தொடர்கள்
ஆன்மீகம்
ஹரிவராஸனம்……..விஸ்வமோஹனம் மனதை மயக்கிடும் சரண கீர்த்தனம்

20221018222405967.jpg

ஸ்வாமி ஐய்யப்பன்

தோ கார்த்திகை (17.11.2022)பிறந்தாயிற்று. மண்டல காலமித வந்நல்லோ. இந்த மாதம் தொடங்கி மார்கழி முடிந்து தை முதல் நாள் மகர ஜோதியாய் சபரிமலையில் தோன்றும் வரை அய்யப்பனை கொண்டாடும் காலம். இந்த காலத்தில் அகில உலக அளவில் இன்றும் அனைத்து பக்தர்களும் விரதமிருந்து தங்களையே ஈடுபடுத்திக் கொள்வர்.

ரிவராசனம் என்று தொடங்கும் பாடல் என்றாலே அய்யப்பன் தான் நினைவுக்கு வருவான். இந்த காலங்களில் சாஸ்தா ப்ரீதி பூஜைகள் மற்றும் பஜனைகளில் இந்த பாடல் கண்டிப்பாக பாடப்படும். அதன் முக்கிய காரணம் இந்த பாடல் 1975ல் வெளிவந்த சுவாமி அய்யப்பன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. மேலும், நமது கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் அனைவரையும் வசீகரிக்கும் காந்த குரலின் மூலம் இந்த பாடல் ஒலித்து பிரபலமானது தான். இந்த பாடலை ஹம் பண்ணாதவர்களே இல்லை எனலாம். இன்றும் சபரிமலை சன்னிதியில் நடை அடைக்கும் தருணத்தில் ஒலிக்கப்படுகிறது. இவரது குரலில் ஒலிக்கும் இந்த பாடல் தான் இன்றும் தினமும் நடைசார்த்துகையில் பாடப்பெறுவது, தனது வாழ்நாளின் மிகப்பெரும் அரிய பாக்கியம் என்று ஒவ்வொரு மேடையிலும் நெஞ்சு நெகிழ சிரந்தாழ்த்தி பெருமையுடன் கூறுவார் கே.ஜே. ஜேசுதாஸ்.

ந்த பாடலின் வரலாறு குறித்து சாஸ்த்தா அய்யப்பன் மீது கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சியில் இருப்பவர், இந்த இருபதாம் நூற்றாண்டில் புராண நூலாக ஸ்ரீ மஹாசாஸ்த்தா விஜயம் என்ற சாஸ்த்தாவின் மீதான முழுமையானதோர் புராணத்தை இயற்றிய பெருமைக்குரியவர், அதனால் சாஸ்த்தா அரவிந்த் என்று அடைமொழியால் விளிக்கப்படும் திரு வி. அரவிந்த் சுப்ரமணியத்திடம் கேட்டேன்.

20221018221838209.jpg

இது குறித்து அவரே கூறியது பின்வருமாறு:

ந்த சமஸ்கிருத பாடல் அஷ்டகம், அதாவது எட்டு சரணங்களைக் கொண்டது. திருநெல்வேலியிலுள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கம்பங்குடி வம்ஸாவளியினரான குளத்து ஐய்யரால் எழுதப்பட்டது.

வர் சாஸ்த்தாவைப் பற்றிய அபூர்வ நூல்களை எழுதியுள்ளார். சாஸ்த்ரு சதகம் என்ற 100 ஸ்லோகங்கள் கொண்ட இரண்டு நூல்களை எழுதியுள்ளார். அஷ்டகம் விம்ஸதி போன்ற நூல்களையும் பகவான் ஸாஸ்த்தாவின் மேல் நிறைய ஸ்லோகங்களை எழுதியுள்ளார்.

கவானின் உத்தரவின் பேரில் ஹரிஹராத்மஜ தேவாஷ்டகம் என்ற இந்த ஸ்லோகம் எட்டு ஸ்லோகங்களை எழுதியுள்ளார். இது ஹரிவராஸனம் என்பது சபரிமலையில் விஸேஷமாக யோகநிலையில் உள்ள பகவான் சபரிநாதனைக் குறித்து ஆரம்பித்து சொல்லுவதாக அமைந்திருப்பது இந்த அஷ்டகத்தின் சிறப்பு.

தில் ஸரணம் ஐய்யப்பா ஸ்வாமி ஸரணம் ஐய்யப்பா என்ற வார்த்தைகள் பிறகு சேர்க்கப்பட்டதுதான்.

தை ஒரிஜனலாக எழுதி தர்ம ஸாஸ்த்தா ஸ்துதி கதம்பம் என்ற நூலில் முதன் முதலாய் பிரசுரித்திருக்கிறார்.
அதற்கு பின்தான் வெளியில் தெரிய வருகிறது.

தற்குப் பிறகுதான் அந்த ஸ்துதியை சபரிமலையில் மேனோன் என்ற ஐய்யப்ப பக்தர் பாட ஆரம்பிக்கிறார். மேனோன் காலத்திற்கு பிறகு இந்த பாடலை மேல்ஷாந்திகள் பாட ஆரம்பித்தனர். அதற்குப்பின் இதை நடை அடைக்கையில் பாடும் வழக்கம் வந்தது.

ற்றபடி இந்த பாட்டை சாமியை தூங்கச்செய்யும் பாட்டோ அல்லது உறக்க வைக்கும் பாட்டு என்று சொல்வது தப்பு. அந்த எட்டு பத்திகளில் எந்த இடத்திலும் தூங்கு என்று சொல்லவில்லை. ஆஸ்ரயிச்சி வரேன், அதாவது உன்னை அண்டி சரணடைய வருகிறேன் என்றுதான் சொல்லியிருக்கு.

முன்பே சொன்னது போலே இதில் வரும் ஸரணம் ஐய்யப்பா ஸ்வாமி ஸரணம் ஐய்யப்பா என்ற வார்த்தைகள் பிறகு சேர்க்கப்பட்டதுதான். சினிமாவில் கே.ஜே. ஜேசுதாஸ் ட்யூன் போடும்போது வந்ததுதான். இன்றும் மேல்ஷாந்தி இந்த பாடலை ஸ்லோகமாகத்தான் சொல்லுவார்கள்.

மீபத்தில் சபரிமலையில் வெளிச்சப்பாடாயிருந்த அம்பலப்புழா அனந்தக்ருஷ்ணய்யரின் மகள் கொன்னத்து ஜானகியம்மா தான் இந்த பாடலை எழுதியவர் என்று லேட்டஸ்ட்டாக உரிமைக்கோரும் செய்தி வருகிறது.

னால் இந்த பாடலை குளத்து ஐய்யர் அவர்கள் இதை புத்தகமாகவே ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறார் என்பதாலேயும், இது போன்ற பலப்பல ஸ்லோகங்களையும் ஸ்துதி நூல்களையும் எழுதியிருப்பதாலேயும், சமஸ்கிருத மொழி ஞானம் இருந்திருப்பவராயிருப்பதாலேயும் இவர்தான் இந்த பாடலின் கர்த்தா என்பது எனது அபிப்பிராயம்.

மேலும் அவரே,"சபரிமலையைப் பொருத்தவரை இவ்விருவரின் உரிமைக் கோரல் இருக்கிறதாலும் இது தெய்வப் ப்ரேரணையில் உண்டான ஒரு விஷயம் என்பதால் இந்த பாடலின் கர்த்தா இவர்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது”, என்று முடிக்கிறார்.

து குறித்து கரந்தையர் பாளையம் வம்ஸத்தில் பெண் வழி வந்த, கல்கட்டாவில் தற்போது வசித்து வரும் எழ்பத்தைந்து வயதாகும் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களை அணுகி பேசுகையில் கிடைத்த விவரங்களும் மேற்கூறிய விவரங்களோடு ஒத்துப் போகின்றன.

20221018221922896.jpg

அவர் கூறியது இதோ கீழே;

ரிஹராத்மஜாஷ்டகம் என்னும் சமஸ்கிருத கீர்த்தனம் ஹரிவராஸனம் என்று தொடங்குவதால் இந்த கீர்த்தனம் ஹரிவராசனம் என்றே அறியப்படுகிறது. இந்த கீர்த்தனம் சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் குளத்து அய்யரால் எழுதப்பட்டது என்று அறிய முடிகிறது. குளத்து அய்யர் பகவானைக் கண்டு மனமுருகி கீர்த்தனம் பாட நினைத்த போது அந்த க்ஷணத்திலேயே பகவானே இந்த ஹரிவராஸனம் என்ற முதல் வார்த்தையை எடுத்து கொடுத்ததாக எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ந்த கீர்த்தனம் மிகவும் கருத்தாழம் கொண்டதாகவும் உள்ளத்தை உருக்குவதாக உள்ளதாலும் பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது.

ந்த கீர்த்தனம் 1928ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீதர்மசாஸ்த்தா ஸ்துதி கதம்பம் என்ற மலையாள மொழியில் வந்த நூலில் வெளியிடப்பட்டது. திருவனந்தபுரத்தில் அச்சடிக்கப்பட இந்நூல் பகவான் சாஸ்தா மீது பாடப்பட்ட மிக பழைய மணி தாஸரின் பாடல்களையும் கொண்டுள்ளது இந்த மணி தாஸரும் கம்பங்குடி வம்ஸத்தில் வந்தவரே.

1950 ஆம் வருடத்தில் இந்த ஸ்ரீகோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட எரிந்து சிதைந்து போன கோவிலை மறுபடியும் புனரமைத்து குடமுழ்குக்காட்டி புதிய அய்யப்ப விக்ரஹம் பிரதிஷ்டை ஆன போது கோவில் மேல் ஷாந்தியாக இருந்தவர் ஸ்ரீஈஸ்வரன் நம்பூதிரி அவர்கள் சொல்லியதாவது, சபரி மலையில் இரவு அத்தாழ பூஜை முடிந்து பகவான் அய்யப்பனை உறக்கச் செய்கையில் கற்பூர தீபம் காட்டி இந்த பாடலை பாடி நடையடைப்பதை வழக்கத்தில் கொண்டுவந்தவன் நான் இந்த பாடலை துதி பாடலாக நானும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து பாடி தொடங்கி வைத்தோம்.

ந்த பாடல் வழக்கத்திற்கு வருமுன் சவரி மலையில் மேல்ஷாந்தியாக இருந்த செங்கன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் இசைத்து நடை சாத்துவது நடப்பில் இருந்ததாம்.

(சூரியநாராயணன் குரலில்)

ஸ்வாமியே ஸரணம் ஐய்யப்பா.