தொடர்கள்
மருத்துவம்
கண் நீரின்றி அமையாது உலகு -தில்லைக்கரசிசம்பத்

2024110607272815.jpg

வருங்காலத்தில் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு உலர் கண் நோய் பாதிப்பால் கண்பார்வை பாதிப்பு , குறைப்பாடு அல்லது முற்றிலும் கண்பார்வை இழக்க கூடும் என கண் மருத்துவர்கள் இப்போதே எச்சரிக்கிறார்கள்.

.உலர்கண் நோய் (Dry Eye Disease DED) எனும் கண்களை பாதிக்கும் நோய் நம் கண்களில் கண்ணீர் சுரப்பி வறண்டு, சரிவர ஈரப்பதம் இல்லாமல் போவதால் வருகிற நோயாகும்.

உலகில் உலர்கண்நோயால் 35 கோடி முதல் 70 கோடி மக்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவிலும் மக்கள் அதிகளவு உலர்கண் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. துரதிர்ஷ்டவசமாகஇந்த உலர்கண்நோயை கண்டறிவதும் மிகவும் குறைவான விகிதத்திலேயே உள்ளது.

இந்த நோய் அதிகரித்து இன்று பரவலாக காணப்படுவதற்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும்திரை நேரம்(Screen time) ஆகும். குழந்தைகள் முதல் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் முதற்கொண்டு எழுத்தாளர்கள், மருத்துவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், திரைத்துறையில்இருப்பவர்கள் என அனைத்து துறையினருமே பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் கருத்தடை மாத்திரை எடுத்தல் போன்ற காரணங்களால் உலர்கண் நோய் ஏற்படுகிறது.

மெனோபாஸை கடந்த வயது முதிர்ந்த பெண்களையும் சேர்த்து சர்க்கரை நோயாளிகள், ஷோக்ரன் (Sjogren) நோயாளிகள், ஸ்டீவன்ஸ்ஜான்சன் நோய்குறி கொண்டவர்கள், மற்றும் தன்னுடல் தாக்கு நோய் உடைவர்களை இந்நோய் பாதிக்கிறது. இந்த நோயை பற்றிய ஆய்வுகளோ, கட்டுபடுத்தும் விதிமுறைகளோ இன்னும் இங்கேசரியாக வகுக்கப்படவில்லை என்பதே, இன்றைய நிலை. மேலும் பொதுமக்கள் எத்தனை பேருக்குஉலர்கண் நோயை பற்றிய விழிப்புணர்வு உள்ளது, என்பது நம்முன் வைக்கப்படும் மிக முக்கியகேள்வி.

இன்றைய மருத்துவத்துறையில், எந்த ஒரு சிகிச்சையுமே, அந்நோயை பற்றியவிழிப்புணர்வையும், வருமுன் காப்பு முறையில் முன் கூட்டியே அந்நோயை கண்டறிந்து அதற்கான, சரியான மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சை செய்வது தான். இதற்கான விழிப்புணர்வு முயற்சியாக,

20241106072951915.jpg

கடந்த வாரம், சென்னை தியாகராய நகரை சேர்ந்த பிரபல கண்மருத்துவமனையான, கோட் (CODE) கண் மருத்துவமனையில், “கண் நீர்” என்ற ஒருசெயல்திட்டம் அறிமுகப்படுத்தபட்டது. CODE நிறுவனர்களான, மருத்துவர் திருமதி கீதா ஐயர், மற்றும் மருத்துவர் பாஸ்கர் இருவரும், உலர்கண் நோய்க்கான “கண் நீர்” திட்டப்பணியை பற்றிவிரிவாக உரையாற்றினார்கள்.

இருபது வருடங்களுக்கு மேலாக கண்மருத்துவத் துறையில், தன்னுடைய முக்கிய பங்களிப்பை அளித்துவரும் மருத்துவர் கீதா, உலர் கண் நோயை பற்றியமுக்கிய தரவுகளை நம்மிடையே பகிர்ந்துக்கொண்டார். கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில்நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் பாஸ்கர் ஸ்ரீனிவாசன், CODE மருத்துவமனையின் சிறப்புகளைஎடுத்துரைத்தார்.

20241106073035157.jpg

இந்த செயல்திட்டத்தின் முக்கிய கூறுகளாக, பொதுமக்களுக்கு உலர்கண் நோயை பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோயை முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்துக்குசிகிச்சைக்கு உட்படுத்துதல், கண் மருத்துவம், பல் மருத்துவம், முடக்குவாத மருத்துவம், தோல்நோய் மருத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உலர்கண் நோய்க்கான, ஒரு முழுமையானசிகிச்சை திட்டத்தை உருவாக்குதல், போன்றவை “கண் நீரின்” முக்கியமான செயல்பாடுகளாகவிளக்கப்பட்டன. கண்களில் குறைவாக நீர் சுரப்பது அல்லது முற்றிலும் நின்று போவது நம் கண்களுக்கு அபாயகரமானது என்கிறார் மருத்துவர் கீதா ஐயர். கண்ணீர் அற்ற கண்கள் நம்கண்களுக்கு ஏற்படும் நோய் தொற்றை தடுக்காது.

இதனால் மிக சுலபமாக தொற்றுகள் ஏற்பட்டு, அது கண்களை பாதிக்கும். கண்ணீரில்லாத குறைப்பாட்டினால், கண்ணில் வீக்கங்கள் ஏற்பட்டுகண்களை திறக்கவே முடியாமல் போகலாம். உலர்கண் நோய் முற்றும் போது, கருவிழிகள்சேதமடைந்து, அது பார்வை இழப்பு வரை கொண்டு செல்லலாம் என மருத்துவர் கீதா ஐயர் எச்சரிக்கிறார்.

கண்களில் எரிச்சல், வெளிச்சத்தை கண்டாலே குத்துதல் போன்ற உணர்வு, கண் அரிப்பு,சிவந்து போவது, பார்வை மங்கலாக தெரிவது போன்ற சில பிரச்சனைகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை பார்க்க வேண்டும். கண்ணீர் இல்லையேல் கண்கள் இல்லை. வற்றிப்போன கண்களால் இவ்வுலகை காண முடியுமா? வான் மழையால் பூமி பிழைத்திருப்பது போல கண்ணீரால் கண்கள் பிழைத்திருக்கின்றன. கண்கள் வற்றாமல் பாதுக்காத்துக்கொள்வோம்.