தொடர்கள்
கதை
அலறி ஓடிய நாரதர் - முனைவர் என். பத்ரி

20250709011545480.jpeg

திலோத்தமைக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அவளுக்கு தேவேந்திரனுடன் இருக்க துளியும் விருப்பமில்லை. நாரதரிடம் தனியாகச் சொன்னாள்,’ எனக்கு பூலோகத்தில் ஏதாவது ஒரு நல்ல பையனாக பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்கள். இந்த தேவேந்திரன் பண்ணும் ஹிம்சை தினமும் எனக்கு படு பேஜாரா இருக்கு. ஊர்வசி, ரம்பை, மேனகை தான் அவருக்கு ரொம்ப ஒஸ்தியா கீராங்கோ! என்ன கொஞ்சம் தூரத்தில் தான் வைச்சு பார்க்கிறாரு. அப்பப்ப வச்சு செய்யறாரு. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. எனக்கு டான்ஸ் ஆட சான்ஸே கொடுக்கறது இல்ல. எவ்வளவு நாள்தான் இந்த உடான்ஸ வெச்சிட்டு நானு காலத்த தள்ளறது. நிம்மதியா பூலோகம் போயி அங்க ஒரு ஏக பத்தினி விரதனோட என் மீது காலத்தை தள்ள போறேன். நீங்கதான் மூவுலக சஞ்சாரியாச்சே!

பூலோகத்துக்கு போயிட்டு எனக்கு ஏத்த மாப்பிள்ளையா பாத்துட்டு வாங்.க என்னை இந்த இந்திரலோகத்திலிருந்து சீக்கிரம் மீட்டெடுங்க. என்ன செய்வீங்களா? மாட்டீங்களா? என்று நாரதரிடம் கேட்டாள் திலோத்தமை.

திலோத்தமையின் நியாயத்தை புரிந்து கொண்ட நாரதர் கேபினட் கூட்டத்தை கூட்டினார். அதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்திரன் வெளிநடப்பு செய்து விட்டான். ஏக மனதாக திலோத்தமையின் ஆசை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாரதர் பூலோகம் வந்து இறங்கினார் பூலோகத்தில் இருந்து இறங்கின உடனே ஒரு கொடுவாள் மீசைக்காரன் அவருடைய கையில் இருந்த வீணையை அபேஸ் பண்ணினான். அதிர்ந்து போன நாரதர், தன்னை சாதாரண மனிதராக உருமாற்றிக் கொண்டார்

திலோத்தமைக்கு நல்ல வரனாக பார்க்க வேண்டும் என்று மனசுல நெனச்சுக்கிட்டாரு. முதலில் ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்றார் அது ஒரு அரசியல்வாதியின் வீடு. ’எக்கச்சக்க சொத்து இருக்கிறது. இங்கு வாக்கப்பட்டா திலோத்தமை சுகமாக இருப்பாள்’ என்று நினைத்தார்.

உள்ளே போவதற்கு முன்னால் காவலாளி அவரை தடுத்து.’என்னாப்பா, நீபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கே? நான் ஒரு மனுஷன் இங்க நிக்கற்து உன் கண்ணுல படலையா? உள்ள அப்பா பிள்ளை பேசிட்டு இருக்காங்க. இப்போ உள்ள போகக் கூடாது. கொஞ்ச நேரம் அப்படி நில்லு என்று சொல்லி மிரட்டினான்.

உள்ள காரசாரமான வாதம். அன்பின் பிடிப்பில் இருக்க வேண்டிய அப்பாவும், மகனும் இப்படி அசுரத்தனமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது நாரதருக்கு ஆச்சர்யமா இருந்தது.’ சரி. இந்த இடம் ஒத்து வராது’ என்று சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தார் நாரதர்.

அங்கிருந்து நீதிமன்றத்துக்கு போனார் ’நீதிமன்றத்தில் நல்ல நீதிபதி கிடைத்தால் திலோத்தமை குடும்பத்தில் நீதி பரிபாலனம் நல்லா இருக்கும்’ என்று நம்பினார். அங்கு அவர் பார்த்த நிலைமையே வேறு. அந்த நீதிபதி வீட்டில் கட்டு கட்டா காசு ஒரு பக்கம் எரிஞ்சிட்டு இருந்தது. பணத்தை போய் யாராவது எரிப்பாங்களா? கடைசியில வந்த செய்தி அவருக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ’அந்த பணமெல்லாம் அவர் நீதித் தராசை எடை போட்டு வாங்கியதாம். இவன் வீட்டில் திலோத்தமை குடுத்தனம் செய்யவே முடியாது. வேலைக்காரியாகத்தான் நடத்துவார்கள். இந்த இடம்வேண்டாம்’ என்று அடுத்து அங்கிருந்து நகர்ந்தார்

நேராக ஒரு கவர்மெண்ட் ஆபிஸர் ஒருத்தர் வீட்டுக்கு போனார். ஆபீஃஸை விட வீட்டுல தான் அவரப் பார்க்க அதிக ஆட்கள் வந்திருந்தாங்க. ஒவ்வொருவரும் கையிலும் ஒரு கவரை வைத்துக் கொண்டு அந்த ஆஃபீசரை கவர் பண்ணிக் கொண்டிருந்தாந்தாங்க.’ எல்லாத்தையும் முடிச்சு குடுத்துடறேன். கவலைப்படாதீங்க’ இதே டயலாக்க சொல்லி எல்லாரையும் வழி அனுப்பி வைத்தார் அந்த ஆபீஃஸர்.

நாரதர் விசாரித்ததில் அவர் சம்பளத்தை விட கிம்பளம்தான் அதிகமாக வாங்குறார் என்னிக்கு மாட்டிண்டு கம்பி எண்ணப் போறாரோ? தெரியல. சீக்கிரமே நடக்கும் மெட்ராஸ்ல பாதி வீடு அவங்க வாரிசுகள் பேரில்தானாம். அடுத்த கவர்மெண்ட் வந்த அவர அலேக்கா தூக்கிடுவாங்களாம்.’இந்த வீட்டுல கொடுத்தா திலோத்தமையின் நிம்மதியே போயிடும். வேண்டாம் சாமி’ என்று அங்கிருந்து புறப்பட்டார் நாரதர்.

இப்படி நிறைய பேரை பாத்தாச்சு.....

அதுக்கு அப்பால, ஒரு பெரிய காவல் அதிகாரியை பார்த்தார் நாரதர். அந்த காவல் அதிகாரி தன் வண்டியில உடன் பயணம் செய்த இன்னொரு பெண் காவல் அதிகாரியை பாலியல் பலாத்காரம் பண்ணாராம். அன்னைக்கு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. வேலியே பயிரை மேய்ந்த கதை இது தானோ?

இப்படியே 6 மாதம் ஆச்சு. மெட்ராஸ் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த நாரதர் துரும்பாக மாறிவிட்டார். அவர் பேசி வந்த தேவ பாஷை முழுக்க முழுக்க வண்ணாரப்பேட்டை தமிழ் பாஷையாக மாறிவிட்டது. முகம் வாடி, உள்ளத்தில் சோகம் சூழ்ந்து கொண்டது. இனிமேல் இந்த பூவுலகில் ஒரு நல்ல ஆண்மகனை திலோத்தமைக்கு மாப்பிள்ளையாக பார்க்க முடியாது என்று நம்பத் தொடங்கினார்.

நாரதர் இந்திரலோகம் வந்து நடந்ததைச் சொன்னார். திலோத்தமை,’அரிச்சந்திரகால உலகம் அப்படியே இருக்கும்’ என்று நம்பினேன் இப்படியா நாறிப் போச்சு?நான் இதை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல. சரி, சரி, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து பார்க்கலாம். உலக மக்கள் திருந்துறாங்களான்னு..

இல்லன்னா, நம்ம கண்ணனை இன்னும் ஒரு அவதாரம் எடுக்க சொல்லலாம்’ என்று சொல்லி நாரதருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டாள். திரும்பவும் இந்திரன் சபைக்கு போய் ’அன்னைக்கு 4 மணிக்கு டான்ஸ் ப்ரோக்ராம்ல கலந்துக்கணும்னு முடிவு பண்ணிட்டா.’

நாரதர் காதில் மட்டும், நடந்ததையெல்லாம் இந்திரன் காதில் போடாதீங்க. அவரு என்ன வச்சு செய்வாரு’என்று சொல்லி வைச்சாள்.’சரி’யென்று சொன்ன நாரதர் இந்திர லோகத்திற்குள் நுழைந்து அதன் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்.