கடந்த ஆண்டு விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைகோள் தயாரித்தலில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன.
முதல் கட்டமாக, ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட்’ எனும் தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்கைரூட் என்ற தனியார் நிறுவனத்தின் ‘விக்ரம்-எஸ்’ என்ற முதல் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா மற்றும் பாஸும்க் ஆர்மீனியா ஆகிய 3 பே-லோடுகளை சுமந்து செல்கிறது. இப்பணிக்கு ‘பிராம்ப்’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இது, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட்.
சுமார் 83 கிலோ எடையை தூக்கி செல்லும் ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்டில், இந்தியாவின் 2 செயற்கைகோள்கள், வெளிநாட்டின் ஒரு செயற்கைகோள் என 3 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. மேலும், இந்த ராக்கெட் 545 கிலோ எடை, 6 மீட்டர் உயரம், 0.375 மீட்டர் விட்டம் கொண்டது. இந்த ராக்கெட் 7 டன் உந்துசக்தியை உடையது.
இந்த ராக்கெட்டுக்கு, இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்-எஸ்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த செயற்கைகோள் புவி மேற்பரப்பில் இருந்து 120 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
இனி ராக்கெட்னா வெறும் சிவகாசி சமாச்சாரமில்லை. வீட்டுக்கு ஒரு ராக்கெட் விடும் காலம் வந்தாலும் வருமுங்கோ.!!
Leave a comment
Upload