தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20221025165053114.jpeg

அனைத்து விஷயங்களிலும் திமுகவுக்கு ஆதரவாக கருத்து கூற முடியாது கே.எஸ்.அழகிரி.

ஆமா அப்ப அப்ப இப்படி சில சமயம் தைரியமா கருத்து சொல்லுவோம் நாங்க அதை கண்டுக்க கூடாது.

பாராளுமன்றத் தேர்தல் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கட்டளை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

கூட்டணி கட்சி தொகுதிகளுக்கும் நாம் தான் உழைக்க வேண்டும் அவங்களுக்கும் நம்மளை விட்டு வேற யார் இருக்காங்க அப்படித்தானே தலைவரே

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது அனைத்து துறையிலும் முறைகேடுகள் நடந்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி.

எங்கேயோ கேட்ட குரல்

சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொள்ள உள்ளேன் உதயநிதி ஸ்டாலின்

மந்திரியாகப்போறாராம் அதைத்தான் இப்படி சொல்றாரு

கட்சியே குப்பையாக கிடைக்கிறது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜாக்கிரதை அமைச்சரே துடைப்பத்துடன் ஆம் ஆத்மி உள்ளே நுழைந்திடும்

காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மையினருக்கு சீட்டு ஒதுக்குவதில்லை கார்த்திக் சிதம்பரம்

ஆமா ஆமா குடும்பத்துக்கு ஒதுக்கவே சரியா இருக்குது

அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றடைய வேண்டும் முதல்வர் ஸ்டாலின்

இப்ப நீங்க சொன்ன இடத்துக்கு டாஸ்மாக் தான் போய் இருக்கு

தமிழகத்தின் அனைத்து பழைய தொகுப்பு வீடுகளையும் முறையாக ஆய்வு செய்து திமுக சீரமைக்கு தர வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா வலியுறுத்தல்

காமெடி

பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.14 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

அச்சச்சோ இது திராவிட மாடல் சாதனை இல்லையா

கடலூர் மக்களிடம் நிலம் கேட்க முயற்சித்தால் என்எல்சியை வெளியேற்ற போராட்டம் நடத்துவோம் அன்புமணி ராமதாஸ்

நீங்க எப்பவும் மாமுலா பண்றது தானே தலைவரே இது

பொம்மை முதல்வர் வேண்டுமா படித்த முதல்வர் வேண்டுமா கேஜ்ரிவால்

நிதானமா தள்ளாடாம ஸ்டெடியா நிக்கிற முதல்வர் தேவை ஆனா அது உங்களால முடியாது ஆபிசர்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ஏற்க தயார் -கார்த்தி சிதம்பரம்

நீங்க தயார் ஆனா உங்கள நம்பி தர அவங்க தயார் இல்லையே தலைவரே