தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

20230104075459401.jpg

பட்டம் போலே என்ற மலையாள படம் மூலம் தான் சினிமாவுக்கு வந்தார். நடிகை மாளவிகா மோகனன் பிறகு தமிழில் ரஜினியின் பேட்ட, விஜயின் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் என்று தமிழில் வாய்ப்புகள் வந்தது. இப்போது ஐந்து வருடத்திற்கு பிறகு கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி

20230104075522673.jpg

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்றும் படக்குழு சொல்லி இருக்கிறார்கள்.

நிறைய அவமானப்பட்டேன்

20230104075756593.jpg

பொம்மை நாயகி படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் யோகி பாபு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு ஆரம்ப காலத்தில் எவ்வளவோ அவமானங்களை கடந்து தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். நான் எப்போதும் காமெடி நடிகன் தான் என்னை நம்பி அழைத்தால் நாயகனாக நடிக்க தயார் என்று பேசியிருக்கிறார் யோகி பாபு.

இந்தியில் ஜோதிகா

20230104075907562.jpeg

1998-ஆம் ஆண்டு இந்தி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர். நடிகை ஜோதிகா அதன் பிறகு நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து விட்டார். இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் நடிகை ஜோதிகா.

ஜமுனா வேடத்தில் தமன்னா

20230104075959969.jpg

பழம்பெரும் நடிகை ஜமுனா தனது 86-வது வயதில் போன மாதம் ஹைதராபாத்தில் காலமானார். சிறந்த நடிகையான ஜமுனா காங்கிரஸ் கட்சி சார்பாக எம்பி ஆனார். அதன் பிறகு பாரதிய ஜனதாவில் சேர்ந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். தற்போது நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள் நடிகை ஜமுனா வேடத்தில் தமன்னா நடிக்க இருக்கிறாராம்.

சூப்பர் ஸ்டார் டைட்டில்

20230104080022962.jpg

சூப்பர் ஸ்டார் டைட்டில் தன் கையை விட்டு போய்விட்டது போல் சமூக வலைதளங்களில் பேச்சு வரத் தொடங்கி இருப்பதை கொஞ்சம் சீரியஸ் ஆகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதனால், ஜெயிலர் படம் மூலம் சூப்பர் ஸ்டார் நான் தான் என்று என்று நிரூபிப்பதற்காக தீவிரமாக அந்தப் படத்தை மெருகேற்றும் வேலையில் நிறைய யோசனைகள் சொல்லி வருகிறார் இது தவிர படத்தின் பிரமோஷனுக்காக பல நகரங்களில் நிகழ்ச்சி நடத்தவும் அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

ரொம்ப பிசி தான்

2023010408005842.jpg

திருமணத்துக்குப் பிறகும் நடிகை நயன்தாரா பிஸியான நடிகையாக தான் இருந்து வருகிறார். ஜெயம் ரவியோடு ஜோடியாக இறைவன் படத்தில் நடிக்கிறார். இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடிக்கிறார். இது தவிர மித்ரன் ஜவகர் படம் மோகன் ராஜா இயக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இது என் தாய் வீடு

திருமணத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ள நடிகை ஹன்சிகா இது பற்றி குறிப்பிடும் போது நான் என் தாய் வீட்டுக்கு வந்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார். ஹன்சிகா வசம் தற்போது ஏழு படம் இருக்கிறதாம் ஏழு படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்கிறார்கள்.

பையா 2

20230104080619169.jpg

கார்த்தி தமன்னா நடித்த 2010-ல் வெளியான பையா படத்தை லிங்குசாமி இயக்கினார் இப்போது பையா இரண்டு தயாராக போகிறதாம் ஆர்யா நாயகன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஆர்யாவுக்கு ஜோடி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.