தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா லைட் பாய்

அரசியல்வாதி வேடத்தில் பிரியாமணி

20221019075837504.jpg

முதல் முறையாக தெலுங்கு படத்தை இயக்குகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் நாயகன் நாக சைதன்யா இந்தப் படத்தில் பிரியாமணி அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார் இடைவேளைக்குப் பிறகு முதல்வராக வேறு ஆகிவிடுகிறார் பிரியாமணி இந்த படம் தமிழிலும் டப்செய்யப்படுகிறது.

பேய் வேடத்தில் சன்னி லியோன்

20221019075949304.jpg

சிந்தனைப் படத்தின் இயக்குனராக மாறிய டான்ஸ் மாஸ்டர் ஆர் யுவன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மகாராணியாகவும் பேயாகவும் மாறும் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் சன்னி லியோன் மனித நேயம் மிக்கவர். பெரிய நடிகை என்று அவரிடம் பேச நான் தயங்கினேன் ஆனால் அவரே என்னிடம் வலிய வந்து பேசினார் என்று சன்னி லியோன் புகழ் பாடுகிறார் நடிகர் சதீஷ்.

நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசு

2022101908020801.jpg

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் அனுபவம் கேர் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் இயக்கம் அஸ்வின் சரவணன் இவர் மாயா கேம் ஓவர் ஆகிய படத்தை இயக்கியவர். நயன்தாராவின் பிறந்தநாள் அன்று கனெக்ட் படத்தின் டீசர் வெளியானது. நயன்தாரா பிறந்தநாளை ஒட்டி விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் லவ் யூ தங்கமே என்று ஆரம்பித்து தனது உணர்ச்சிகளை அதில் கொட்டி தீர்த்து பதிவு செய்திருக்கிறார்.

ஜான்வி கபூர்

20221019080642174.jpg

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் சுற்றிப் பார்த்து வீடியோ எடுத்து யூட்யூபில் பதிவு செய்திருக்கிறார். ஜான்வி கபூர் இப்போது பாலிவுட்டில் ரொம்ப பிசி இருந்தாலும் ஸ்ரீதேவி நடிகை ஆன பிறகு வாங்கிய முதல் வீட்டை சுற்றிப் பார்த்து இது அம்மா வாங்கிய முதல் வீடு என்று பெருமையாக பதிவிட்டு இருக்கிறார் ஜான்வி கபூர்.

ரஞ்சிதமே ரஞ்சிதமே

20221019080728761.jpg

வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 10 நாட்களில் 5 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது. ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி ஆகியோர் பாடி இருக்கிறார்கள் பாடலை எழுதியது விவேக்.