தொடர்கள்
கவிதை
மேகமூட்டம்..ஒரு பாடம்...!! கோவை பாலா

20221019064105382.jpeg

மேகமூட்டம்...

பட்டபகலில் கண்ணெதிரே

தாகம் தீர தண்ணீரை

கொள்ளையிட்டு குடித்து,

கூட்டம்கூடி குதூகலமாய்

வானில் போடும் மாநாடு...!

சூரியனைப் போர்த்தி

சோம்பேறி யாக்கி,

மங்கும் இருள் ஒளியில்

எழுப்புகிறது என்னை,

விடிந்துவிட்டது என்று...!

சூரியன் எழவில்லை...

கத்தும் ஓசையால்

சிட்டுக்குருவி கொண்டு

தட்டி எழுப்புகிறது என்னை,

விடிந்து விட்டது என்று...!

போகும் பாதையெங்கும்

ஓடும் சாலைகளுடன்

கார்குடையாய் கூட வந்து

வான் சொல்லும் என்னை,

தொலைதூரம் போ என்று..‌.!

சூரியனின் கதிர்கள்

வெப்பமாக்கும் பூமியை...!

உயரும் உயரத்தில்

குளிரவைக்கும் காற்றை...!

குளிர்ந்த பின் திரளும்

நீர் ஆவியின் குவிப்பை...!

உலகிற்கு சொல்லிவிடும்

உன்னதமான கருத்தை...!

சுட்டெரிக்கும் சூரியனாய்

உனைச் சுற்றி பலரிருந்தும்,

வளிமண்டல காற்று போல்

வாழ்வினில் உயர்ந்து விடு...!

குளிர்ந்த காற்றாகி

வெப்பநிலை மாற்றிவிடு...!

வெறுப்பெனும் வெப்பமதை

அன்பு மழையால் தணித்திடு ...!

பாலா

கோவை