தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20230104074401458.jpeg

ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கல்ல- அண்ணாமலை

அப்போ அண்ணனுக்கு ஈரோட்டில் தாமரை மலர விருப்பமில்லை போல தெரியுது.

ஊழலை ஒழித்து விட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், ஒரு நபர் எப்படி வங்கியில் ஒரு லட்சம் கோடி ஏமாற்ற முடியும் காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி ?

கம்பெனி ரகசியத்தை எல்லாம் கேட்கக் கூடாது அப்பு

விலைவாசியை கட்டுப்படுத்துவது ஒரு வரி கூட ஜனாதிபதி உரையில் இல்லை திருணாமுல் காங்கிரஸ் எம்பி

இதெல்லாம் எப்படி ஜனாதிபதி சொல்வார் தேர்தல் அறிக்கையில் தான் சொல்ல முடியும்.

ஒழுங்கா போய் வேலையை பாருங்கள் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை.

அரசியலுக்கு வருவேன் 234 தொகுதியில் போட்டி போடுவேன் தனி கட்சி தொடங்குவேன் இப்படி ரசிகர்களை கெடுத்ததே நீங்கள் தானே

குடியுரிமை சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மக்களை குழப்புகிறது மம்தா பானர்ஜி.

அதாவது தெளிவா சொல்லி குழப்புறாங்க அப்படித்தானே மேடம்

உருட்டு கட்டை கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்

ஓ இதுதான் உயர்கல்வியில் சொல்லித் தரும் பாடமா

ஆளுநர் தேநீர் விருந்து நடைமுறை மரபு அதனால் தான் போனேன் எந்த சமரசமும் இல்லை முதல்வர் ஸ்டாலின்.

ஆமாம் சமரசம் ஆயிட்டா முரசொலியில் எழுத விஷயம் இல்லாமல் ஆசிரியர் ரொம்ப கஷ்டப்படுவார்.

முக்கிய விஷயங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு உறுதி.

ஆனா அந்த முக்கிய விஷயம் எதுன்னு ஆளுங்கட்சி தான் சொல்லும் ஓகே தானே

விமர்சனம் செய்பவர்களை பார்த்தால் அரசியல் செய்ய முடியாது அண்ணாமலை.

அதாவது இந்த சூடு சொரணை எல்லாம் தேவையில்லை என்கிறார் முன்னாள் காக்கி.

பெண்கள் திமுகவிற்கு வாக்களிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அமைச்சர் ஏவா வேலு

ஓ மூக்குத்தி, குடம், புடவை, ரூபாய் எல்லாம் ரெடி போல தெரியுது

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உறுப்பினர்கள் மோதல்.

மக்கள் பிரச்சனை எல்லாம் இல்லை கமிஷன் பிரச்சனையில் தான் மோதல்

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை.

அக்கா பேசாம திமுக தேர்தல் பிரச்சாரமே செய்யவில்லை என்று சொல்லிவிடுங்கள் விஷயம் முடிஞ்சு போகும்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ்தான் ஆணிவேர் ஜெயராம் ரமேஷ்.

ஆனால் சில எதிர்க்கட்சிகள் இந்த ஆணிவேரே நமக்கு தேவையில்லை என்கிறார்களே சார்

ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்று நோக்குகிறது பிரதமர் மோடி

ஆமா அதானி கம்பெனி நஷ்டத்தில் போகுது பட்ஜெட்டில் எத்தனை கோடி ஒதுக்க போறாங்களோ என்றுதான் உலகம் கவனிக்கிறது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்.

பாவம் ராமர்

லஞ்சம் கேட்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பட்டியலை அமைச்சரிடம் அளிக்க வணிகர் சங்கம் திட்டம்

ரொம்ப தேங்க்ஸ் இந்தப் பட்டியலை வெச்சே மாமுல கரெக்டா வசூல் பண்ணுவாரு அமைச்சர்.

சசிகலாவை விரைவில் சந்திப்பேன் ஓபிஎஸ்

அண்ணன் இப்படி ஏதாவது சும்மா சொல்லிக்கிட்டு தான் இருப்பாரு ரொம்ப தமாஷ்.