தொடர்கள்
விருது
தொலைபேசியில் ஆர் கே லக்ஷ்மண்- பால்கி(மீள் பதிவு 38 வருடங்களுக்குப் பின்)

20230101180503826.jpg

20230031194239355.jpg

2023003119432969.jpg

ஆர் கே லக்ஷ்மண் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய நைய்யாண்டிகலந்த கார்டூன் தான். டைம்ஸ் ஆஃப் இண்டியா தினசரியைப் படிப்பவர்கள் நிச்சயம் அதன் முதல் பக்கத்தில் வெளியாகும் You Said It கார்டூன்களைரசிக்காமல் இருக்க மாட்டார்கள். அவரது கார்டூனில் பொருளாதார சமூக முக்கியமாக அரசியல் ரீதியான நகைச்சுவையும் கிண்டலும் அதே சமயம் நறுக்கு கலந்து சொல்ல வந்த பொருளினை உணர்த்தும் வகையில் அமையும் சித்திரங்களும் மிகவும் ரசிக்கத்தக்கவை.

வருடைய வொவ்வொரு கார்டூனிலும் இடம் பெறும் ஒட்டுப்போட்ட கோட்டுடன் பஞ்ச கச்ச வேட்டி கட்டிக் கொண்டு எக்கச்சக்கமான பொறுமையுடன் அமைதியாக, ஏதுமே பேசாமல் ஒரு மூலையில் நிற்கும் மிஸ்டர் பொது ஜனம் நம் கவனத்தை நிச்சயம் கவருவார்.

ர் கே லக்ஷ்மணனுக்கு 1984 ஆம் ஆண்டுக்கான மேக்ஸேஸே விருது கிடைத்துள்ளதைக் குறித்துப் பத்திரிகை உலகமே மகிழ்ச்சியடைகிறது!

1957 ஆம் ஆண்டு விமான விபத்தில் மரணமடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் நினைவாக உருவாக்கப்பட்ட இருபதாயிரம் டாலர் மதிப்புள்ள அவார்ட் இது.

ப்பரிசை பெறும் முதல் கார்டூனிஸ்ட் என்ற தனி இடத்தைப் பெறும் இவருக்கு வயது ஐம்பத்தெட்டாகிறது. இது வரை You Said It என்ற கார்டூன் தொகுப்புகளடங்கிய ஏழு பாகங்கள், ஒரு நாவல்,சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் பயணக்கட்டுரைகள் – இவரது மற்ற சாதனைகள்.

விகடன் சார்பில் அவரை பேட்டி காண நேரில் செல்ல விரும்பி போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதில், அவருக்கு ஒரு செகரட்டரி இல்லாதது தெரிந்தது.

ஆர் கே லக்ஷ்மண் ஸ்பீக்கிங்க் என்று நேரடியாக மறுமுனையில் தொடர்பு ஆரம்பமாக , விகடன் மாணவ நிருபர் என்று எனை அறிமுகப்படுத்திக்கொண்டு, விகடன் சார்பிலும் விகடன் வாசகர்கள் சார்பிலும் நான் குதூகலத்துடன் அளித்த வாழ்த்துக்களை நன்றியுடன் ஏற்டறுக்கொண்டார்.

வீட்டில் வந்து பேட்டி காண நேரம் தரும்படி கேட்க,” ஏன் சார்! இப்ப போன் நல்லா வொர்க் பண்ணுதே! இப்பவே இப்படியே இந்த போன்லியே பேட்டியை வெச்சுண்டா என்ன? என்றார் சிரித்துக்கொண்டார்.

போன்லியே எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க அவர் ஒப்புக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்த்து. பேட்டி பெரும்பாலும் தமிழிலயே நடந்தது.

ந்த அவார்ட் கிடைச்சதும் நீங்க என்ன ஃபீல் பண்ணினீங்க?”

ன்ன…ம்.. ஒரு ப்ளஸண்ட் சர்ப்ரைஸா மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியா இருந்தது. உண்மையிலே இதை பத்தி நினைச்சிக் கூட பார்க்கலே.

ன்னிக்கி (3-8-84)ஸாயந்திரம் ஐந்தே கால் மணியிருக்கும். எனக்கு ஒரு கேபிள் வந்தது. ‘என்ன இருக்கப்போகிறது? மற்ற பத்திரிகைக்காரங்க யாராவது இத்தனாந்தேதிக்குள்ள உங்க கார்டூன் வேணும்’ னுட்டு கேட்டிருப்பாங்க.(அவர் அலஹாபாத், லக்னோ, பம்பாய், பங்களூர், டெல்லி போன்ற நகரங்களிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகளுக்கும் கார்டூன் வரைகிறார்) என்று எண்ணி மெதுவாகப் பிரித்துப் பார்த்தேன்.

ணிலாவிலிருந்து ‘கேபிள்’ என்றதும் முதலில் ஒரு மாதிரி எரிச்சலாகத்தான் இருந்த்தது. ஒரு வேளை UNICEF-க்கு ஏதாவது கார்டூன் வரைந்து தரச் சொல்லி கேபிள் வந்திருக்கோன்னுட்டு கூட நினைச்சேன்.

பிரித்து படிக்க ஆரம்பிச்சேன்.

o2 BRR-னுட்டு என்னென்னவோ நம்பரும் ஆல்பபெட்ஸுமா… அப்புறம் 2C2C-ன்னுரெண்டு தரம் போட்டிருந்த்தது..

ம்…PMM PP 733 ..ன்னு இருக்கு. (டெலிபோனில் படித்துக் காட்டுகிறார்) இது மணிலாவோட கோடோ என்னமோ?”

மேலும் தொடர்கிறார்:

“ரேமோன் மேக்ஸேஸே அவார்டின் போர்ட் ஆஃப் ட்ரஸ்டீஸ் ‘1984-ம் வருஷத்துக்கு ஜர்னலிஸம், இலக்கியம் மற்றும் ஆக்கபூர்வமான தொடர்புக்கலை என்ற துறைகளுக்கான இப்பரிசுக்கு உங்களைத் தேர்ந்தெடுக்கிறது.

ந்தியாவின் அரசியல் சமூக பிரச்சினைகளை மைய்யமாகக் கொண்டு கூரிய நைய்யாண்டித்தனமான அதே சமயம் வெறுப்பில்லாதபடி வரையப்பட்ட உங்களுடைய கார்டூன்களுக்காக இப்பரிசு வழங்கப்படுகிறது’ ன்னு இருந்தது. அப்புறம்’ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு முன்னர் மணிலா வருவதற்கு அயத்தமாயிருங்கள். உங்கள் ஒப்புதலை உடனே எங்களுக்குட் தெரிவியுங்கள். கூடவே உங்கள் பெயரை முழுமையாக எழுதினால் சர்டிபிகேட்டில் எழுத வசதியாயிருக்கும். இது பற்றிய முழு விவரம் அடங்கிய கடிதம் பின்னால் வருகிறது’ என்று எழுதியிருந்தாங்க”.

ங்களுக்கு இந்த துறையில் வருவதற்கு உதவியவர் யார்?”

ப்படியென்று யாருமில்லை. சின்ன வயசிலேருந்தே எனக்கு டிராயிங்கில் ஆர்வம் அதிகம். எங்கம்மா இதில் ஊக்கம் கொடுத்தாங்க. நான் கடைசி பிள்ளை. எங்க வீட்டில் எல்லோரும் பி.ஏ. பாஸ் பண்ணினவங்க. அதனால் நீ பெயிலாகாம எப்படியாவது பாஸ் செய்யணும்’னு அம்ம பிடிவாதமாயிருந்தாங்க. அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய துறைகளில் பி.ஏ. பட்டம் பெற்றேன். படிக்கறச்சேயே freelancer ஆக இருந்தேன்”.

டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் எத்தனை வருஷமாய் பணி புரிகிறீர்கள்?”

முப்பத்தேழு வருஷமாய். இதற்கு முன்னால் ஃப்ரீ ப்ரஸ் ஜர்னலில் இருந்தேன்.

ங்க கார்டூனிஸ்ட் வாழ்க்கையில் நீங்கள் வரைந்த சிரந்த கார்டூன் எது எண்டு சொல்ல முடியுமா?”

(சிரித்துக்கொண்டே) இது வரை அதை வரையவில்லை. I am yet to draw it”

கார்டூன் வரைய எந்த நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?”

கல் பொழுதுதான் எனக்கு நல்ல நேரம். ஆனா, அதே சமயம் தேவையானால் இரவில் கூட வரைவேன். மத்தவங்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள்ளே வரையணும். கிடைச்ச நேரங்களில் வரிவேன்…”

மூட் உள்ள நேரம்னுட்டு ஏதாவது…..”

ப்படியெல்லம் ஒண்ணுமில்லை. ஐடியாஸ் ஸ்பான்டேனியஸ்ஸா வர்ரச்ச நேரமோ மூடோ என்னை பாதிக்கறதில்லே…”

ங்களுக்கு கிடைத்த மற்ற அவார்டுகள் பற்றி….”

முதலில் ஹார்னிமன் அவார்ட், ஜையன்ட் இன்டர்னேஷனல், துர்கா ரத்னா, ஜூனியர் ஜேஸீஸ் அவார்ட், அப்புறம் 1973ல் பத்ம பூஷன் பட்டம், மராத்வாடா பல்கலைக் கழகம் கொடுத்த டாக்டர் பட்டம்(Doctorate in Litterature), இச்சல்கரஞ்சி FIEE அவார்ட் – அதாவது, கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படுவது – அது போன வருஷம் கிடைச்சது.”

மூக அரசியல் விஷயங்களைப் பொது மக்களுக்கு விரைவில் எடுத்துச் சொல்ல கார்டூன் சிறந்த சாதனமென நினைக்கிறீர்களா?”

தில் சந்தேகமேயில்லை. நிச்சயமாய் அது ‘effective messenger’ தான். முன்பெல்லம் மக்கள் ரேடியோவில் கேட்டேன் என்று சொல்வார்கள். டீ வீ வந்ததுக்கப்புறம் ‘ரேடியோவில் கேட்டேன்’ ங்கிற வழக்கம் குறைந்து, ‘டீ வீயில் பார்த்தேன்’ என்று சொல்லத் தொடங்கினார்கள். அந்தப் பழக்கமும் விரைவில் மறைந்து விடலாம். கொஞ்ச நாளுக்குப் பின்னால கண் பார்ப்பது எதுவோ அதைத்தான் நம்ப ஆரம்பிப்பார்கள். அப்ப கார்டூன்கள் தான் நமக்கெல்லாம் துணையாய் வரும். அது தான் ரொம்பவும் ப்ராக்டிகலாக இருக்கும்…”

ங்க பொழுது போக்கு பற்றி…?”

வாட்ச் ரிப்பேரிங்க், பெயிண்டிங்க், ப்ள்ம்பிங்க்…. ஆமா.. வீட்ல குழாய் ரிப்பேர்னா நானே செய்திடுவேன்.”

பொதுவா, கார்டூனிஸ்ட்கள் பற்றி…..”

ண்மையா சொல்லப்போனா நம்ம தெற்கே இருந்து தான் கார்டூனிஸ்டுகள் ரொம்ப பேர் வராங்க. உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ? முதல்ல ஆனந்த விகடன் தான் கார்டூன் போட ஆரம்பிச்சது….”

கிருஷ்: “இன்னொரு தடவை உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள். பேட்டிக்கு நன்றி!”

க்ஷ்: “ஓகே! ரொம்ப தாங்க்ஸ்!”

துணுக்ஸ்:

  • மைசூர் ம்ஹாராஜா காலேஜில் படித்த லக்ஷ்மணனுக்கு கன்னடம் மற்றும் தமிழ் நன்கு தெரியும்.
  • நாங்கள் பேசிக்கொண்டேயிருக்கும் போது இடையில் போன் கட்டாகி பின்னர் மறுபடியும் போனில் தொடர்ந்தபோது,” ரொம்ப நேரம் நன்னா பேசிண்டிருந்தது டெலிபோங்காரங்களுக்கு பொறுக்கலையோ என்னமோ?” என்று நகைச்சுவையாக கூறினார்.
  • பின்னர் அவரை வீட்டில் பார்த்து வாழ்த்து கூறிவிட்டுத்தான் வந்தேன். அவரது இல்லம் சற்றும் ஆடம்பரமில்லாதிருந்ததுமிகவும் ஆச்சர்யமாயிருந்தது. அவர் வீட்டிலுள்ள எல்லோருமே சிரித்த முகத்துடன் இனிமையாக வரவேற்றது திருப்தியாயிருந்தது.!
  • “லக்ஷ்மண் கார்டூனைப்ப் பார்க்காமல் எனக்கு விடிவதில்லை” என்று ஒரு மத்திய மந்திரி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.