(பாரதியார் தோற்றம் 11 டிசம்பர். அடுத்த வாரம் பாரதி வாரம்)
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
– மகாகவி பாரதியார்
இசைக்கவி ரமணனின் பாரதி யார் நாடகத்திலிருந்து... நன்றி.
Leave a comment
Upload