தொடர்கள்
பொது
விஸ்வநாத் ஒரு சகாப்தம் - மாலா ஶ்ரீ

20230104013216121.jpeg

ஐதராபாத்தில் இயக்குநர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை ஆதர்ச குருவாக கருதி மதித்து வரும் கமலஹாசன் அடிக்கடி சென்று உடல்நலம் விசாரித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி இரவு ஐதராபாத் வீட்டில் சிகிச்சை பலனின்றி பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் மரணமடைந்தார். இவருக்கு மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் நாகேந்திரநாத், ரவீந்திரநாத், மகள் பத்மாவதி ஆகியோர் உள்ளனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் கடந்த 1930-ம் ஆண்டு, பிப்ரவரி 19-ம் தேதி பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்தார். பின்னர் அவர் பட்டப்படிப்பை முடித்து, திரைத்துறைக்குள் நுழைந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கமலுடன் குருதிப்புனல், உத்தமவில்லன், அஜித்துடன் முகவரி, பார்த்திபனின் காக்கை சிறகினிலே, விஜய் நடித்த பகவதி, தனுஷ்-நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் இயக்குநர் கே.விஸ்வநாத் நடித்து, முத்திரை பதித்துள்ளார். இவர் தெலுங்கு படவுலகின் ‘கலா தபஸ்வி’ என அழைக்கப்பட்டார்.

பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவு செய்தியை கேட்டு நடிகர் கமலஹாசன் உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படத் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாலாஸ்ரீ