தொடர்கள்
வரலாறு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறுக்கமுடியாத அவதாரம்

இளமை:

20230103220006589.png

இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் கட்டாக் என்னும் இடத்தில் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் வங்காள இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் பிறந்தார்.

8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். தந்தை கட்டாக் நகரில் வழக்குரைஞராய் தொழில் செய்து வந்தார். குடும்பம் வசதிமிக்கது. சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.

இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர்.

இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார். சிறு வயதில் இருந்தே, தெய்வ பக்தியுடன், இரக்க குணம் கொண்டு வாழ்ந்தார். சிறுவயதில் தாயிடம் துர்க்காதேவி புராணம் கேட்டு வந்ததால் அவர் கடவுள் பக்தியோடு, எளிய வாழ்க்கை முறையை கைக் கொண்டார். பகட்டான உடையுடுத்தியதில்லை. அடுத்தவர் துயர் கண்டு வருந்துவார் அடுத்தவர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தயங்கமாட்டார். இராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் படித்ததில் அவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டது.

கல்வி :

கட்டாக்கில் உள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்து ஏழு ஆண்டுகள் பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார்.

துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோ ஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.

அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப்குமார் ராயிடம், யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது; எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது; அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன்; இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (பிரம்மானந்தர்), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கொஞ்சநாள் சாமியார்கள் பின்னால் அலைந்து விட்டு தகுந்த குரு கிடைக்காமையால் தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.

தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாதவாறு செய்யப்பட்டனர்.

இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, கல்கத்தா பல்கலைகழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1918-ல் பி.ஏ தத்துவவியலில் பட்டம் பெற்றார்.

20230103220912875.jpg

1919-ல் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் படித்து எம்.ஏ. பட்டம் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.பெற்றார். தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்கி மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு ஐ.சி.எஸ். (ICS) படிப்பை படித்து, அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார். தனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, சிவில் சர்வீஸ் துறையில் வேலைக்கு இணைந்தார். ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை.

அப்பணியைத் தொடர்ந்தால் அவர் இந்தியர்களுக்கு எதிராக, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாய் செயல்பட வேண்டியிருக்கும். ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை லண்டனிலேயே துறந்திட முடிவு செய்தார்.

1919 ஆம் ஆண்டு இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஆங்கில அரசு கொன்று குவித்தது.

இந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் சுபாஷ் சந்திர போஸிற்கு ஆங்கிலேயரின் மீது கோபத்தை உண்டாக்கியது. அதனால் 1921 ஆம் ஆண்டு லண்டனில் அவருடைய பணியை ராஜினாமா செய்து இந்தியா திரும்பி வர இன்னொரு காரணமும் ஆக இருந்தது.

விடுதலை வேட்கையும் கூட சேர, கிடைத்த வேலையை துறந்து, பாரத நாடு திரும்பி, சுதந்திரம் என்னும் வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தை சி.ஆர். தாஸுக்குக் கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார். சுபாஷ் சந்திரபோஸின் திறனை நன்கு அறிந்த தாஸ் அவர்கள், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக வெறும் 25 வயதே ஆன சுபாஷை நியமித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இது எங்கள் நாடு. யாருடைய கையில் இருந்தும் சுதந்திரம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. எங்களுடைய அரசை நாங்களே அமைத்துக் கொள்வோம்’ என்று சூளுரைத்தவர் நேதாஜி.

20230103220834766.jpg

காந்தி 1947 ஆகஸ்டு 15-ல் சுதந்திரம் வாங்கினார் என்றால், இவர் 1943 அக்டோபர் 21-ஆம் நாளே இந்தியா சுதந்திர நாடு என்று அறிவித்துவிட்டார்.

சிங்கப்பூரிலிருந்து விடுக்கப்பட்ட அறிவிப்பு அது. அதன்மூலம் உலகத்தின் கவனத்தையே திருப்பிவிட்டார் அந்த மாவீரர்.

ஆங்கிலேயர்களுக்கு இவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவர்களும் கூறிவரும் “ஜெய்ஹிந்த்” என்ற போர் முழக்கம் முதன் முதலில் பயன்படுத்தியவர் நேதாஜி.

20230103220747427.jpg

அடுத்த வாரம்....