கட்சிக்குள் சண்டை போடாதீர்கள் கார்கே அறிவுரை.
இந்தக் கட்சியில் முக்கிய கொள்கை அதுதான் அதைப் போய் வேண்டாம் என்கிறார் தலைவர் !!
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது காங்கிரஸ் திட்ட வட்டம்.
ஆமா அவங்க ஆட்டத்துக்கு சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க !!
வாழ்க்கையில் விசித்திரமான அனுபவங்கள் வந்து விடுகிறது வைகோ.
தலைவர் ஏதோ பழைய விஷயங்களை ரீவைண்டு பண்ணி பார்த்து இருக்காரு அதான் இப்படி பேசறாரு !!
அதிமுக கள ஆய்வுகளில் நடப்பது மோதல் அல்ல கருத்து பரிமாற்றம். எடப்பாடி பழனிச்சாமி.
கருத்துப் பரிமாற்றம் நாற்காலியை ஒருவர் மீது ஒருவர் பரிமாற்றமாக கொஞ்சம் முன்னேறி இருக்கு அவ்வளவுதான் !!
சென்னையில் 334 இடங்களில் வெள்ளம். நேரடி ஆய்வுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் தகவல்.
போன மாசம் தண்ணியே தேங்காதுன்னு சொன்னீங்க !!
டாஸ்மாக் மூட வலியுறுத்தல்.
இந்த மழை குளிருக்கு ஸ்வட்டர் வேண்டாமா தலைவரே !!
கூட்டணி வலுவாக உள்ளது திமுக வலுவாக இல்லை முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர்.
அண்ணா இத நம்ப சொல்லலாமா !!
சாதகத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு மத்திய அமைச்சர் ஜெயசங்கர்.
படிக்கும் போது வரலாறு பாடத்தில் பாதிக்கப்பட்டிருப்பாரு அமைச்சர்.
தா.ம.க தொடங்கி பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது ஜி.கே.வாசன்.
ஆனா என்ன சாதிச்சிடீங்கன்னு மட்டும் கேட்காதீங்க !!
திமுக அரசை வி.பி.சிங் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது டாக்டர் ராமதாஸ்.
சிலையெல்லாம் வச்சிருக்காங்க !!
திமுகவில் திறமையானவர்களுக்கு வாய்ப்பில்லை அண்ணாமலை.
உங்க கட்சியில் இருக்கா ?
எடப்பாடி குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதே இல்லை முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆமா உண்மை எல்லாம் சொல்லிடுறாரு !!
முதல்வர் பேசும் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனா நீங்க தான் யாருமே வேண்டாம்னு சொல்றீங்களே !!
ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் நேரு.
நீங்கதான் தைரியமான ஆசாமி ஆச்சே ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்ல வேண்டியது தானே !!
தமிழக மக்கள் எல்லா வகை உணவும் உண்பார்கள் தவிர மதவாதம் என்னும் நஞ்சை எப்போதும் உண்ண மாட்டார்கள். தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர்.
அதாவது பாஜகவை எதிர்த்து கருத்து சொல்றாராம் !!
காற்று திசை மாறி அடிக்கும் போது அரசியலில் முக்கிய இடத்துக்கு வருவோம் வைகோ.
அண்ணா காற்று திசை மாறி அடிச்சா புயலா தான் மாறும் அப்ப நம்ம காணாம தான் போவோம் முக்கிய இடத்துக்கு எல்லாம் வரமாட்டோம்!!
Leave a comment
Upload