தொடர்கள்
அனுபவம்
மீண்டும் வருகிறார் மோடி- ஜாசன்

20250701143655321.jpg

மோடியை பொறுத்தவரை அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளுக்கு தரும் அதே முக்கியத்துவம் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கும் தருவது வழக்கம்.

மோடி எங்கு சென்றாலும் அது புராணம் முக்கியத்துவமான தலமாக இருந்தால் அங்கு அபிஷேகம் அர்ச்சனை போன்றவற்றை செய்வது வழக்கம்.

ராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழபுரம் ஆயிரமாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அங்கு ராஜேந்திர சோழன் கட்டிய கோவிலுக்கு சென்று கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ஆன்மீக நண்பர்கள் சொல்வது இதுதான் ஆகம ரீதியாக நிறுவப்பட்ட கோயில்களில் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. அந்தக் கோயில்களில் சாம்னித்யம் குடிகொண்டு இருக்குமாம். அங்கு வழிபட்டால் பக்தர்களுக்கு நற்பயன்கள் கிடைக்குமாம்.

ராஜராஜன் கட்டிய பெருவுடையார் கோயில், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழர் கோயில் இரண்டுமே தனிநபர்கள் தங்கள் பெருமையை பறைசாற்றுவதற்காக எழுப்பிய கோயில். அங்கு எதிர்மறை சக்திகள் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளிடம் பலமாக இருக்கிறது.

இந்த இரண்டு கோயில்களுக்கும் அரசியல் தலைவர்கள் போவதற்கு யோசிப்பார்கள்.

அதற்கு ஏற்றபடி தஞ்சை கோயிலுக்கு விஜயம் செய்த பல அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை இழந்து விட்டார்கள்

. இதற்கு எம்ஜிஆர், இந்திரா இருவருமே உதாரணம்.

நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி கூட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றது கிடையாது.

பொதுவாக இது தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் என்று இருந்தது. இப்போது மோடிக்கு ஆலோசனை சொல்லி இருக்கும் சிலர் இது கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கும் பொருந்தும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியும் இதுவரை நடந்ததில்லை.

20250701144142878.jpg

பிரதமர் தான் முதல் நிகழ்ச்சியாளர்.

தஞ்சை கோயிலுக்கு இருக்கும் அதே எதிர்மறை சக்தி இந்த கோயிலுக்கு உண்டு என்று சில ஆன்மீகத் தலைவர்கள் மோடியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்

. ஆர் எஸ் எஸ் 75 வயது நிறைவடைந்தவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மறைமுகமாக மோடிக்கு எச்சரிக்கை செய்து கொண்டு வருகிறது.

இந்த விதி ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு தான் பொருந்தும்.

பாஜகவில் அப்படி எந்த விதியும் இல்லை என்று சமாளிக்கிறார்கள் மோடி ஆதரவாளர்கள்

இது போன்ற எதிர்மறை சக்திகள் இருக்கும் கோயில் சென்று வந்தவர்கள் பரிகாரம் செய்தால் அந்த சக்தி செயலற்று போய்விடும் என்று மோடிக்கு ஆலோசனையும் சொல்லப்பட்டிருக்கிறது.

அக்னித்தலமான ஒரு கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் அந்த எதிர்ப்பு சக்தி காணாமல் போய்விடும் என்று சொல்லியதை தொடர்ந்து அடுத்த மாதம் 26-ஆம் தேதி திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து பரிகாரம் கொள்ள இருக்கிறார் பிரதமர்.

20250701144347535.jpg

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் முதலில் அண்ணாமலையார் கோயில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்த பிறகு தான் தனது நிகழ்ச்சியை தொடங்குகிறார்.