தொடர்கள்
ஆன்மீகம்
தேஜோவதி 14 "" - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20240318214152648.jpg

மணிதாசரின் காந்தமலை விருத்தம்

“பூமலர் சோலைபோல் நீராழி சூழவும் புற்றில் ஈதேன் ஒழுகவும், பொங்கியே வானோடி கல்லாவின் மூலமே பொன்மணி பீடம் தன்னில் காமனுடைய வடிவு தன்மேல் ஒளிக்கோடி என காந்தமலை வாசனப்பன் கருணை ப்ரவாஹமாய் அருள் வீற்றிருக்கவும் காமதி சரணமடைய வாசப்ரபையாள் தன் வீணையின் நாதமும் மைந்தனும் கனிந்தாடவும் வானுலகம் ஈரேழு ஸ்தாணுமாலயன் என்று சாஸ்தரை வணங்கி நிதமும் நியமமொருஸ்னகாதி முனிவானோர் ஜெய ஜெய என்றுமே ஸ்துதி செய்யவுமே நேமி சிவகாமி தன் நேச நித்யனே முக்திவடிவே.”

மணிதாசர் மேலும் :-

“சிவகாந்தமலை மேவும் சிங்கார

சந்தனக்காவில் செல்லப்பிள்ளயுடன்

மேவும் தென்குளத்தூரிலய்யா

வாழ்குளத்தூரிலய்யா…….”

“கொண்டல் பொழிந்திடும் சந்தனக்காவில்

குலவும் குளத்தூரிலய்யனே ……..”

“சந்தனக்காவில் செந்தூரம் கொண்டு

வந்து இந்திரன் பணியவே…….”

“காந்தமலை தன்னில்

காருண்யமாய் வாழ்ந்திடும்……”

“ஸந்தனக்கா வுதன்னில் இருக்கின்ற

ஸ்வாமியை சமயம் தேடிவரும்

இந்த்ராதி தேவர்கள் வஸிஷ்டர்

கூடிவல்ல கந்தர்வர்………………”

என்றெல்லாம் பாடுவார்.

தேஜோவதி பற்றி ஸ்ரீமஹாசாஸ்தாவே கூறும் வர்ணனை:

பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா தனது அதீனத்திற்கு உட்பட்ட தான் அமர்ந்து பரிபாலனம் செய்யும் தேஜோவதியைப் பற்றி ப்ரபாதேவியாரிடம் மறைமுகமாக வர்ணித்திச் சொல்வதாக ஸ்ரீகடந்தேத்தி மஹாசாஸ்தா புராணம் தனது அத்தியாயம் இருபத்தொன்பதில் கீழ்கண்டவாறு கூறுகிறது.

ஸ்ரீமஹாசாஸ்தாவை சிறுவயதிலிருந்தே காதலிப்பதாகக் கூறும் பெண்ணே! (ப்ரபாதேவியே!) அவனிடம் உள்ள பெருமைகளில் என் எது என்னிடம் குறைவாக இருப்பதாக எண்ணுகிறாய். என்னுடைய பெருமைகளை நீ முழுவதுமாக அறியவில்லை என்றே எண்ணுகிறேன். என்னுடைய சொந்த நாட்டிற்கு (தேஜோவதிக்கு) நீ வந்து பார்த்தாயேயானல் உன் மனது என்னை விரும்ப ஆரம்பித்துவிடும்.

எனது அரண்மனையில் முப்பது முக்கோடி வேலையாட்கள் (முப்பத்து முக்கோடி தேவர்கள்) நான் காலால் இடும் பணிகளை தங்கள் தலைகளால் செய்யக்காத்துக்கொண்டிருக்கிறார்கள். சகலவித மந்திர தந்திரங்களில் திறமை வாய்ந்த எட்டு பணிப்பெண்கள் (அஷ்டமாசித்திகளான அணிமா, மகிமா, இளகிமா, கரிமா, ப்ராப்தி, பிராகாம்யம், ஈசத்துவம், வசித்துவம்) நான் இடும் வேலைகளைச் செய்ய எனது அருகிலயே காத்துக்கொண்டிருப்பார்கள்.

என் மதிப்பிற்குரிய தந்தையாரால் (பரமேஸ்வரன்) படைக்கப்பட்ட பெரும் பராக்கிரமம் வாய்ந்தவர்களும், என் சகோதரர்களுமாகிய இரண்டு வீரர்கள்( ஸ்ரீமஹா வீரனார், ஸ்ரீமஹாகாளனார்)என் அருகிலயே எப்பொழுதும்னின்றுகொண்டு கண்ணை இமை காப்பதுபோல் என்னை பாதுகாப்பார்கள்.

எனது நகரிலே (தேஜோவதியில்) எப்பொழுதும்சுகந்த தென்றல் வீசும். அனேக உத்யாவனங்களும் அன்னங்கள் நீந்தி விளையாடும் நீரோடைகளும் ஏராளமாய்இருக்கின்றன. பொன்மழை பொழியும் மேகங்களும் பூமழை பொழியும் மேகங்களும் உனது கைக்கு எட்டும் தூரத்தில் அவ்வனத்திலே சஞ்சரித்துக்கொண்டிருப்பதை நீ பார்க்கலாம். எனது பெரும் மாளிகையைச் சுற்றிலும் உள்ள பழத்தோட்டங்களில் விளையும் பழங்களைத் தின்பவர்களுடைய அழகும் குன்றாது அத்தகைய மஹோன்னதமான பழங்களையும் நீயும் உண்டு மகிழலாம். உன் நாட்டிலுள்ள மரகள் பூக்களையும், பழங்களையும் தான் தரும். ஆனால் எனது நாட்டில் (தேஜோவதியில்) அபூர்வ சக்தி வாய்ந்த ஐந்து மரங்கள் ( மந்தாரம், பாரிஜாதம், சந்தனம், கற்பகம், ஹரிசந்தானம்) உள்ளன. அவைகள் பூக்களையும், பழங்களையும் மட்டுமின்றி நாம் விரும்பும் அன்ன ஆகாரங்களையும் பொன்மணிகளையும் கூட அள்ளித்த்ரும்.

காண்பவர்கண்கள் ப்ர்ரிதும் மகிழ்விக்கும் பேரழகு வாய்ந்த தெய்வீக பசுவொன்று (காமதேனு) எனது நாட்டில் (தேஜோவதியில்) உள்ளது. அதன் பாலை அருந்தினால் முதுமையும், வியாதியும் வராது. அதனது பால் அமிர்தத்தை விட இனிமையானது.

எனது நாட்டிலுள்ள (தேஜோவதியில்) இது போன்ற அதிசயங்களைப்பார்த்து உனக்கு திகட்டும் போது நீ என் வசமுள்ள யானையில் (ஸ்ரீகஜேந்திரன்) மீது அமர்ந்து ஈரேழு உலகையும் சுற்றிப்பார்த்து வரலாம். இல்லையெனில், என்வசம் உள்ள வலிமைமிக்க குதிரையின் (ஸ்ரீஅஸ்வராஜன்) மீதேறி நீ உலகைச் சுற்றிப்பார்த்து வரலாம். அந்தக்குதிரை காற்றைவிட விரைந்து செல்லும் வலிமையுடையது.நீ

பேரழகு வாய்ந்த பெண்மயிலான உனக்கு (பிரபாவதி) நாட்டியம் பார்ப்பதில் ஆசை என்றால் எனது தந்தையாரின் (ஸ்ரீநடராஜன்) நாட்டியத்தைப் பார்த்து ரசிக்கலாம். எனது தந்தையை நாட்டியத்தில் வெல்ல ஈரேழு உலகிலும் எவரும் இல்லை. எல்லா உலகங்களிலும் எவரும் இல்லை. எல்லா உலகங்களுக்கும் பேரின்பம் தரத்தக்க அவரது நடனத்தை ஒரு யுக கால அளவு கூட அலுப்படையாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

நீ (பிரபாவதி) புல்லாங்குழல் இசைப்பதில் இசையக் கேட்பதில் பிரியம் உள்ளவளென்றால் என் தாயார் (ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா) வாசிக்கும் புல்லாங்கழல் இசையைக் கேட்டு மகிழலாம். அவரது குழலோசையைக் கேட்டு உயிருள்ள ஜீவங்கள் மட்டுமின்றிஉயிரற்ற்ஜடப் பொருட்களும்கூட மயங்கி நிற்கும்.

உனக்கு (பிரபாவதி) வீணாகானம் கேட்பதில் ஆர்வமெனின் எனது சகோதரரின் மனிவியை (ஸ்ரீசரஸ்வதி) விட்டு வீணை வாசிக்கச் செய்து உன்னை சந்தோஷப்படுத்துவேன்.

எல்லாம் வல்ல வேத நாயகரின் புகழைப்பாடும் வேதகோஷத்தைகேட்க நீ (பிரபாதேவி) விரும்பினால் உனது அந்த விருப்பத்தையும் நான் நிறைவேற்றுவேன். எனக்கு (ஸ்ரீமஹாசாஸ்தா) நாங்கு முகங்களுடைய (ஸ்ரீபிரம்மதேவர்) சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவர் தனது நாங்கு முகங்களினாலுமெப்பொழுதும் வேத மந்திரங்களை துதித்துக்கொண்டிருப்பார். நீ அவர் எதிரில் சென்று அமர்ந்து அந்த வேத கோஷத்தைக் கேட்டு மகிழலாம்.