தொடர்கள்
பேரிடர்
அடுத்த வருடமும் வருண பகவான் வருவார்?!-ஆர்.ராஜேஷ் கன்னா

20231108085849261.jpeg

நன்றி : தினமணி

சூப்பர் எல்-நினோ ஆண்டில் வடகிழக்கு பருவ மழைப்பொழிவு போதிய அளவு பெய்யாது என்று நிபுணர்கள் கருத்தாக இருந்தது.

அதே நேரத்தில் எங்கே, எப்போது ,எப்படி திரளான மழை மேகங்கள் அல்லது புயல் உருவாகி பெரும் மழை வரும் என்ற கணிப்பும் இருந்தது.

வங்க கடலில் மிக்ஜம் புயல் உருவாகி சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் கிட்டதட்ட 48 செ.மீ அளவிற்கு மழை மற்றும் சூறாவளி காற்றுடன் இடைவிடாது பெய்தது.

20231108090003863.jpeg

ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜம் புயல் கரையை கடந்தது. கிட்டதட்ட 10 தாலுக்காவில் இருக்கும் நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா லட்சுமி புரம் அணைக்கட்டு கரை உடைந்து கிட்டதட்ட 2000 ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் சேதம் அடைந்தது.

சென்னையில் ஒரு பகுதி இந்த புயலால் எந்த பாதிப்பும் அதிகளவில் இல்லை . அதே நேரத்தில் தென் சென்னை தாம்பரம் பக்கம் அதிகளவு மழை பொழிவினால் வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்தது.

ஒரு பக்கம் அரசாங்கம் சுற்றி சுழன்றாலும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் மீட்பு பணிகள் முழுவீச்சில் இருந்தாலும் படகு போக்குவரத்து தொடங்கி பொதுமக்களை அரசு மீட்டது. பிரைவேட் போட் சர்வீஸ் வெள்ள நீரில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து வந்தது.

20231108090045628.jpeg

மிக்ஜம் புயல் சென்னை நெருங்கும் நள்ளிரவில் மின்சாரம் படிப்படியாக துண்டிக்கப்பட்டது.

(புழல் ஏரி ததும்பி வழியும் காட்சி)

ஒரு பக்கம் செம்பரம்பாக்கம் ஏரி மறுபுறம் புழல் ஏரி திறந்து விடப்பட்டது. கூவம் நதியும் கடலும் கலக்கும் முகத்துவாரத்தில் மழை வெள்ளநீர் செல்ல முடியாமல் ரிவர்ஸில் தண்ணீர் சென்னைக்கு பாய்ந்தது. இதனால் அண்ணா நகர், தி நகர் , சைத்தாபேட்டை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்தது.

மாநகராட்சி ஊழியர்கள் என்ன தான் ராட்சச மோட்டர் கொண்டு வெள்ள நீரை வெளியேற்றினாலும் கடல் வெள்ள நீரை உள்வாங்காததால் சென்னையில் ஒரு பகுதி ஒரு தனி தீவு போல் காட்சி அளித்தது.

வேள்சசேரி , பள்ளிகரணை போன்ற ப்ரைம் ஏரியாவில் வெள்ளம் தரைதள வீட்டின் மேற்கூரை வரை பாய்ந்து சென்றது. பல விலைப்மதிப்பற்ற கார்கள் அடித்து செல்லப்பட்டது.

அரசை இந்த நேரத்தில் குறை சொல்லக்கூடாது…முதல்வர் இந்த மழை பேரிடர் சவால் என சொல்லி அனைத்து அரசு துறையினரையும் களப்பணியில் இறக்கி விட்டார். அமைச்சர் நேரு, மா.சுப்பிரமணியம் ,சேகர்பாபு என மக்களை மீட்கும் பணியில் வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கினார்கள் .

20231108090121427.jpeg

இது பேய் மழை என்றே சொல்ல வேண்டும் …பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட புயல் …இனி இதுப்போன்று வருடம் தோறும் சென்னையை தாக்கும். சென்னை மழைநீர் வடிக்கால் வசதி செய்தாலும் வங்க கடலில் புயல் ஏற்படும் போது கடல் சீற்றமாக இருக்கும் வரை வெள்ள நீர் வடியாது.

அரசை குறை கூறினாலும் எதுவும் நடக்காது. ஏரிகளில் வீடுகள் அமைக்க ஒப்புதல் வழங்கிய அப்போதைய தமிழக அரசுகள் முதல் இப்போது வரை எதுவும் செய்ய முடியாமல் முழி பிதுங்கி நிற்கவேண்டியது தான்.

சரியான திட்டமிடல் மற்றும் மழை நீர் வடிகால் அமைப்புகளை மீண்டும் உருவாக்கி செயல்படுத்தினால் வரும் காலத்தில் சென்னை ஓரளவு வெள்ளத்தில் தவிப்பதை தவிர்க்கலாம்.

20231108090335443.jpg

சென்னை மாநகராட்சி தற்போது விரிந்து பரந்து இருந்தாலும் மழை தன் இருப்பிடத்தை தேடி செல்லும் போது நாம் எதுவும் செய்யமுடியாது.நீர் வழி பாதையை நாம் தடுத்தால் அதுக்கு கோபம் வந்துரும். நீர்வழி பாதையை யாரும் குறுக்கீடு செய்யகூடாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு போர்கால அடிப்படையில் நீக்கி , முறையான மழை நீர் செல்லும் பாதைகளை சீராக கட்டி பராமரித்தால் ஓரளவு வெள்ள நீரில் இருந்து சென்னை தப்பிக்கும் .

20231108090419792.jpeg

செவிடன் காதில் ஊதும் சங்கு இந்த கட்டுரை….மீண்டும் மக்களும் அரசும் அடுத்த ஒரு மாதத்தில் இதனை மறந்து விட்டு வேறு பணிகளுக்கு சென்றுவிடுவார்கள் .

வருண பகவான் அடுத்த வருடமும் வருவார். சென்னையை பதம் பார்ப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சென்னை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது.

20231108090441352.jpeg

மழை வரும் …வெள்ளமும் வரும் ….

சென்னைவாசிகள் ஒரே குட்டையில் வாழ்ந்தாலும் … அரசியல்வாதிகள் அதில் மட்டையாக மிதந்து வருவதே தற்போதைய காட்சி !