தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 19 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

கவிச்சக்கரவர்த்தியின்
கற்பனை கவித்துவ
கம்ப ராமாயணப் பாடல்

மை அறு மலரின் நீங்கி
யான் செய்த மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா என்று
அழைப்பது போன்றது அம்மா

தாமரை மலரைப் பிரிந்து நாங்கள்
செய்த மாதவத்தின் பலனாக
சீதை என்னும் அழகோவியம்
பிறந்து உள்ளார்

என்ற மிதலை நகரத்து செடி
கொடிகள் தன் கைககளை மேலும்
கீழுமாக அசைத்து

தாமரைப் போன்ற கண்களை
உடைய இராமனே
அவளை மணம் புரிய
விரைந்து வா என்று அழைப்பது
போல் இருந்தது என்பதே
இப் பாடலின் பொருள்


செடி கொடிகளின் அசைவை
உருவகமாக்கி உவமை நயமாக
மக்களுக்கு எளிதில் புரியும் படி
கற்பனை கவித்துவமாக
கவி புனைந்த கம்பரை
கரும்புத் தமிழால்
வாயார வாழ்த்தி வணங்கி
மகிழ்வோம்

மீண்டும் சந்திப்போம்...