தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240707181452852.jpeg

திருச்செந்தூர் கோவிலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு யாகம்.

எல்லாம் அந்த 2026 பிரார்த்தனை தானே !!

எப்படிப்பட்ட மழை வந்தாலும் தமிழகம் எதிர்கொள்ள தயார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்புறம் பேச்சு மாற கூடாது ?

உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போது துணை முதல்வர் பதவி இல்லை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

அடடா அவ்வளவுதானா சஸ்பென்ஸ் சப்புன்னு போயிடுச்சு !!

தமிழக காங்கிரஸ் விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செல்வப் பெருந்தகை தகவல்.

கோஷ்டி வாரியா தான் இட ஒதுக்கீடு இருக்கும் அப்படித்தானே தலைவரே.

கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி.

இதெல்லாம் அவங்க எப்பவும் பண்றது தானே !!

பாமக நிர்வாகிகள் அதிகாரங்கள் நிர்ணயம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு.

பரவாயில்லையே இவங்களுக்கு அதிகாரங்கள் எல்லாம் இருக்கா !!

அறுபடைவீடு ஆன்மீகப் பயணம் சுவாமி மலையில் ஏழாம் தேதி தொடங்குகிறது அமைச்சர் சேகர்பாபு.

அமைச்சர் பெரியார் மண்ணை ஆன்மீக பூமியா மாற்றாமல் விடமாட்டார் போல தெரியுது !!

அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயலும் அரசியல் எதிரிகள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.

அதான் உடனே கைது, சிறை என்று நடவடிக்கை எடுக்கறீங்களே தலைவரே !!

2029 மக்களவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் அமித்ஷா உறுதி.

ஆக அப்பவும் கூட்டணி ஆட்சி தான் தனித்து ஆட்சி கிடையாது !!

இளைஞர்களின் எதிர்கால கனவுகளில் வருவாய் ஈட்டிய மோடி அரசு காங்கிரஸ் விமர்சனம்.

கனவுகளை வைத்து காசு பார்த்திருக்காங்க சூப்பர் !!

கட்சியில் ஈடுபாட்டுடன் பணி செய்தால் உங்களை தேடி வரும் உதயநிதி ஸ்டாலின்.

அண்ணனுக்கு அப்படி தான் பதவி கிடைச்சது உண்மைதான் நம்புங்க !!

கல்விக்கடன் கிடைக்க கல்லூரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம் பாஜக வலியுறுத்தல்

ஏன் நீங்க நடவடிக்கை எடுக்க கூடாதா ?

நீதிமன்ற நடைமுறைகளால் மக்கள் மனம் தளர்கின்றனர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

நீங்க ஏதோ வாக்குமூலம் மாதிரி சொல்றீங்க உண்மையை கணம் நீதிபதி அவர்களே !!

உணவு உற்பத்தியில் மிகை நாடாக இருக்கிறது இந்தியா பிரதமர் பெருமிதம்.

அப்படியா !!

தரமான சாலைகளே நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் அமைச்சர் ஏவா வேலு.

அது சரி அந்த தரமான சாலை எப்ப போடுவீங்க அத சொல்லுங்க அமைச்சரே !!

அமலாக்கத் துறையை வரவேற்க டீ பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் ராகுல் காந்தி.

அப்புறம் வந்த பிறகு ஆளுங்கட்சி அராஜகம் குற்றம் சொல்ல கூடாது !!

அப்பா சொத்தை எடுக்காமல் பல துறைகளில் உழைத்துக் கோடீஸ்வரன் ஆனேன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அமைச்சர் இந்த மெசேஜ் யாருக்கு சொல்றாரு !!

போராட்டங்கள் ஊர்வலங்கள் காவல்துறையால் தடுக்கப்படுகின்றன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.

அப்ப காவல்துறை என்ன தான் செய்யணும் சொல்லுங்க !!

கட்டிய சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளிடம் தடுப்பணை.

தடுப்பணைக்கும் நமக்கும் ராசியே இல்லை. ஆனால், கமிஷன் கரெக்ட்டா வந்துடுச்சு !!