Heading : கடலெல்லாம் கதையாக - சத்யபாமா ஒப்பிலி
Comment : சத்தியபாமா ஒப்பிலியின் கடலெல்லாம் கதையாக வித்தியாச கோணத்தில் நன்றாக இருந்தது. கடற்கரைக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்று மறக்க முடியாத நினைவுகள் ஞாபகத்துக்கு வரும். மற்றவருக்கு சொல்லத் தெரியாது என்பதை அழகாக விளக்கியுள்ளார்.
நித்யகலா, பவானி, கோமளா , கும்பகோணம்
Heading : சுப்புசாமியின் சபதம்...! 2 - புதுவை ரா ரஜினி ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன்
Comment : சுப்புசாமியின் சபதம் 2-ல் பாட்டிகள் முன்னேற்ற கழகமா, கோள்முட்டிகள் முன்னேற்ற சங்கமா எனத் தெரியவில்லை. கோமு பாட்டிக்கு வயசாயிடுத்தோ இல்லியோ, அகல்யா துள்ளி குதித்து கோள்மூட்டி வேலை செய்யறா... சுப்புசாமி இன்னும் என்டர் ஆகலையா? அவர் தனி ரூட்டில் போவாரே?!
மாயா குப்புசாமி, ராதா வெங்கட் , ஊத்துக்கோட்டை
Heading : சந்திப்போம் பிரிவோம்- 5-பொன் ஐஸ்வர்யா
Comment : பொன்.ஐஸ்வர்யாவின் சந்திப்போம் பிரிவோம் 5-வது வாரத் தொடரில், அமெரிக்க நாசாவின் செயல்திறன், எலன் மஸ்க்கின் அசாத்திய சாதனைகள் உள்பட பலவற்றை படித்து மகிழ்ந்தோம். இவை எங்களை போன்ற உயர் முதுகலை அறிவியல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
தீட்சிதா, கௌஷிக், சாய்கிருஷ்ணா, கொல்கத்தா
Heading : பல்ப் சீரீஸ் 5 “கொரொனாவில் சிகையலங்கார கலைஞனானேன்” – மோஹன் ஜி
Comment : ஒவ்வொரு வாரமும் இவ்ளோ வரலாறு, தமிழ் கற்றறிதல் உள்பட ஏராளமான தொடர் கட்டுரைகளை போட்டா, நாங்க எப்போ படிச்சு முடிக்கிறது? அப்படியே படிச்சு முடிச்சாலும், என்ன படிச்சோம்னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. கொஞ்சம் குறைச்சுக்குங்க பாஸ்! வாசகர் கடிதம் போட வேணாமா? அதுவேற எண்ணிக்கை குறைஞ்சிட்டே வருது!
சிவகாமி, சுதாகர், ராதிகா , வந்தவாசி
Heading : பல்ப் சீரீஸ் 5 “கொரொனாவில் சிகையலங்கார கலைஞனானேன்” – மோஹன் ஜி
Comment : கொரோனா லாக்டவுன்ல எல்லாருமே செல்ஃப் கட்டிங், செல்ஃப் சர்வீஸ்தான். அப்பத்தான் குடும்பத்தினரின் அருமை பெருமைகள் அனைவருக்கும் புரிந்தது. இத்தகைய புரிதலை ஏற்படுத்திய கொரோனாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
சியாமளா விஸ்வம், கலிபோர்னியா, யு.எஸ்.ஏ
Heading : மாறிய மனசு - ஆனந்த் ஶ்ரீனிவாசன்
Comment : ஆனந்த் சீனிவாசனின் மாறிய மனசு சிறுகதை மிக அருமை. கதையை நகர்த்திச் சென்ற விதம் மிக அழகு!
சிவராமகிருஷ்ணன், பத்மினி, கலாவதி , ஐதராபாத்
Heading : வயது என்(ண்)பது... மாலதி ராஜா
Comment : வயசானவங்க டெக்னாலஜி பத்தி பேசினா, சின்ன வயசுக்காரங்களுக்கு 'இதெல்லாம் தேவையா?' எனக் கோபம் எகிறும். அதுவே அவர்கள் பழமையை போற்றி செயல்படுத்த கூறும்போது மதிப்பு கூடுகிறது. இக்கருத்தை கதை அழகாக உணர்த்தியது.
கனகதாரா, ஸ்வர்ணலதா , திருப்பதி, ஆந்திரா
Heading : கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி காயத்ரியின் "ஹாங்காங் மலைக் கச்சேரி" - ராம்
Comment : இளம் கர்நாடக இசை பெண் கலைஞர்களான ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளை முதன்முறையாக ஹாங்காங்கின் சின்ன மலைமீது ஏறவைத்து, ஜுகல்பந்தி நடத்தி சாதனை படைத்துவிட்டீர்கள் ராம். இதன்மூலம் நம்மூர் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் யாரேனும் நடந்து மலையேறுவதற்கு முன்வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எதையுமே வித்தியாசமாக செய்வதில் அசகாய சூரனய்யா நீர்... கீப் இட் அப்!
ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , சென்னை
Posted Date : 24/04/2024 08:12:36 pm
Heading : தேர்தல் திருவிழா !! கிளைமேக்ஸ் காட்சிகள் !-ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : குசும்புக்காரர் ஐயா நீர்... முக்கிய ஸ்டார் வேட்பாளர்களை மட்டுமே கூறிவிட்டு, அவர்களின் தேர்தல் பிரசாரம் எப்படி இருந்தது, அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறதா, வெற்றிவாய்ப்பு எப்படி என்பதைக் கூறாமல் புதுப்பட 'டிரெய்லர்' ஓட்டிவிட்டீர்! இரும், உம்மை ரிசல்ட் அன்று கவனித்து கொள்(?!)கிறோம்.
விஜயராகவன், கங்காதரன், ஸ்டான்லி , திருநெல்வேலி
Posted Date : 24/04/2024 07:23:14 pm
Heading : '... என்றான் அவன்!' (15)- என் குமார்
Comment : என்.குமாரின் 'என்றான் அவன்' தொடர் கவிதை வரிகள் வாரந்தோறும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. நாங்களும் உட்கார்ந்து யோசிச்சா, இதுமாதிரி 'கேட்ச்சிங்'கான வரிகள் பிடிபட மாட்டேங்குது!
இனியவன், சுகன்யா , திருச்செங்கோடு
Posted Date : 24/04/2024 07:09:23 pm
Heading : வாய் சொல்லில் வீரரடி
Comment : பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு என்பது பேச்சளவில், சட்ட வடிவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவில் பெண் தலைவர்கள் இருந்தும், முக்கிய விவிஐபி பெண் பிரமுகர்கள் தங்களுக்கு மட்டுமே சீட் கிடைத்தால் போதும் என்றே கருதுகின்றனர். மற்ற பெண்களுக்கு சீட் கிடைத்தால் 'வாழ்க' கோஷம் போட ஆளிருக்காது என்று கட்சித் தலைவர்களும் கருதுகின்றனர். இது என்றுமே மாறாது.
புருஷோத்தமன், கவுசல்யா , வேதாரண்யம்
Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Very well written
Harish, Usa
Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Good summary about the solar eclipse Very informative Thanks for Sharing
Vijinags, Louisville
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 20 - ரேணு மீரா
Comment : Good article related to goals
Many j, Chennai
Posted Date : 21/04/2024 02:12:50 pm
Status : Pending for Approval
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 20 - ரேணு மீரா
Comment : நல்ல தெளிவான விளக்கம், மிகவும் பயனுள்ள கட்டுரை.
Gowri, Madurai
Heading : தேர்தல் திருவிழா - ஒரே குடும்பத்தில் 350 ஓட்டுக்கள் - மாலா ஶ்ரீ
Comment : கோடீஸ்வரக் குடும்பம்..
Posted Date : 20/04/2024
Heading : கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி காயத்ரியின் "ஹாங்காங் மலைக் கச்சேரி" - ராம்
Comment : சந்திரகவுன்ஸ் ஒரு ஹிந்துஸ்தானி ராகம்... " மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி “ (படம்... பாக்கியலட்சுமி) இந்த ராகத்தில் அமைந்ததுதான்.. இன்னொரு பாடல்... ஒரு நாள் இரவு... பகல் போல் நிலவு (படம்... காவியத்தலைவி) எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி காயத்ரியின் "ஹாங்காங் மலைக் கச்சேரி" - ராம்
Comment : மலை ஏறியதும், மலயமாருதம் பாடுவாங்கன்னு நெனச்சேன்.... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : தேர்தல் திருவிழா !! கிளைமேக்ஸ் காட்சிகள் !-ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : நல்ல வேளையா திருமாவளவன் தப்பிச்சாரு... பானைக்கு பதிலா யானை கிடைச்சிருந்தா... யானைக்கால் வந்திருக்கும்... எம். ஆர். மூர்த்தி, மும்பை...
Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Very thorough article! Thanks for capturing this significant cultural moment in Tamil 👍🏼
Mridula , Toronto
Leave a comment
Upload