விவசாயிகள் தற்கொலை கடந்த கால் நூற்றாண்டாக இந்தியாவில் பூதாகாரமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். மற்ற நாடுகளில் இப்படி நடக்கிறதா தெரியவில்லை.
இந்தியா ஒரு வேளாண்மை நாடு. இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 70 சதவீதம் மக்கள் விவசாயம் சார்ந்தவர்கள் தான்.
வேளாண்மை பருவ மழை சார்ந்தே இருக்கிறது. பருவ மழை பொய்ப்பதும், தவறுவதும் தற்போதைய காலத்தில் அதிகம் காண்கிறோம். அதிலும் மிகையான மழை வந்தும் பயிர்கள் நாசம் ஆவதும் சிற்சில சமயங்களில் ஒரு காட்சியாகவே இருக்கிறது. ஆயிரங்களில் இருந்த ஏரிகள் குளங்கள் தற்போது காணாமல் போனது. இருக்கும் இந்த வகைகள் தூர் வாராமல் இருந்தால் பெய்த நீர் தங்குவதே கிடையாது.
பருவ மழை பொய்ப்பதும், தவறுவதும் என்ற காரணங்களைத் தவிர இடைத்தரகர்கள் சுரண்டல், விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காதது போன்றவைகளும் விவசாயிகள் தற்கொலைக்கு காரணங்களாக பட்டியலிடப்படுகின்றன.
தற்கொலை என்ற காரணியில் விவசாயமென்ற காரணம் ஒட்டு மொத்தமாக பார்க்கப்படுகிறது. இறந்தவர் விவசாயி என்பதை வைத்து அவர் விவசாயத்தில் தோல்வியுற்றார் அதனால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற சாயமும் பூசப்படுகிறது.
விவசாயிகள் தற்கொலைகளை நாம் கவனிக்க வேண்டும்.
சென்ற மார்ச் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 479 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று ஜூலை 4 ஆம் தேதி மஹாராஷ்ட்டிர மாநில மந்திரி மகரந்த் பாட்டில் அசெம்பிளியில் கூறியிருக்கிறார்.
மகாராஷ்ட்டிராவில் தான் இந்தியாவிலேயே விவசாயிகள் தற்கொலைகள் அதிகம். அதற்கான காரணங்களாக சொல்லப்படுபவை இவைதான்.
1) கடன் 2) போதை பழக்கம், 3) சுற்றுச்சூழல் பிரச்சினைகள், 4) விவசாய விளைபொருட்களுக்கான கிடைக்கும் குறைவான விலைகள், 5) மன அழுத்தம் மற்றும் குடும்பப் பொறுப்புகள், 6) அரசாங்கத்தின் அக்கறையின்மை, 7) மோசமான நீர்ப்பாசனம், 8) சாகுபடி செலவு அதிகரிப்பு, 9) தனியார் கடன் வழங்குபவர்கள், 10) ரசாயன உரங்களின் பயன்பாடு 11) பயிர் தோல்வி, 12) மழை பொய்ப்பு.
பெரும்பாலான தற்கொலைகள் மகாராஷ்டிராவில் (19,909) பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 16,883 தற்கொலைகளும், மத்தியப் பிரதேசத்தில் 14,578 தற்கொலைகளும், மேற்கு வங்கத்தில் 13,103 தற்கொலைகளும், கர்நாடகாவில் 12,259 தற்கொலைகளும் முறையே 13.0%, 11.0%, 9.5%, 8.6% மற்றும் 8.0% ஆக உள்ளன.
தெரிந்தோ தெரியாமலோ எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு விவசாயியின் உயிருக்கும் தற்கொலைக்கும் அரசியல் சாயம் பூசப்படுவதை தவிர்க்க முடியாது.
இந்த தற்கொலை நோயிலிருந்து தப்பிக்க கீழ்கண்ட வழிகளைக் கையாளலாம்:-
நிலையான குத்தகை முறை கொண்டுவருவது விவசாயிகளைக் காக்கும்.
விவசாயிகளுக்கு தகுந்த தக்க உபாயங்களைக் கூறும் குழுக்களை அமைக்கலாம்.
இதற்கிடையில் கீழ்கண்ட செய்திகளையும் தவற விடுவதிற்கில்லை:-
இழப்பீடுகள் தற்கொலைகளை ஊக்குவிக்கும் என பஞ்சாப் உயர்நீதிமன்றம் ஹரியானா கோர்ட் கூறியுள்ளது.
கடன் தள்ளுபடிகள் செய்தபோதிலும் தற்கொலைகள் குறைந்தபாடில்லை.
இன்னொரு கோணத்தில், இந்தியாவில் விவசாயத்திலிருந்து வரும் வருமானம் வரிக்கு உட்படுத்துவது கிடையாது. கிட்டத்தட்ட 60% ஜனத்தொகை வரி கட்டுவதில்லை. மாறாய், அவர்களுக்கு உரங்கள் மாநியம், விதைகள் மாநியம் என பற்பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த விவசாய வருமான வரி விலக்கு என்ற போர்வையில் பற்பல கோடீஸ்வர எம் பிகள் எத்தனை கோடிகளை வரியின் பிடியிலிருந்து ஏய்க்கிறார்கள் ???
இவர்களுக்கெல்லாம் தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுவதில்லை ??
விவசாயி என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்யும் கோடீஸ்வரர்கள் ஒரு புறம், நிஜமாகவே விவசாயம் செய்து கடன் சுமையில் மூழ்கி தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிஜ விவசாயிகள் மறுபுறம்....!!
எந்த ஒரு விவசாயின் உயிரும் எந்தக் காரணத்தாலும் போகக் கூடாது என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் ஏக்கம்.
Leave a comment
Upload