“உங்கள் முடிவில் உறுதியா இருக்கீங்களா”? அழுத்தமாய்க் கேட்டார் கனம் நீதிபதி.
தங்கள் உறுதியில் கொஞ்சமும் தளராத அவர்கள் “ஆமாம் “என தலையை ஆட்டினர்.|
இவர்களுக்குள் இந்த முடிவா ! இது எப்படி வந்தது?
எல்லோருக்கும் ஆச்சரியம்.கல்யாணமாகி, அறுபது வருஷம் ஆனதை, அதி விமரிசையாக் கொண்டாடியவர்கள்.ஆதர்ச தம்பதினு, அனைவராலும் பாராட்டுப் பெற்றவர்கள்.
“தங்களைப் போல் அன்யோன்ய தம்பதிகள்இனி பிறந்து தான் வரணும்”.
அவள் என் பக்கத்து வீட்டுப் பெண். அஞ்சு வயசுலேர்ந்து நானும் அவளும் ஒண்ணாவே விளையாடுவோம்.அக்கம் பக்கத்துல இருக்கிற சின்ன பசங்களும், எங்களோட சேர்ந்து விளையாட வருவாங்க. அம்மா, அப்பா விளையாட்டும் அதில் உண்டு.அவர்கள் எல்லாரும் சேர்ந்து என்னையும், அவளையும் அப்பா, அம்மான்னு நடிக்கச் சொல்லி விளையாடுவாங்க.
சொர்க்கத்தில் பண்ண முடிவோ, என்னவோ?.... நிஜ வாழ்க்கையிலும் நாங்க நல்ல தம்பதி ஆனோம்.
இரண்டு பேரும் வேலைக்கு போனோம்.கை நிறைய காசு புரண்டது. ஆசைப் பட்டது அனைத்தையும் வாங்கிக் குவிப்போம்.உலகளாவிய உல்லாசப் பயணம் போயிருக்கோம்.நான் கிழிச்ச கோட்டை அவள் தாண்ட மாட்டா.அவள் போட்ட கோட்டை நானும் தாண்ட மாட்டேன். போன வருஷம் தான் எனக்கு எண்பது முடிஞ்சது. அதை அவளோடு அழகாகவே கொண்டாடினேன்.
“இவ்வளவு அழகான வாழ்க்கையில் எப்படி சார் இந்த சிக்கல் வந்தது?”அதுதானே உங்கள் கேள்வி?
பொழுது போகலையேன்னு அதி நவீன ஃபோன் ஒன்றை வாங்கி, அவளுக்கு நான் பரிசளிச்சேன். அதுல வந்த வினை தான் இது.
முக நூலிலும், வாட்ஸ் ஆஃப்லையும் பாதி நேரம் போயிடும். என்னோடபேச கூட நேரமில்லாமல் பண்ணிட்டாள்
“நான் தண்ணி வேணும்னு கேட்டா , கிச்சன்ல இருக்கு. நீங்களே போய் எடுத்துக் குடிங்க” என்பாள்.
அவளின் கைப்பேசி என்னுடைய வில்லனாக மாறியது.எனக்கு நானே வைத்துக் கொண்ட சூன்யம்.அவளுடைய் சமூக ஊடக போதை இதுவரை தெளியவில்லை.என்றும் தெளியாத போதையாக அது அவளுக்கு மாறிவிட்டது..
இப்படி அக்கறையே இல்லாம பேச ஆரம்பிச்சா. ஒரு நாள் அடக்க முடியாத கோபம் வந்தது.
“ மூட ஊடகங்கள் தரும் போதை உன்னை ஆட்டி படைக்குது. இப்படியே போனா நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க, ஒத்து வராது. இனி நாம்ப பிரிஞ்சே வாழலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.”
“அப்படியா. ..ரொம்ப சந்தோஷம்”. பட்டுனு பதில் சொன்னா.
“எங்க குரூப்ல நான் பேசிண்டிருக்கச்சே அனாவசியமா என்னை தொந்தரவு பண்ணி, அதைக் கொடு. இதைக்கொடுன்னு அடிக்கடி தொந்தரவு பண்றீங்க.”என்றாள் என் தர்ம பத்தினி
“என்னங்க இந்த ஒரு சின்ன பிரச்சனைக்கு, இப்படி ஒரு பெரிய முடிவ எடுத்திட்டீங்க”.
“கணவனுடைய குறட்டையைத் தாங்க முடியல்லேன்னு, அமெரிக்காவில் பொண்டாட்டி விவாகரத்து வேணும்னு கோர்ட்டுக்குப் போயிட்டா தெரியுமா?
நீ வேற..... ’இதோ வர்ரேன்’ உள்ளே வக்கீல் கூப்பிடறாறு
Leave a comment
Upload