கோவை நகர மைய பகுதியான வடகோவை ஆர் .எஸ் .புரம் சிந்தாமணி ஜங்க்ஷனில் ஒரு ஆவேச ஆக்ரோஷ புலி கிலியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது .
பலர் நடுக்கத்தில் வறட்டு தைரியத்தை வளர்த்து கொண்டு அருகே சென்று பார்க்க .
அந்த புலி ஒரு இரும்பு புலி என்று நிம்மதி பெருமூச்சியில் நகர வேண்டியிருக்கிறது .
இந்த புலியை நகரின் மையத்தில் வைத்தது கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் முனைவர் .வாசுகி மற்றும் விலங்கியல் துறையினர் .
ஜூலை 29 ஆம் தேதி உலக புலிகள் தினம் மற்றும் இந்த வருடம் புலிகளின் அடர்த்தி உயர்ந்திருப்பதும் புலியை காக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் முப்பது லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு கம்பிரமாக நிற்கிறது இந்த பாயும் புலி!.
நாம் கொங்கு நாடு கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர் முனைவர் .வாசுகியை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" நாம் வன உயிரினங்களை பற்றி பேசுகிறோம் அவைகளை காப்பாற்ற முழு முயற்ச்சியை எடுப்பதில்லை .
நம் கோவையை சுற்றி உயிர்சூழல் ஸ்பாட் இருக்கிறது ஐ நா இந்த ஹாட் ஸ்பாட்களை அங்கீகரித்துள்ளது .
அதிலும் கோவை மிக முக்கிய மூன்று புலிகள் காப்பகங்களை சுற்றி வீற்றிருக்கிறது .அவை முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் .
கோவையை சுற்றியுள்ள எல்லைகள் முழுவதும் வளமான புலிகள் வாழும் வனம் .
புலிகள் அழிவில் விளிம்பில் இருப்பதால் அதை காப்பாற்றும் கடமையில் நாம் எல்லோரும் முன் வரவேண்டும் .
புலிகளை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது என்பதை உணர்த்த உருவானது தான் இந்த புலி உருவத்தை உருவாக்கி நகரின் மையத்தில் வைத்துள்ளோம் .
இதை பார்க்கும் அனைவருக்கும் புலிகளின் மேல் ஒர் ஆதங்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார் வாசுகி .
விலங்கியல் பேராசிரியர் முனைவர் ராஜா கூறும்போது ,
" இந்த வருடம் நம் நாட்டின் தேசிய விலங்கிற்கு தனி சிறப்பு இந்திய புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது .
அதிலும் நம் முதுமலை , சத்தியமங்கலம் , ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது வனத்துறையின் பாதுகாப்பு அம்சமும் புலிகள் சுதந்திரமாக தங்களின் வனத்தில் எந்த இடையூறும் இல்லாமல் சுற்றி வாழ்வதனால் ஏற்பட்ட இனப்பெருக்கம் இந்த வருடம் ஜூலை 29 ஆம் தேதி உலக புலிகள் தினம் அர்த்தமுள்ளதாகவும் வன உயிரின ஆர்வலர்களுக்கும் ,
வனத்துறையினருக்கும் ஒரு நிறைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம் .
இதை உணர்த்த பிரதிபலிக்க எங்க கல்லுரி இயக்குனரின் முயற்ச்சியால் 12 அடி நீளம் ,6அடி உயரம் 900 கிலோ எடை கொண்ட புலியின் இரும்பு உருவம் நகரின் மைய பகுதியில் கம்பிரமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் .
புலி ஜென்டிலான மிருகம் தானே அதை ஏன் ஆக்ரோஷமாக வடிவமைத்துள்ளீர்கள் ?! என்று கேட்க
" ஜென்டில் மற்றும் சாதுவாக அமைத்திருந்தால் மக்கள் ஆச்சிரியமாகவும் உன்னிப்பாகவும் பார்க்கமாட்டார்கள் என்பதால் தான் பாயும் புலியை சித்தரித்து அமைத்துள்ளோம் " என்று கூலாக கூறினார் .
இனி கோவை செல்பவர்கள் இந்த பாயும் புலியை சந்திக்காமல் திரும்பமாட்டார்கள் !.
Leave a comment
Upload