தொடர்கள்
கதை
காக்கி சட்டையும் ஒரு கிரைம் காதல் கதையும் - சுஶ்ரீ.

20250701232322914.jpg

நான் பங்கஜா, என் அக்கா ஷ்யாமளசுந்தரி பிராட்வேல எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை பாக்கறா.

அம்மா, “எங்க ஆபீஸ்ல சுந்தர்னு ஒரு பையன் புதுசா சேந்திருக்கான், களையா இருக்கான், நம்ம ஷாமளிக்கு பொருத்தமா இருப்பான்.”

அப்பா,” பாக்கலாமே நாளைக்கு ஈவ்னிங் காஃபிக்கு கூப்பிடேன்

நான், “ஹை அக்காவுக்கு கல்யாணம், எனக்கு ரிசப்ஷனுக்கு சிவப்புல காக்ரா சோளி”

ஷாமளி, “சமீர் நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர். புரபோஸ் பண்ணினார், நான் சரின்னுட்டேன்”

“தலைல கல்லை தூக்கி போடறயேடி,

அப்பா, “ஏய் புலம்பாதே ஷாமளி சமீரை வீட்டுக்கு கூப்பிடு. பேசிப் பாப்போம்”

மறு நாள் சமீர் வந்தார்

சோஃபால அமர்ந்தார் என்னை பாத்து சிரிச்சு ,”நீ பங்கஜா, க்வீன் மேரீஸ்ல படிக்கறே சரியா?”னு கேட்டார்.

பொதுவா எங்க எல்லாரையும் பாத்த வண்ணம்,“ஒரே பையன் பி.எஸ்.சி. படிச்சு போலீஸ்லயே வேலை கிடைச்சது.”.

ஷ்யமளா,”ஒரு நாள் அவசரமா போறீங்க போல,நான் வேணா டிராப் பண்ணவா”னு கேட்டார்.

அப்படிதான் ஆரம்பிச்சது.அப்பறம் வாரத்துல ஒரு நாளாவது புல்லட் சவாரி ஆபீஸ் வரை.

மெதுவே புல்லட் சவாரி நேரமும்,திசையும் மாறியது. மெரினா, ஈ.சி்.ஆர்.ல லாங் டிரைவ்னு ஆரோக்யமா ஆரம்பிச்சு, சனிக்கிழமை மாட்னி ஷோ வரை அமக்களமா தொடர்ந்தது.

அம்மாவுக்குதான் கொஞ்சம் திருப்தி இல்லை,அவ அண்ணா பையன் மணிகண்டனுக்கு ஷ்யாமளியைக் கொடுக்கணும்னு ஆசை,

அதுக்கப்பறம் எல்லாம் மளமளனு நடந்தது.

சமீர்,”புதுசா ஏதோ பிரி மெரிடல் ஃபோட்டோ ஷூட் டிரெண்டிங். மகாபலிபுரம் பக்கத்துல முட்டுக்காடுனு,போகணும்னு.”

அப்பா சொன்னார் நீயும் கூடப் போயிட்டு வானு..

ரிசார்ட்ல எங்களுக்கு ஒதுக்கப்பட்டது ரெண்டு பெட்ரூம் வில்லா. எனக்கு ஒரு ரூம், அக்காவுக்கு ஒண்ணு சமீர் ஹால்ல எக்ஸ்ட்ரா பெட்லனு பேச்சு.

கதவு தட்டல். தயக்கத்தோட கொஞ்சமா திறந்து பாத்தேன், சமீர்தான் உள்ளே வந்து கதவை மூடினார்.

இப்ப சமீர்.கொஞ்சம் குடிச்சிருக்கார்னு தெரிஞ்சது அவர் பேச்சு, என் மேல மேஞ்ச பார்வை எனக்கு சுத்தமா பிடிக்கலை..” நான் குளிக்கணும் நீங்க அப்பறம் வாங்க”

“சர்தான் வாடா பங்கு ஒண்ணும் தெரியாத மாதிரி ஆக்ட் கொடுக்கறயே, உனக்காகதான் இந்த டிரிப்பே”

சட்னு பக்கத்துல வந்து இறுக அணைத்துக் கொண்டான்.முகத்தை திருப்பி இதழ்களை கவ்வினான்.கைக்கு கிடைத்தது பக்கத்திலிருந்த ஃப்ளாஸ்க்தான் அதை எடுத்து அவன் தலையில் போட்டேன். ஷாக் ஆயிட்டான்.

கதவை திறந்து வெளியே போயிட்டான்.

எனக்கு கண்ணீரை கட்டுப் படுத்த முடியலை. பாத்ரூம் ஷவருக்கு கீழே நின்னேன்.அவன் தொட்ட இடமெல்லாம் எட்டுக்கால் பூச்சி ஊர்ந்த மாதிரி அருவருப்பா இருந்தது. எவ்வளவு சோப் போட்டாலும் துக்கம்தான் வந்தது, டூத் பேஸ்டால் என் இதழ்களை அழுத்தி அழுத்தி தேச்சேன்.

அக்காவை பாத்து கட்டிப் பிடிச்சு அழுது எல்லாத்தையும் கொட்டிட்டேன்.

அக்கா.” சரி வா போட்டிங் போலாம்”

சமீர் காத்திருந்தான்.

போட்டை செலுத்த வந்த போட்மேனை

சமீர் , “நீ வேண்டாம் நான் பாத்துப்பேன்னான்”.

ஆழமான இடத்துல என்னை தள்ளிடுவானோனு எனக்கு பயம்.

ஷாமளி சட்னு கேட்டா,“இன்ஸ்பெக்டர் சாருக்கு நான் சலிச்சிட்டேனோ,என்னை விட இள ரத்தம் கேக்குதோ, இல்லை ரெண்டும் வேணுமா”

முதலில் கொஞ்சம் உறைஞ்சு போன சமீர், “இல்லை ஆமாம்’னு தடுமாறினான்,

அவன் சொல்லி முடிக்கறதுக்குள்ளே அந்த துடுப்புக் கட்டை பலமாக அவன் தலையில் இறங்கியது.தடுமாறி தண்ணீரில் விழுந்தான் போட் இரைச்சலோடு கரைக்கு திரும்பியது.

குறித்த நாளில் அக்கா கல்யாணம் நடக்கலை. ஆன இதெல்லாம் பழைய கதை.

இப்போ.....

ஆடிட்டர் மணிகண்டனின் மனைவி ஷ்யாமளா.