சென்ற வாரம் வங்க கடலில் புயல் உருவாகியது கிட்டத்தட்ட தமிழ்நாட்டை புரட்டி போட்டது என்று கூட சொல்லலாம். புயல் பற்றிய தகவல்களை அப்டேட் பண்ணும் வானிலை அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் புயல் பற்றி குறிப்பிடும் போது இந்தப் புயலுக்கு இதுதான் பெயர் என்றும் சொல்வார்கள். உதாரணமாக சென்ற வாரம் வீசிய புயலுக்கு ஃபெங்கல் என்றுதான் எல்லா ஊடகங்களும் உச்சரித்து பேசியது எழுதின. ஆனா சென்னை வானிலை மையம் உங்கள் உச்சரிப்பு தவறு ஆங்கிலத்தில் FENGAl என்று எழுதப்படும் இந்தப் பெயரை தமிழில் ஃபெஞ்சல் என்று உச்சரிக்க வேண்டும் என்று திருத்தியது. அதன் பிறகு ஊடகங்களும் தவறை சரி செய்து கொண்டது.ஆனால் ஃபெங்கல் என்ற பெயரை மீம்ஸ்காரர்கள் பொங்கல் என்று ஏகத்துக்கு கலாய்த்து கொண்டிருந்தார்கள். வானிலை மையம் இதற்கான பெயர் காரணத்தையும் விளக்கி சொன்னது. இந்தப் பெயர் வைத்தது அரேபியா. ஃபெஞ்சல் என்பதற்கு அர்த்தம் மொழி பாரம்பரியம் கலாச்சாரம் அடையாளம் இது அரபிய மொழி வார்த்தை என்ற விளக்கமும் சொன்னது.
புயலுக்கு பெயர் வைப்பது உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் குழுவின் உறுப்பு நாடுகள் தான் புயலுக்குப் பெயர் வைக்கின்றன. வட இந்திய பெருங்கடல் அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு தான் பெரும்பாலும் பெயர் வைக்கப்படுகிறது.
இந்த அமைப்பில் இந்தியா, வங்காளதேசம், மாலத்தீவு ,ஈரான்,ஓமன், மியான்மர், பாகிஸ்தான், சவுதி அரேபியா, கத்தார், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் புயல்களுக்கு பெயர் வைப்பதற்காக 13 பெயர்களை கொடுப்பார்கள். மொத்தம் 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியலின் வரிசைப்படி வட இந்தியா பெருங்கடல், அரபிக் கடல், மற்றும் வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்படும்.
இதன் அடிப்படையில் தான் இந்த முறை சவுதி அரேபியா வழங்கிய ஃபெஞ்சல் என்ற பெயர் வங்க கடலில் உருவாகியிருந்த புயலுக்கு வைக்கப்பட்டது.
இதற்கு அடுத்து இந்த உறுப்பு நாடுகளில் உருவாகும் புயலுக்கு இலங்கை இலங்கை அனுப்பி இருக்கும் 13 பெயர்களில் ஒன்றான ஷக்தி என்ற பெயர் வைக்கப்படும். அதற்கு அடுத்து வரிசைக் கிரமம் படி தாய்லாந்து குறிப்பிட்டிருக்கும் மோன்-தா என்ற பெயர் வைக்கப்படும்.
பியார், பாஸ், ஃ பர்னூஸ் என்று மூன்று புயல்கள் 2005-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அடுத்தடுத்து வங்க கடலில் உருவானது இதில் ஃபர்னூஸ் புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது மொத்தம் 773 மில்லி மீட்டர் மழை பெய்து கிட்டத்தட்ட தமிழ்நாடு வெள்ளைக்காடானது.
2008-ல் ஜல் புயல், 2010-ல் தானே புயல், 2011-ல் நீலம் புயல், 2012-ல் மடிப்புயல், 2013-2016- ல் ரோனு, கியான்ட், நடா, வர்தா என்று நான்கு புயல்கள் நம்மை போட்டு தாக்கியது. 2017-ல் ஓக்கி புயல், 2018-ல்கஜா புயல், 2020-ல் நிவர் புயல், புரேவி புயல் என்று இரண்டு புயலின் தாக்கம். 2022-ல் மாண்டஸ் புயல், 2023-ல் மிக்ஜாம் புயல் இப்படி பல புயல்கள் தமிழகத்தை புரட்டிப் போட்டு இருக்கிறது.
ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 50 ஆண்டு கால தமிழக புயல் வரலாற்றில் இது போன்றதொரு மெதுவாக நகர்ந்து, கரை கடந்த புயல் இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். அதாவது பொதுவாக புயல்கள் எப்போதும் 250 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை, 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். ஆனால் ஃபெஞ்சல் புயல் 3 கி.மீ. வேகத்தில் தான் பயணித்தது. 500 கி.மீ. தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. புயல்கள் அது உருவான நாளில் இருந்து 3-வது நாளில் வலுவிழக்கும். ஆனால், நவம்பர் 25ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 4 நாட்கள் கழித்து, அதவாது நவம்பர் 29ம் தேதிதான் புயலாக உருமாறியது.
கடந்த 50 ஆண்டு கால தமிழக புயல் வரலாற்றில், இப்படி மெதுவாக நகரும் ஒரு புயல் இருந்தது இல்லை. பொதுவாகவே, கடற்கரை பகுதியில் இருந்து ஒரு புயல் கடந்து விட்டால் அது வலுவிழக்கும்.
ஆனால், 9 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டு, கடலில் உள்ள ஈரப்பதத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னரே மெதுவாக கரை கடக்க ஆரம்பித்து இருக்கிறது. அதிக மழைப் பொழிவை பல மாவட்டங்கள் எதிர்கொண்டதற்கு இதுவே காரணம் எனலாம். வானிலை தரவுகளை மேம்படுத்தப்பட்ட முறையில் கணிக்க, சரியான சிஸ்டம் நம்மிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இது போன்ற புயல் காலத்தில் அரசாங்கம் அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பது இலவச உணவு ஏதோ கொஞ்சம் நிவாரணம் என்பதை கிட்டத்தட்ட எல்லா ஆட்சியாளர்களும் சடங்காக செய்கிறார்கள். ஆனா புயலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு அந்த இழப்பிலிருந்து வெளிவர நீண்ட காலம் ஆகும். ஒவ்வொரு முறையும் விவசாயிகளுக்கு தான் புயலால் பாதிப்பு அதிகம். இப்போது கூட அறுவடைக்கு வைத்திருந்த நெற்பயிர்கள் முழுவதும் அழுகி வீணாகிவிட்டது. அரசாங்கம் அவர்களுக்கு தரும் நிவாரணம் யானை பசிக்கு சோளப் பொரிய என்ற கதைதான் .அரசாங்கம் என்றுமே நிரந்தர தீர்வு பற்றி யோசிப்பதில்லை. புயலால் பல கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது. அதை எப்படி சேமிப்பது பற்றி என்று யோசிக்காத ஆட்சியாளர்கள் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் பற்றி யோசிக்கிறார்கள் இவர்கள் ஆட்சியின் லட்சணம் இதுதான்.
Leave a comment
Upload