தொடர்கள்
அரசியல்
மிஸ்டர் ரீல்

20221019130156505.jpg

எடப்பாடியை பார்க்க வேண்டும் என்று மிஸ்டர் ரீல் தீர்மானம் செய்து பசுமை வழி சாலையில் ஓ பி எஸ் வீடு வழியாக எடப்பாடி வீட்டுக்கு வந்தார். "ஓ பி எஸ் வீட்டு வாசலில் ஒரே கூட்டம் என்று ஆரம்பித்த போது எடப்பாடி" ஆமாம் நிறைய போலீஸ் கூட்டம் பாதுகாப்புக்கு போட்டு இருக்காங்க" என்றார் சரி அதை விடுங்க அமித்ஷாவை நான் எதுக்கு பாக்கணும் என்று அவ்வளவு தைரியமா கேட்டு இருக்கீங்க "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு எடப்பாடி "அவர் ஏதோ தனியார் நிகழ்ச்சிக்கு வந்தார். அதுவும் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இந்தியா சிமெண்ட் சீனிவாசன் திமுக அனுதாபி கிரிக்கெட் சங்க உறுப்பினர் அமித்ஷா பையன் கிரிக்கெட் சங்க தலைவர் இப்ப புரிஞ்சுதா இதுல இருக்குற அரசியல் நான் தெளிவா தான் இருக்கேன் "என்று எடப்பாடி சொல்ல ஆனா ஓபிஎஸ் அந்த நிகழ்ச்சிக்கு போனாரு "என்று மிஸ்டர் ரீல் சொல்ல அவர் போய் தான் ஆகணும் அவரும் திமுக அனுதாபி ஆச்சே" என்றார் எடப்பாடி.

எங்களை பொறுத்தவரை திமுக தீய சக்தி என்பதில் எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றார் எடப்பாடி உடனே மிஸ்டர் ரீல் டிடிவி தினகரன் வேண்டாம் சசிகலா வேண்டாம் ஓபிஎஸ் வேண்டாம் ஏண்டி இப்படி சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிப்பது சரியா அமித்ஷா பாவம் நீங்க ஒற்றுமையா இருக்கணும்னு ரொம்ப கஷ்டப்படுறாரு என்று மிஸ்டர் ரீல் சொல்ல குஜராத்துல 35 பேருக்கு சீட் இல்லைன்னு சொல்லிட்டாங்க அவங்களையெல்லாம் முதல்ல சமாதானம் பண்ண சொல்லுங்க போட்டி வேட்பாளரா நின்னுடார்ச்சர் தராங்க அமித்ஷாவால அவங்கள ஒன்னும் பண்ண முடியல என்று எடப்பாடி சொல்லி எனக்கு ஆல் இந்தியா நியூஸ்ம் தெரியும் என்பது போல் அவரது பேச்சு இருந்தது ஓ அந்த தைரியத்தில் தான் நீங்க வந்து நான் எதுக்கு அமித்ஷாவை பாக்கணும்னு கேட்டீங்களா என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு எடப்பாடி யார் யாருக்கு எத்தனை சதவீதம் ஓட்டு கிடைக்கும் என்ற ஃபைல் என்கிட்ட இருக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். அன்னைக்கு சேலம் போவதற்காக சென்னை விமான நிலையம் போனப்போ ஒரு பையன் ஓடி வந்து அங்கிள் உங்க ஆல் பாஸ் திட்டத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண பையன் நானு இல்லன்னா சான்சே இல்ல இப்ப டொனேஷன் கொடுத்து காலேஜும் சேர்ந்துட்டேன்.

இரண்டாவது வருஷம் படிக்கிறேன் என் ஓட்டு உங்களுக்கு தான் என் அப்பத்தா ஓட்டு எங்க அம்மா ஒட்டு எங்க அப்பா ஓட்டு எங்க அக்கா ஓட்டு எல்லாம் உங்களுக்கு தான் நீங்க தான் என் குல சாமி என்று காலில் விழுந்தான் என்று எடப்பாடி சொல்ல உடனே மிஸ்டர் ரில் ஏதோ சொல்ல வர அந்த தைரியத்தில் தான் அமித்ஷாவ நான் எதுக்கு பாக்கணும்னு கேட்டீங்களான்னு மறுபடியும் கேட்காதீங்க அமித்ஷா கதையே வேறு அவரை எப்ப பாக்கணும் எங்க பாக்கணும்னு எனக்கு தெரியும் எப்ப பேசினா என் பேச்சுக்கே அவர் தலையாட்டுவார் என்ற சூழ்ச்சமமும் எனக்கு தெரியும் என்று விலாவாரியாக எடப்பாடி சொல்ல

அப்போது இந்த தைரியம் உங்களுக்கு எப்படி தான் வந்தது என்று மீண்டும் மிஸ்டர் ரீல் கேட்க இது செங்கோட்டையன் தந்த தைரியம் அமித்ஷா பூச்சாண்டி எல்லாம் பயப்படாதீங்க என்று சொல்லி எனக்கு திருநீறிட்டு விட்டார். அது தான் என்று எடப்பாடி சொல்ல அப்போது மிஸ்டர் எனக்கென்னவோ இது தப்பாவேப்படுகிறது. செங்கோட்டையன் உங்கள விட சீனியர் அவருக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவியை நீங்க தவழ்ந்து போய் வாங்கிட்டீங்க அவர் உங்களை எங்கேயோ போட்டு விடுற மாதிரி தெரியுது என்று மிஸ்டர் ரீல் பயமுறுத்த உடனே எடப்பாடி அப்படியும் இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தார்.

நீங்கள் தினகரனை வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள் அவர் ஒரு முக்கியமான ஒரு பாயிண்ட்ட சொல்றாரு அண்ணாமலை அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொல்கிறார். எடப்பாடி தலைமையில் என்று சொல்லவில்லை அண்ணாமலை 20 முதல் 25 எம்பிக்களை நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்று சொல்கிறார். கூட்டி கழிச்சு பார்த்தா உங்களுக்கு தசை சரியா இல்லை போல இருக்கு ஏதாவது பரிகாரம் பண்ணிக்கோங்க என்று மிஸ்டர் ரீல் சொல்ல

அதற்கு எடப்பாடி எந்த தசை சரியா இல்லை என்று தெரியவில்லையே என்று அப்பாவியா கேட்க உங்களுக்கு எந்த தசையும் சரியா இல்லை அமித்ஷா தைலம் வாங்கி தடவிக்கோங்க சரியாகும் என்று மிஸ்டர் ரீல் சொல்ல

அது எங்கே கிடைக்கும் என்று எடப்பாடி கேட்க மோடிகிட்ட கிடைக்கும் அண்ணாமலை கொஞ்சம் ஸ்டாக் வச்சிருப்பார் கேட்டுப்பாருங்கள் என்று மிஸ்டர் ரீல் சொல்ல

அப்போது மீண்டும் மிஸ்டர் ரீல் அண்ணாமலை 20 முதல் 25 எம்பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவும் சொல்லி இருக்கார் என்று மீண்டும் நினைவு படுத்த அதற்கு எடப்பாடி அவர் சொன்னா சரியா தான் இருக்கும் தேர்தல் கமிஷன் அவங்களுக்கு சொந்தம் ஓட்டு மெஷின் ஓனர் அவங்க தான் அதனால ஏதாவது பண்ணுவாங்க அண்ணாமலை ஏற்கனவே அதிமுக தலைமை தான் கூட்டணி சொல்லிட்டாரு அந்த கோக்குமாக்கு வேலையை கூட்டணி கட்சிக்கு செய்வார் அதுதானே கூட்டணி தர்மம் தேர்தல் சமயத்துல நாங்க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு என்று ஐக்கியம் ஆயிடுவோம் என்று குஷியாக சொல்ல திமுக அமைச்சர் துரைமுருகன் பிஜேபியை பிசாசு என்று வர்ணித்தது உண்மைதானோ என்னவோ என்று யோசித்தபடியே எழுந்தார் மிஸ்டர் ரீல்.