"விஜய் கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழில் தொல் திருமா பெயர் காணோம்" இது உள்ளே
வந்த அமர்ந்த விகடகவியாரிடம் கேட்டோம். "ஆதவ் அர்ஜுனா எழுதிய எல்லோருக்குமான தலைவர் அம்பேதகர் புத்தக வெளியீட்டு விழாவில், விஜய் வெளியிட தொல்.திருமா பெற்றுக் கொள்வதாக தான் ஏற்பாடு, ஆனால் இப்போது முன்னாள் நீதிபதி சந்துரு விஜய்யிடம் பெற்றுக் கொள்கிறார். அழைப்பிதழில் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் "என்றார் விகடகவியார்.
உடனே நாம் "நாங்களும் அழைப்பிதழை பார்த்தோம் தொல்.திருமாவளவன் பெயர் ஏன் இல்லை அவர்தான் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாரே" என்று நாம் கேட்டோம். அழைப்பிதழ் கிட்டத்தட்ட தயாராகும் நிலையில் ஆதவ் அர்ஜுனா தொல்.திருமாவளவனுக்கு பதில் நீதியரசர் சந்துரு கலந்து கொள்வார் என்று அழைப்பிதழில் திருத்தம் செய்தாராம். இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டால் நிகழ்ச்சி மேடையில் அவர் இருக்கும் போதே கூட்டணியில் இருந்து கல்தா என்று அறிவிப்பு வரும் என்று கண்டிப்பாக சொல்லி விடுங்கள் என்று அமைச்சர் ஏவா வேலுவிடம் முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அமைச்சரும் அவர் சொன்னதை அப்படியே சொல்லி இருக்கிறார். அதனால் தான் இந்த ஜகா" என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.
"ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூட கூட்டணி கட்சித் தலைவர் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை திமுக தான் தீர்மானிக்குமா என்று நாம் கேட்டபோது "அது எனக்கு தெரியாது திமுகவின் அடுத்த இலக்கு காம்ரேட்கள் தான். தொடர்ந்து தீக்கதிரில் அரசுக்கு எதிரான கட்டுரைகள் வரத் தொடங்கி இருக்கின்றன. அதேபோல் அதிமுக, திமுக கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது. ஆட்சியும் அமைக்க முடியாது என்று பாலகிருஷ்ணன் பேசியதையும் திமுக உன்னிப்பாக கவனிக்கிறது. இவர்களை எல்லாம் சட்டமன்றத் தேர்தலில் வெச்சி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது திமுக என்பது மட்டும் தெரியும் "என்றார் விகடகவியார்.
"சரி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் பொன்முடி மீது சேறுவீச்சுபற்றிய விஷயத்துக்கு வாரும் "என்று நாம் சொன்னபோது பொன்முடி மீது மட்டும் சேறு வீசப்படவில்லை அவருடன் சென்ற எம்பி மகன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மீதும் சேறுவீசப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள இருவேல் பட்டு கிராமம். மழை வெள்ளத்தில் அந்த கிராமத்தில் பெரிய அளவு பாதிப்பு மின்சாரம் இல்லை கிட்டத்தட்ட கிராமமே தண்ணீரில் மூழ்கியது எந்த நடவடிக்கையும் இல்லை மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அமைச்சர் அதிகாரிகள் வந்தார்கள். ஏற்கனவே பசி கோபத்தில் இருந்ததால் சில இளைஞர்கள் ஆவேசமாக அவர்கள் மீது சேறைவாரி இறைத்திருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்கு உள்ள கிராமம். அமைச்சர் அரசியல் அனுபவஸ்த்தர் இது பாட்டாளி மக்கள் கட்சி வேலை தான் என்று தெரியும். இப்போதைக்கு எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று பேசாமல் வந்துவிட்டார். காவல் துறையையும் அழைத்து யார் மீதும் எந்த வழக்கும் போட வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். இருந்தாலும் சேறு வீசியது யார் அவர்கள் பெயர் என்ன அவர்கள் பின்புலம் போன்ற விவரங்களை சேகரித்து உளவுத்துறை மூலம் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார்கள்." என்றார் விகடகவியார். அதன் பிறகு உளவுத்துறை அறிவுறுத்தலின் பேரில் தான் உதயநிதி ஸ்டாலினின் வருகை ரத்து செய்யப்பட்டது என்று தொடர்ந்து சொன்னார் விகடகவியார்.
"சரி அதிமுக செய்திக்கு வாரும் "என்று சொன்னோம். கள ஆய்வுக்கு சென்ற முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் எதிர்த்து குரல் ரகளை கலாட்டா என்ற செய்தி பெரிதாக பேசப்பட்டாலும் எடப்பாடி அதற்கெல்லாம் அசரவில்லை அவர்கள் கோரிக்கை என்ன எங்களுக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை எங்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்று தானே அப்படி என்றால் நமது கட்சியிடம் விசுவாசமாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் இது ஒரு ஆரோக்கியமான போட்டி இதையெல்லாம் நாம்பெரிது படுத்த வேண்டாம் அவர்களிடம் பேசி சரி செய்யும் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு பொதுக்குழு செயற்குழு கூட்டம் என்று அறிவித்து விட்டார் என்ற விகடகவியார் . பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா அதிமுக புதிதாக துவங்கிய விஜய் கட்சி எல்லோரும் திமுகவை விமர்சிக்கிறார்கள். எங்கே கோளாறு என்று முதல்வரிடமே சில மூத்த அமைச்சர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் "என்று சொல்லிவிட்டு ஜூட் விட்டார்.
Leave a comment
Upload