தொடர்கள்
அனுபவம்
ஒரு நடை பாதை  கடந்து வந்த பாதை ஸ்வேதா அப்புதாஸ் 

20230225081026832.jpeg

ஊட்டி உலக சுற்றுலா தலம் . ஜான் சல்லிவன் என்ற பிரிட்டிஷ் கலெக்டரின் அறிய கண்டுபிடிப்பு தான் இந்த மலை ஊர் .

அதனால் தான் சாலைகள் நடைபாதைகளுக்கு கூட ஆங்கில பெயர்கள் .

ஊட்டி ரயில் நிலையத்தை தொட்டால் போல உள்ள பகுதி தான் செயின்ட் மேரிஸ் ஹில் குடியிருப்பு .

இந்த சிறிய குன்றில் மொத்தம் ஒன்பது கல்வி நிறுவனங்கள் .

செயின்ட் மேரிஸ் தேவாலயம் .

இவை அனைத்துக்கும் நடை பாதை ரயில் நிலையத்தில் இருந்து மேலை செல்லும் பியோலி நடை பாதை .

பள்ளி , கல்லூரி மாணவர்கள் , ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் இப்பகுதியில் குடியிருக்கும் ஆயிரத்திற்கும் மேல் இப்பகுதியில் தான் நடந்து செல்வது வழக்கம் .

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நடை பாதை வழியாக குடி நீர் வடிகால் குழாய்கள் பொருத்தும் பணியை தீடீர் என்று துவங்கியது .

20230225081049555.jpeg

நன்றாக இருந்த நடை பாதையை ஜே சி பி கொண்டு குழி தோண்டி குழாய்களை அரைகுறையாக பொருத்தி பாதையை சின்னாபின்னமாகியது குடிநீர் வடிகால் வாரியம் .

குடிநீர் குழாய்கள் தங்களுடைய பாதை வழியாக வரக்கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டு தடை போட்டது ரயில்வே பொறியியல் துறை .

சின்னாபின்னமாக தோண்டிய நடை பாதை அப்படியே விடப்பட்டது . பொறுத்தின குடிநீர் குழாய்களை குடிநீர் வாரியம் எடுத்து கொண்டு சென்றதோடு சரி திரும்பி பார்க்கவில்லை .

இந்த பாதை அருகே உள்ள வீடுகளின் படிக்கட்டுகள் மற்றும் கேட்டுக்கள் உடைந்து போனது .

இந்த பகுதி குடியிருப்பு வாசிகள் நகராட்சியிடம் முறையிட்டனர் .

நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் முதல் பொறியாளர் என்று தலையை ஆட்டினார்களே தவிர எந்த நடவடிக்கையும் இல்லை .ஒரு பொறியாளர் வந்து பார்த்துவிட்டு சென்றார் முன்னேற்றம் இல்லை .

2023022508111212.jpeg

பொறுமை இழந்த மக்கள் முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் மனு எழுதி அனுப்ப . உடனடி நடவடிக்கை எடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பறக்க ஆட்சியர் மீண்டும் நகராட்சியை வலியுறுத்த .

அப்பொழுது இருந்த ஆணையாளர் கூறுகிறார் , "முதல்வருக்கு மனு கொடுத்தாலும் நடை பாதை போட நாங்க தான் வரவேண்டும் " என்று கிண்டலாக கூற. எந்த முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பி வைக்க படு ஸ்பீடில் மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த ஊட்டி நகராட்சி ஆக்ஷனில் இறங்கியது .

நாம் விகடகவி சார்பாக தொகுதி எம் .எல் .ஏ கணேசனை தொடர்பு கொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நடை பாதை அமைக்க நடவடிக்கை எடுத்து ஒரு வழியாக மேலிருந்து கீழ் பகுதி வரை நடை பாதை போட்டுவிட்டு மீதி பகுதிக்கு நிதி இல்லை என்று கைவிரித்து விட்டனர் .

மீண்டும் அந்த நடை பாதைக்கு போராட தள்ள பட்டனர் இப்பகுதி வாசிகள் .

பல முறை நகராட்சியிடம் முறையிட நிதி இல்லை என்ற கைவிரிப்பு தான் .

அந்த பகுதியில் இரவில் காட்டு பன்றிகள் , காட்டெருமை , தோடர் எருமைகள் என்று வர ஆரமிக்க குடியிருப்பு வாசிகள் மிக பெரிய இன்னல்களுக்கு ஆளாகினார்கள் .

ஆட்சி மாற்றம் புதிய நகர மன்றம் என்று காட்சிகள் மாற போராட்டம் தொடர்ந்தது .

புதிய நகர்மன்ற செயின்ட் மேரிஸ் ஹில் 23 வது வார்டு கவுன்சிலர் பிளோரினா மார்ட்டின் உடனடியாக இந்த நடை பாதையை செப்பனிட முதல் நகரமன்ற கூட்டத்தில் இதை பற்றி பேசி முயற்ச்சிகள் எடுத்தார்

அதன் விளைவாக நகராட்சி ஒப்புதல் அளித்து அதற்கான வேலை ஆரம்பிக்க ஒரு மாதத்திற்கு மேல் நகர்ந்தது .

பின்னர் ஒரு வழியாக இந்த நடை பாதை புதுப்பிக்க பட்டது .

கவுன்சிலர் பிளோரினா மார்ட்டின் நம்மிடம் கூறினார் , " இந்த நடை பாதை மிக முக்கியமான ஒன்று ஒன்பது கல்வி நிறுவனங்கள் அங்கு வந்து போகும் மாணவர்கள் இந்த நடை பாதையை தான் தினமும் உபியோகித்து கொண்டிருக்க அது மோசமானதாக மாறியவுடன் வேறு பாதை வழியாக கடின பட்டு செல்லும் சூழ்நிலை .இதைவிட கொடுமைகளை இப்பகுதி குடியிருப்பு வாசிகள் அனுபவித்து வந்தார்கள் .நல்ல காரியங்கள் தடைப்பட்டு போக இந்த நடைபாதை காரணமாக அமைந்தது மற்றும் இறப்பு சமையத்தில் உடல்களை எடுத்து செல்ல மிக கடினம் நானும் இதே பகுதியில் வசிப்பதால் நடை பாதை சின்னாபின்னமாகி கிடந்ததால் பல இன்னல்களுக்கு தள்ளப்பட்டோம் .நான் கவுன்சிலரான பின் முதல் வேலையாக இந்த நடைபாதையை செப்பனிட வலியுறுத்தினேன் .எங்க முத்த கவுன்சிலர் ஜார்ஜ் இதற்காக நகர மன்றத்தில் வாதாடினார் .ஒரு வழியாக பியோலி நடை பாதை புதுப்பிக்க பட்டுள்ளது .இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளதை பார்க்க முடிகிறது " .

இந்த நடை பாதை புதுப்பித்து கொடுக்க முழு முயற்ச்சியை எடுத்து பணியை முடக்கிவிட்டது உதவி பொறியாளர் கோபிகா தான் .

ஒரு நடை பாதை ஆறு வருட போராட்டத்திற்கு பின் புதுப்பிக்க பட்டுள்ளது ஆச்சிரியமான ஒன்று .

அதிலும் ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீதி பாதி நடை பாதை அப்படியே கிடக்கிறது .

20230225081154393.jpeg

இதுவே ஜனாதிபதி முதல்வர் , ஆளுநர் வரும் பாதையாக இருந்தால் எப்பொழுதோ பளிச்சாகியிருக்கும் இது தான் நம் தலையெழுத்து என்கிறார்கள் இப்பகுதி வாசிகள் .