் , சீனா , அமெரிக்கா , லண்டன் சென்று ஏகப்பட்ட படங்கள் எடுத்திருந்தாலும் ஊட்டி உயிர்சூழல் போல எங்கும் வராது அவ்வளவு அழகான அடர்ந்த காடுகள் அதனுள் ஏராளமான அறிய விலங்குகள் , பறவைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன ." என்று பிரமித்து கூறுகிறார் .

கேரள காடுகளில் தான் சுதந்திரமாக போய் நிதானமாக படம் எடுக்க முடியும் சைலன்ட் வேலி ஒரு அற்புதமான இடம் , அங்கு வாழும் ஜீவராசிகள் உண்மையில் கொடுத்து வைத்த உயிர்கள் அங்கு பல நாட்கள் தங்கி அறிய ஆக்ரோஷமான மிருகங்கள் , கம்பிர யானைகள் என்று படங்களை எடுத்துள்ளேன் .

தமிழக வனத்தினுள் செல்ல வனத்துறை ஏகப்பட்ட கட்டுப்பாடு ..கேரளாவில் என்னை போல கலைஞனுக்கு அற்புதமான வாய்ப்பு மற்றும் வரவேற்பு .நம் மாநிலத்தில் கெடுபிடிகள் தான் அதிகம் , அதனால் நம் வனத்தினுள் அவ்வளவாக நுழைவது இல்லை .என்கிறார் .

அதே போல ஐ ஐ டி முதல் பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று புகை பட விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்து வருகிறேன் அதிலும் கேரள மாணவர்கள் தான் அதிக ஆர்வம் காட்டி பல விஷயங்கள் நுணுக்கங்களை கற்று கொள்கின்றனர் நம் மாணவர்களுக்கு அந்த இன்ட்ரெஸ்ட் இல்லை என்பது என் வருத்தம் ".

உலகளவில் இவரின் புகைப்படங்கள் ரொம்பவே பிரபலம் ..நேஷனல் ஜாக்ராபி போன்ற ஐநூறுக்கும் மேற்பட்ட மிக பெரிய இதழ்களில் என் படங்கள் பிரசுரிக்க பட்டுள்ளன. இவரின் புகைப்படத்திற்கு தொடர்ந்து விருதுகள் குவிந்தவண்ணம் இருப்பது தான் ஆச்சிரியமான ஒன்று .

" மூன்றுலட்சத்திற்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளேன் அனைத்தையும் என்னால் பாதுகாக்க முடியவில்லை . பங்கஸ் பிடித்து போனது ஏராளம் இயற்கையாக போட்டோ ப்ளீடிங் ஆகும் அதுவும் அதன் அழிவுக்கு காரணம் .

தற்போது மூவாயிரம் படங்கள் தான் என் கைவசம் ." என்று கூறும் ஜெயராமன் சாதாரண பாக்ஸ் கேமெரா முதல் கேனான் மற்றும் நிக்கோன் டிஜிட்டல் வரை இவரின் கைவசத்தில்.
கோயம்பத்தூர் வாசியான ஜெயராம் தன் புகைபட திறமையால் உலகம் முழுவதும் சென்று வந்தாலும் நீலகிரி தான் இயற்கை புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம் என்கிறார்.

கோவை பக்கத்தில் இருப்பதாலும் நண்பர்கள் இருப்பதாலும் ஈசியாக இங்கு வந்து விடுவது சகஜம் அதே சமயம் இப்பொழுது செல்போனின் மூலம் அருமையான புகைப்படங்களை எடுத்து தள்ளுகின்றனர் நம் இளசுகள் அப்படி இருந்தாலும் மிக உன்னிப்பாக படம் எடுப்பதற்கு ஏற்றது ஒரிஜினல் கேமராக்கள் தான் என்கிறார் .
கடந்த இருபது வருடமாக இவருடன் பயணித்த சத்தியமூர்த்தி என்ற புகைப்பட கலைஞர் நம்மிடம் கூறும் போது ," ஜெயராம் சாருடன் நீலகிரி முழுவதும் பயணித்து நிறைய டெக்னீக் ஷார்ட்டுகள் எடுப்பதை கற்று கொண்டேன் .

லண்டன் ராயல் போட்டோக்ராபிக் சொசைட்டியில் கௌரவ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது .அவர் வைல்ட் லைப் போட்டோகிராபிக்கில் வருடத்திற்கு ஒரு விருது காட்டாயம் பெற்றுவிடுவார் .அதனால் இப்பொழுது எல்லாம் தன் படங்களை அனுப்புவதை குறைத்து கொண்டுள்ளார் .உலக தரத்திற்கு ஏற்றபடி தான் இவரின் படங்கள் இருக்கும் .1969 முதல் ஏராளமான விருதுகள் குவித்துள்ளார்.

. கர்நாடக வனங்களில் 'ஜங்கிள் ரிசார்டுகளில் ' இவர் 'காபி டபேல்' என்ற புகைப்பட இதழை அறிமுகம் செய்தார் அதில் இவரின் படங்கள் இடம்பெற , ஒரு லேண்ட் ஸ்கெப் படத்திற்கு உலக தர விருது கிடைக்க அங்கு இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு . தமிழகத்தை தவிர கர்நாடக மற்றும் கேரளாவில் இவருக்கு வரவேற்பும் மரியாதையும் அதிகம் .

தன் கேமிரா கண்களால் கண்டு பிடித்த அறிய தவளை மற்றும் சிலந்திக்கு இவரின் பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது .

நீலகிரி வைல்ட் லைப் அசோசியேஷன் தயாரித்த தென் இந்திய பட்டாம்பூச்சிகள் என்ற ஆவணத்தை படம் பிடித்து அனைத்து பணிகளையும் செய்தவர் ஜெயராம் சார் தான் .

ஹவுஸ் கீப்பிங் , பாடி பிட் போன்ற விஷயங்களுக்கு இவர் தான் குரு " என்கிறார் .
74 வயதை கடந்த ஜெயராம் இன்னும் இளமையாக இருப்பதற்கு காரணம் புகை பட கலை என்கிறார் .காடு பள்ளம் என்று நடந்து இயற்கையோடு ஒன்றித்து இருப்பதால் ஐயம் பிட் என்று கூறும் இவர் இன்னும் காதலித்து கொண்டிருப்பது இவரின் கேமராக்களை தான் .

திருமணம் செய்து கொள்ளாததால் தான் புகைப்பட கலையை வெகு தூரம் பயணித்து வளர்க்க முடிந்ததாம் .
"பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வில் வந்து விட்டேன் அதுவும் டென்ஷன் வேலை அதனால் தான் உயர் பதவிக்கு செல்லவில்லை இப்பொழுது நிம்மதியாக இயற்கையை க்ளிக் செய்து கொண்டிருக்கும் இவர் இதுவரை ஒரு மனிதரையும் தன் கேமராக்குள் பூட்டவில்லை ,நானே கூட செல்ஃபீ எடுத்தது இல்லை " என்று ஆச்சரியப்படுத்துகிறார்.

அடுத்த க்ளிக்குக்காக பயணத்தை தொடர்கிறார் இந்த இளம் 74 வயது புகைப்பட கலைஞர் இல்லையில்லை இளைஞர்.

Leave a comment
Upload