தொடர்கள்
ஆன்மீகம்
ராமர் கோவிலுக்கு நேபாளத்திலிருந்து வந்த அரிய வகை கல். - மாலா ஶ்ரீ

20230104013537640.jpeg

நேபாள நாட்டில் முஸ்டாங்க் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் 25-ம் தேதி 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சிறிதும் சேதமாகாத நிலையில் சுமார் 26 டன் மற்றும் 14 டன் எடை கொண்ட 2 அரிய வகை பாறைகளை, அங்குள்ள ஜானகி கோயிலை சேர்ந்த மகந்த் தபேஸ்வர் தாஸ் தலைமையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பெற்று, 24 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் , அயோத்தி ராமர் கோயில் கருவறையில் அமைக்கப்படவிருக்கும், மூலவர் ராமர் மற்றும் சீதை சிலை வடிவமைப்பு பணிகளுக்காக கொண்டு வந்தனர்.

சில நாட்களுக்கு முன் உ.பி. மாநிலத்துக்கு 2 லாரிகளும் நுழைந்தது. அயோத்திக்கு வரும்வரை வழிநெடுகிலும் ராமர், சீதை சிலை அமைக்கப்படவிருக்கும் 2 அரியவகை பாறைகளை பக்தர்கள் தொட்டு வணங்கினர். ஒருசிலர் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் கடந்த 2-ம் தேதி 2 அரியவகை பாறைகள் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

20230104013739224.jpeg

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது....பாடல் நினைவுக்கு வருகிறதா....

மாலாஸ்ரீ