தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20240109172533838.jpeg

தகுதியற்றவர் என்ற வார்த்தை அநாகரிகமானது அல்ல டி.ஆர்.பாலு விளக்கம்.

திராவிட மாடல் அகராதியில் இருக்கும் போல,

அதிமுக உள்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது உயர்நீதிமன்றம்.

அவங்களுக்கும் பாவம் திரும்பத் திரும்ப வந்தா போரடிக்கதானே செய்யும்.

திமுக கூட்டணியில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி கேட்டு காங்கிரஸ் மதிமுக நிர்பந்தம்.

பாவம் திமுக தலைவர் இந்த மாசம் பிபி மாத்திரை போட்டே ஆகணும்.

எங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் உறுதி.

அரசியல் காமெடி !!

அடுத்த 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும் அண்ணாமலை.

ஆமா ஆமா அப்பதான் டெபாசிட் ஆவது மிஞ்சும்.

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவோம் ராகுல்காந்தி.

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே !!

அஜித்பவார் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஆமா அப்படித்தான் சொல்ல சொல்லி இருக்காங்க !!

கேரளா அரசு நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு தரும் முதல்வர் ஸ்டாலின்.

எதுக்கு முல்லைப் பெரியார் விவகாரத்துக்கா தெளிவா சொல்லுங்க தலைவரே !!

அதிமுக அணயப் போகும் விளக்கு அண்ணாமலை.

டெல்லியில் ஏதோ பிளான் பண்றாங்க போல !!

அமலாக்கத்துறை வந்தால் சந்திக்க தயார் விருந்து தந்து உபசரிப்போம் அமைச்சர் ரகுபதி.

அடிக்கடி ரைடு வந்த இப்படித்தான் நடக்கும் போல !!

அமலாக்கத்துறை எங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டாம் கதவு திறந்தே இருக்கும் அமைச்சர் துரைமுருகன்.

அப்புறம் கைது பண்ணா அரசியல் பழிவாங்கல்ன்னு சொல்லக்கூடாது தலைவரே !!

சிறையில் அடைத்தாலும் பாரதிய ஜனதாவில் சேரமாட்டேன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

சிறையில் அடைத்த பிறகு உங்களை ஏன் சேர்க்கப் போகிறார்கள் !!

உள்நோக்கத்துடன் மாநிலங்கள் புகார் கூறுகின்றன மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதை விடுங்க மேடம் உங்கள் சார் நிறைய பேசுறாரு அவர கட்டுப்படுத்த மாட்டீங்களா ரொம்ப தான் அவருக்கு சுதந்திரம் கொடுத்து வச்சிருக்கீங்க !!

சிபிஐ 1025 வழக்குகள் நிலுவையில் உள்ளன ஆண்டறிக்கையில் தகவல்.

வழக்கு மட்டும்தான் நாங்கள் போடுவோம் என்கிறது சிபிஐ

சாதி மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சி நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் தொல்.திருமாவளவன்.

இதன் மூலம் வேற ஏதோ ஒரு கட்சி உறுதியா இல்லைன்னு தெரியுது.