தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

20241104070335374.jpg

ராஷ்மிகா

பஷ்பா புகழ் ராஷ்மிகா நடித்த சுல்தான் மற்றும்வாரிசு படங்கள் அவருக்கு சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை. தமிழில் தான் தவிர்க்க முடியாத நாயகியாக இருக்க விரும்புகிறார் ராஷ்மிகா. இப்போது குபேரா படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறார். இந்தப் படம் தன் ஆசையை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார்.

சாய் பல்லவி

தென் மாநில படங்களைப் பொறுத்தவரை நயன்தாரா தான் முதல் இடத்தில் இருந்தார். அவரது திருமணம் இரண்டு குழந்தைகள் நல்ல பட வாய்ப்புகள் கிடைக்காதது, எல்லாம் தற்சமயம் நயன்தாராவுக்கு பின்னடைவு. இப்போது நயன்தாரா இடத்தை மெல்ல சாய் பல்லவி பிடிக்க தொடங்கி இருக்கிறார். அமரன் படம் வெற்றி. ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதை வேடம் என்று முன்னேறிக் கொண்டிருப்பதால் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி விட்டார் சாய் பல்லவி.

அஞ்சலி

நடிகை அஞ்சலி தற்சமயம் கேம் சேஞ்சர் படத்தில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கையாக கவர்ச்சி படத்திலும் நடிக்க தயார் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தான் சார்பாக தெலுங்கு மற்றும் தமிழில் பேச இரண்டு மேனேஜர்களை நியமித்திருக்கிறார் நடிகை அஞ்சலி.

விக்னேஷ் சிவன்

எக்ஸ் தள பக்கத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டார். அவரைப் பற்றி எதிர்மறையாக நிறைய விமர்சனங்கள் வந்தது தான் காரணம்.

தமன்னா

இந்தியில் ராஜ்குமார் ராவ் நடித்த ஸ்திரி 2 படத்தில் ஆடிய '' ஆஜ் கி ராத்" பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இது மக்கள் விரும்பும் பாடலாக இருக்கும் என்று நினைத்தேன். இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று ஆச்சரியப்படுகிறார் நடிகை தமன்னா.

சிம்பு

நான் காதலித்தவர்கள் என்னோடு ரிலேஷன் ஷிப்பில் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். என்னை ஏமாற்றுவார்கள் என்று தெரிந்து தான் காதலித்தேன் என்று சிம்பு சொன்ன பழைய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் சிம்பு பெயரை குறிப்பிடாமல் நான் அவரிடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அவர் என்னை சினிமாவை விட்டு விலக சொன்னார் கடைசியில் அந்த உறவே முறிந்து விட்டது என்று சொல்லி இருந்தார். அதற்கு பதில் தானாம் இது. .

மீனாட்சி சவுத்ரி

சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் single தான். mingle ஆக விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் நாகர்ஜுனா சகோதரி மகளுடன் தற்சமயம் இவர் கிசுகிசுக்கப்படுகிறார்.

நஸ்ரியா

தமிழில் மீண்டும் பெரிய படத்தில் நடிக்க தூது விடுகிறார் நஸ்ரியா பகத் பாஸில்.

மமீதா பைஜு

சூர்யாவின் 44-வது படத்தின் கதாநாயகியாக முதலில் நடிக்க இருந்தவர் மமீதா பைஜூ. வேண்டாம் மிகவும் சின்ன பெண்ணாக தெரிவார் என்று சூர்யா சொன்னதால் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ஸ்ரீ லீலா

சமீபத்தில் வாரணாசியில் சுவாமி தரிசனம் செய்தார் ஸ்ரீலீலா. புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அந்தப் பாட்டு ஹிட் ஆக வேண்டும் என்று தான் பிரார்த்தனை.

ஜேசன் சஞ்சய்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள் என்பதுதான் கதை கருவாம். சந்திப் கிஷன் கதாநாயகன். ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்.

ராஷ்மிகா

எனது சம்பளம் பற்றி வரும் செய்தி உண்மை அல்ல, வதந்தி நம்பாதீர்கள் என்று சமீபத்தில் நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார் ராஷ்மிகா. வருமானவரித்துறை ஏதாவது விவரம் கேட்டிருப்பார்களோ ?

ஸ்வாசிகா

ஆர். ஜே.பாலாஜி இயக்கும், சூர்யா நடிக்கும் படத்தில் ஸ்வாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி திரிஷா.