தொடர்கள்
அரசியல்
தடுமாறுகிறார் அண்ணாமலை -விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20230104072826171.jpg

அண்ணாமலை அறிக்கைகள், பேட்டிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் கட்சி நடத்தும் அரசியல் தலைவர், அவரது அரசியல் தெளிவு என்பது அவரது திணறலின் வெளிப்பாடுதான் என்கிறார் ஒரு மூத்த பிஜேபி பிரமுகர். ஏதோ அவர்தான் கட்சியை வளர்த்தது போன்ற தோரணையில் அவரது பேச்சு இருக்கிறது. இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது என்கிறார். அந்த பிரமுகர் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்கள் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாமலையின் பேச்சை உன்னிப்பாக கவனித்தது. ஒரு கட்டத்தில் இவை எல்லாமே உளறல் இவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம் என்று அவரை தவிர்க்கவும் ஆரம்பித்தார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இங்குதான் அண்ணாமலையின் தடுமாற்ற அரசியல் கிட்டத்தட்ட வெட்ட வெளிச்சம் ஆனது என்று கூட சொல்லலாம். ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் முதலில் அண்ணாமலை போட்டியிட ஆசைப்பட்டார் இது பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் நாம் போட்டியிட வேண்டாம் என்று சொன்னார்கள் என்று சொன்னபோது கட்சியின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மாநில பொறுப்பாளர் கேசவ்விநாயகம் உள்ளிட்ட சிலர்தான் நாம் போட்டியிடலாம் என்று சொன்னார்கள். போட்டியிட வேண்டாம் என்று பெரும்பாலோர் சொன்னதற்கான முக்கிய காரணம் நாம் கட்சியின் உட்கட்டமைப்பை இன்னும் வடிவமைக்கவில்லை பல தொகுதிகளில் பூத் கமிட்டிகள் இன்னும் அமைக்கவில்லை இது ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பொருந்தும் என்பதுதான். ஆனால், அதையும் மீறி அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் செல்வாக்கு பற்றி ஒரு சர்வே நடத்தினார் அந்த சர்வே முடிவு பாரதிய ஜனதாவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதுதான்.

இதன் பிறகும் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு பாரதிய ஜனதா ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுப்பதிலும் தடுமாற்றம் தான்.அண்ணாமலைக்கு ஆரம்பம் முதல் எடப்பாடி உடன் ஒரு சுமூகமான சூழல் இல்லை இதற்குக் காரணம் அவர்கள் இருவரும் ஒரே ஜாதி என்பதுதான் பேசும் பொருளாக இருக்கிறது. யாருக்கு அதிக செல்வாக்கு என்ற அதிகாரப்போட்டி இன்னொரு காரணம். ஆனால், அண்ணாமலை விட ஒரு செல்வாக்கு உள்ள தலைவராக தான் எடப்பாடி இன்றளவும் இருக்கிறார் என்ற புரிதல் இன்று வரை அண்ணாமலைக்கு இல்லாமல் போய்விட்டது.

20230104073300173.jpg

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில் பாரதிய ஜனதா ஆதரவு கேட்டு அண்ணாமலையை எடப்பாடி தொடர்பு கொண்டு பேசினார் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் அண்ணாமலையை சந்திக்க அனுப்பினார். ஓபிஎஸ் நேரடியாக வந்து பாரதிய ஜனதா போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருகிறோம். இல்லையென்றால் நாங்கள் போட்டி போடுகிறோம் என்று சொன்னார். ஆனால், இருவரிடமும் கட்சி முடிவு என்ன என்று அண்ணாமலை சொல்லவில்லை. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு நடந்த நிருபர்கள் சந்திப்பில் ஒருங்கிணைந்த அண்ணா திமுகவுக்கு எங்கள் ஆதரவு இரட்டை இலை சின்னத்துக்கு எங்கள் ஆதரவு சுயேச்சை சின்னத்தில் போட்டி போடும் வேட்பாளர்களுக்கெல்லாம் எங்கள் ஆதரவு இருக்காது என்று சொன்னார் அண்ணாமலை. அதாவது எடப்பாடி ஓபிஎஸ் இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது வேறு சின்னத்தில் தான் அவர்கள் போட்டியிட வேண்டி இருக்கும் என்பதைத் தான் அவர் சூசகமாக தெரிவித்தார்.

2023010407353865.jpg

இதில் எடப்பாடிக்கு தங்கள் கட்சியை சுயேச்சை வேட்பாளர் என்று அண்ணாமலை வர்ணித்ததில் கடும் கோபம் எடப்பாடி பொறுத்த வரை சசிகலா தினகரன் ஓபிஎஸ் வேண்டாம் என்பதை டில்லி பாரதிய ஜனதா தலைவர்களிடம் தெளிவுபட சொல்லிவிட்டார் இன்று வரை அவர் நிலைப்பாடு இதுதான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அண்ணாமலையின் இந்த பேட்டி வெளியானது அதுமட்டுமல்ல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எங்களுக்கு முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டார். அண்ணாமலை இது அடுத்த தடுமாற்றம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை எல்லா தேர்தல்களும் மிக முக்கியம் குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுகவுக்கு ஒரு பலப்பரீட்சை அதனால் தான் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே திமுக தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் முழுமூச்சாக ஈடுபட்டு திமுகவை தோற்கடிக்க ஒருங்கிணைக்க முயற்சி செய்திருக்க வேண்டும் அண்ணாமலை. அதற்கு பதில் எங்களுக்கு இந்த தேர்தல் முக்கியமில்லை என்று சொல்லியது அவர் தடுமாற்றத்தை தான் காண்பித்தது ஒருமுறை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்ற ஒரு பேச்சு அதிமுக பெரிய கட்சி என்று ஒரு பேச்சு பாரதிய ஜனதா சார்பாக தமிழ்நாட்டில் இருந்து 25 பேர் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுவார்கள் அதில் ஐந்து பேர் மந்திரியாக இருப்பார்கள் என்று ஒரு பேச்சு. இப்படி சும்மா அடிச்சு விடு என்ற லெவலில் தான் அண்ணாமலை செயல்பாடு இன்று வரை இருக்கிறது. இது தவிர கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது நமது கட்சிக்கு இரண்டு சதவீதம் வாக்கு இருக்கிறது எனக்கு 10 சதவீதம் வாக்கு இருக்கிறது என்கிறார். அதாவது கட்சியைவிட தனக்கு செல்வாக்கு அதிகம் என்ற அவரது நம்பிக்கை அல்லது அவரது பேச்சு அவர் கனவுலகத்தில் வாழ்கிறார் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை எந்த தலைவரும் கட்சியை விட தனக்கு செல்வாக்கு அதிகம் என்று பேசியது கிடையாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை டெல்லி பாரதிய ஜனதா தலைமை அவரே சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அவருக்கு தந்திருந்தது அதை நன்கு பயன்படுத்தி கட்சியின் கட்டமைப்பை அவர் முறைப்படுத்தி உறுப்பினர்கள் அதிக அளவு சேர்த்து பாரதிய ஜனதாவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றி இருக்க வேண்டும். குறிப்பாக மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ள மாநிலங்களில் தேசியக் கட்சி வளர்ப்பது என்பது ஒரு சவால் இந்தப் புரிதல் இந்த உண்மை அண்ணாமலைக்கு தெரியாமல் போனது.

20230104073631529.jpg

அண்ணாமலையின் தவறான அணுகுமுறையால் எடப்பாடிக்கு பாரதிய ஜனதா பற்றிய ஒரு பயம் காணாமல் போய்விட்டது. அதனால்தான் ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையில் எடப்பாடி மோடி அமித்ஷா படங்களை பயன்படுத்தவில்லை இவை எல்லாமே அண்ணாமலை மீது உள்ள கோபத்தில் வெளிப்பாடு அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பற்றி பேசும்போது ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு ஆதரவு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு சுயேச்சை வேட்பாளரை பாரதிய ஜனதா ஆதரிக்காது என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது எடப்பாடி ஓபிஎஸ் அணி இரு தரப்புக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. அவர்கள் சுயேட்சை தினத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டார் அண்ணாமலை. தங்களை சுயேச்சை வேட்பாளர் என்று அண்ணாமலை குறிப்பிட்டு விட்டார் என்று எடப்பாடி மிகுந்த கோபப்பட்டார். அதனால்தான் டெல்லியில் நட்டாவை சந்தித்து விட்டு நட்டா இருவரும் ஒன்றாக இணைய பேசிப் பாருங்கள் அண்ணாமலையை அனுப்பி வைத்தார். எடப்பாடியை சந்திக்கப் போனபோது அண்ணாமலையை அரை மணி நேரம் காக்க வைத்தார் எடப்பாடி அதுமட்டுமல்ல ஒருங்கிணைந்த என்று அண்ணாமலை ஆரம்பித்தபோது நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபட சொல்லி விட்டேன்.

அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் எங்களிடம் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். நாங்கள்தான் உண்மையான அதிமுக நீங்கள் எங்களை ஆதரிங்கள் இதை ஏற்கனவே நான் டெல்லி தலைவர்களிடம் சொல்லி விட்டேன் என்று சொன்ன எடப்பாடி இதற்காகவா நீங்கள் வந்தீர்கள். இதை நீங்கள் என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கலாமே என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி. அண்ணாமலையால் அதிமுகவை ஒன்றிணைக்க முடியவில்லை இப்போது உச்ச நீதிமன்றமும் ஒரு மாதிரி எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. அதிமுக பி பார்ம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போட்டால் போதும் என்று சொல்லி இருக்கிறது ஓபிஎஸ்ஐ. கட்சியை விட்டு நீக்கிய அதே பொதுக்குழுவில் தான் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே உச்சநீதிமன்றம் கிட்டத்தட்ட அந்த பொதுக்குழுவை அங்கீகரித்துவிட்டது என்பதுதான் உண்மை. இப்போதைக்கு அண்ணாமலை உஷாராக செயல்பட வேண்டிய தருணம் இது ....!

என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை என்று பார்ப்போம்.