தொடர்கள்
அரசியல்
தராத பேட்டி--மிஸ்டர் ரீல்

20250701183107304.jpeg

ஓ. பன்னீர்செல்வம்

முதல்வரை எதற்கு அவரது வீட்டில் போய் சந்தித்தீர்கள்?

20250702071042642.jpg

அவரது உடல் நலம் விசாரிக்க தான் வேறு ஒன்றும் இல்லை.

அதுதான் ஏற்கனவே நடைப்பயிற்சியின் போது அவர் உடல் நலம் விசாரித்த போட்டோ வந்திருக்கிறதே.அப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று மட்டும் தான் விசாரித்தேன். டாக்டர் என்ன சொன்னார் என்ன மாத்திரை சாப்பிடுகிறீர்கள் தினந்தோறும் நர்ஸ் ஊசி போடுவாரா போன்றவை எல்லாம் நான் கேட்க மறந்து போனேன், அது எல்லாம் விலா வாரியாக விசாரிக்க தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன். தவிர அவருடைய சகோதரர் மு.க. முத்து இறந்து போனதற்கு அவருக்கு அனுதாபம் தெரிவிக்க மறந்து போனேன், அதற்கும் சேர்த்து தான் போனேன். மற்றபடி நானும் அரசியல் பேசவில்லை அவரும் அரசியல் பேசவில்லை.

மத்திய அரசு நிதி வழங்காததற்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு இந்த விஷயம் இப்போது தான் தெரிந்ததா இரண்டு மூன்று மாதங்களாக இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.

நான் பழக்க தோஷத்தில் ஜெயா செய்திகள் மட்டும் தான் பார்த்து வந்தேன். திடீரென கலைஞர் செய்தி பார்த்தேன் அப்போதுதான் இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. அதனால் உடனே கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

பிரதமரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டும் அவர் ஏன் மறுத்துவிட்டார்.

இது பற்றி அண்ணாமலையிடம் கேட்டேன் எடப்பாடி அவரை ரொம்பவும் மிரட்டி வைத்திருக்கிறார். என்னை கூட வேண்டாம் என்கிறார் எப்போது பிரதமர் நானும் வேற வழி பார்க்க போகிறேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள் என்றார் எனக்கு ஆழ்வார்பேட்டைக்கு வழி தெரியும் அதனால் வந்தேன் அவ்வளவுதான்.

ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் உங்களை தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க சொல்லி தானே ஆலோசனை சொன்னார்.

அவர் சொல்லும் ஆலோசனையை கேட்டுக் கொண்டு அதற்கு எதிர்மறையாக நாம் செயல்பட்டால் தான் நம்மால் உருப்பட முடியும். எனவே அவர் ஆலோசனை அடிக்கடி இனிமேல் கேட்பேன்.

அதிமுக மீட்பு இயக்கம் என்ன ஆகும்?

உண்மையான அதிமுக இப்போது திமுக தான். முன்னாள் அதிமுகவினர் எல்லோரும் அங்கு செல்வ செல்வாக்குடன் இருக்கிறார்கள். எனவே நானும் செல்வ செல்வாக்கு உடன் இருக்க தீர்மானித்து விட்டேன் இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.