நம் நாட்டின் தேசிய விலங்கு புலி .
காட்டில் கம்பீரமாக உலா வரும் ஒரு ஜீவன் .
இந்தியாவில் தான் அதிகமான புலிகள் வாழ்கின்றன என்பது பெருமையான விஷயம் .
பெங்கால் புலிகள் வலிமையானது என்று கூறப்படுகிறது .
நீச்சலில் வலிமையான புலிகள் என்றும் கூறப்படுகிறது .
மேற்கு தொடர்ச்சி மலை வனங்களில் குடிகொண்டிருக்கும் வரி வரி புலிகளின் தொகை குறைந்து வந்தது வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது .
ஜூலை 29 ஆம் தேதி உலக புலிகள் நாள் .
இந்த வருட புலிகள் கணக்கெடுப்பு இந்திய புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது ஆறுதலான ஒன்று என்று கூறுகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள் .
இந்த வருட புலிகள் நாள் கொண்டாடவேண்டிய நாள் .
காட்டுக்கு ராஜா சிங்கம் என்று கூறப்பட்டாலும் காட்டின் மெஜெஸ்டிக் ஹீரா புலி தான் என்கின்றனர் .
மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் சமீபத்தில் புலிகளின் உலா அதிகமாகியுள்ளது .
ஊட்டி , குன்னூர் , கோத்தகிரி என்று நகரினுள் புலிகளின் நடமாட்டம் இருந்துவருகிறது .
ஊட்டி எச் பி எப் தொழிற்சாலை மூடபட்டு அந்த வாளகம் செந்நாய்கள் , சிறுத்தை மற்றும் புலிகள் வாழும் இருப்பிடமாக மாறியுள்ளது உள்ளூர் வாசிகளை பீதியில் உறையவைத்துள்ளது .
கடந்த வாரம் ஊட்டி எச் .பி .எப் இந்து நகரில் உள்ள கோயில் வளாகத்தில் ஒரு புலி ஹாய்யாக படுத்து கொண்டிருந்ததை பார்த்து இன்னும் கிலியில் இருந்து மீளவில்லை அப்பகுதி வாசிகள் .
புலிகளின் எல்லை மிக விரிவாக தான் உள்ளது .அதே சமயம் புலிகள் தங்களின் சொந்த எல்லையை கணக்கிட்டு வாழும் ஒரு ஜீவன் என்கிறார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் கிளவுஸ் பட்டாச்சார்யா .
" புலிகளின் வளர்ச்சி தற்போது நம் நாட்டில் உயர்ந்திருக்கிறது .
இந்தியா முழுவதும் 3682 புலிகள் இருக்கின்றது என்பது நம் தேசிய விலங்கு பாதுகாக்க பட்டு அடர்த்தியாக இருப்பது பெருமையான விஷயம் என்கிறார் .
அதில் முக்கியமான ஒன்று நம் தென் இந்திய வனங்களில் புலிகளின் வளர்ச்சி அதிகம் என்கிறார் கிளவுஸ் .
புலிகளின் கணக்கெடுப்பு படி 2006 ஆம் ஆண்டு 1411 புலிகள் .
2014 ஆம் ஆண்டு 2226 புலிகள் உயர்வு .
2018 ஆம் ஆண்டு 2967 புலிகள் உயர்ந்துள்ளது .
இதற்கு காரணம் வன துறையினரின் பாதுகாப்பு மற்றும் வன உயிரின ஆர்வலர்களின் கட்டுப்பாடுகள் விழிப்புணர்வு
மனித மிருக மோதல் மற்றும் வேட்டையாடுவதை முழுவதுமாக தடுத்து நிறுத்தியது தான் .
2024 -25 புலிகள் கணக்கெடுப்பில் நீலகிரி உயிர்சூழல் பகுதியில் மட்டும் 165 புலிகள் இருக்கின்றனர் .
நீலகிரி உயிர்சூழல் பகுதி என்பது தமிழ் நாடு , கேரளா , கர்நாடக வனங்களை உள்ளடக்கிய .
முதுமலை , மாயார் , மசினகுடி , தெப்பக்காடு
கர்நாடக வனங்களான பண்டிபூர் , கபினி .
கேரளா வனங்களான நிலம்பூர் , வயநாடு , மூணாறு என்று இங்கெல்லாம் புலிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது .
அதே போல பெரியார் , மேகமலை மற்றும் ஆனைமலை காடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது .
ஆண் புலி 9 முதல் 10 அடி நீளம் 180 முதல் 100 கிலோ எடை இருக்கும் .
பெண் புலி 8 முதல் 5 அடி நீளம் .100 முதல் 160 கிலோ எடை .
பெங்கால் புலிகளின் எடை 270 முதல் 320 .
புலிகள் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் அதே சமயம் தன் எல்லையை கடந்து செல்வதில்லை .
தன் இயற்கை கழிவுகளை கொண்டு எல்லையை நிர்ணயிக்கும் விலங்கு .
தன் கூர்மையான நெகத்தால் மரங்களில் கீறி அடையாளம் பதித்து எல்லையை நிர்ணயிக்கிறது புலி !.
ஆண் புலி தன் துணையான பெண் புலியை அன்பாக கவனித்து கொள்ளும் .
ஒரு பிரசவத்தில் 6 குட்டிகள் ஈற்றெடுக்கும் .
தன் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள் இந்த புலி பெற்றோர் .
சிறுத்தை , செந்நாய் புலி குட்டிகளை கவ்விக்கொண்டு போக நெருங்கும் போது ஆண் புலி ஆக்ரோஷத்துடன் விரட்டி அடிப்பது அதன் பாதுகாப்பை காட்டுகிறது என்கிறார் கிளவுஸ்.
இயற்கையை பாதுகாக்க புலிகளின் உதவி அபாரமானது .
நீலகிரி வெஸ்டர்ன் கேட்ச் மென்ட் வனம் என்பது நீலகிரியின் தண்ணீர் பில்டர் இங்கு வரையாடுகள் அதிகம் அவை இந்த பில்டர் புல்லை உண்டு வாழும் அவை ஓடும் பொழுது பாறைகளில் கால் குளம்பு உரசி நெருப்பு பற்றி புல் வெளி தீ பற்றி அழியும் இங்கு புலிகள் வரையாடுகளை வேட்டையாடும் பொழுது பில்டர் புல் பாதுகாக்கப்படுகிறது .
இப்பொழுதாவது புரிகிறதா புலிகள் நம் நாட்டின் முக்கிய பொக்கிஷம் .என்கிறார்கிளவுஸ்.
நீலகிரி காணுயிர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலராக வனங்களினுள் விசிட் செய்யும்போது அழகிய கம்பிர புலிகளை க்ளோஸ் ரேஞ்சில் பார்த்துள்ளேன் .
மெஜெஸ்டிக்காகா பார்த்து விட்டு நகர்ந்து சென்று விட்டது .
புலி ஒரு ஜென்டில் மேன் மற்றும் ஜென்டில் லேடி என்று கூறினால் மிகையாகாது .அது தான் நம் தேசிய விலங்கு என்ற பெருமை என்கிறார் கிளவுஸ் .
புலிகள் காப்பகங்களினுள் இரவில் வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பது அனைத்து வன உயிரினங்களுக்கும் குறிப்பாக புலிகள் சுதந்திரமாக சுற்றி தங்களின் இன பெருக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது .
முதுமலை புலிகள் காப்பகம் , ஆனைமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் புலிகளின் உயிரை காப்பாற்றி உயர்வை ஏற்படுத்திவரும் காப்பகங்கள் என்பது உண்மை .
Leave a comment
Upload