சென்ற வாரம் நண்பரின் 62 வயதுடைய மூத்த சகோதரி சில நாட்கள் உடல் நலம் குன்றி இருந்து பிறகு இறந்தும் விட்டார். சோகமான செய்திதான் - ஆனால் அதோடு சேர்த்து ஒரு அதிர்ச்சியான விஷயமும் நண்பர் சொன்னார்
15 நாட்கள் ஒரு பிரபல மருத்துவ மனையில் ICU வில் வைத்து சிகிச்சை அளித்த வகையில் பில் தொகை ரூ.45 லட்சம் கட்ட வேண்டி இருந்தது. என்னதான் வசதியுடையவராக இருந்தாலும் யாரிடம் 45 லட்சம் பணம் ரெடி யாக இருக்கும். அப்படியே இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்துள்ள சேமிப்பு எல்லாம் ஒரே நாளில் பணால் !
இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் மாயமாக வேண்டாம் என்றால் என்ன செய்ய ? மருத்துவக் காப்பீடு ஒன்று மட்டும் தான் வழி.
இந்நாளில் தரமான மருத்துவ சிகிச்சை தனியார் மருத்துவ மனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் செலவு மிக அதிகம் ஆகும். அதில் தாங்கும் ரூம் வாடகை, மருந்து செலவுகள், டாக்டர் பீஸ் , போல பற்பல விதமான செலவினங்கள் உண்டு.
நமக்கு என்ன மருத்துவத் தேவைகள் வரும் என்று யாராலும் கணிக்க இயலாது. மிகவும் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு கூட திடீரென்று ஏதாவது கோளாறுகள் வருவதை நாம் பார்க்கிறோம்.
அப்படி இல்லா விட்டாலும் என்றாவது சாலை விபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிகம் . அதற்கு சிகிச்சை பெற நல்ல டாக்டர், நல்ல ஹாஸ்பிடல் என்று போகத்தான் செய்வோம். சென்னை கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள டாப் 10 மருத்துவமனைகள் மிகவும் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் உலகத்திலேயே மிக சிறந்த சிகிச்சைகள் தர முடியும். ஆனால் செலவு என்னவோ பல பல லட்சங்கள்.
மிகவும் உபயோகமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவின் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தருகின்றன. நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற படி எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் காப்பீடு எடுத்து கொள்ளலாம். ஒரு குடும்ப தலைவர் எடுக்கும் பாலிசி யிலேயே அவரது மனைவி, குழந்தைகள் சேர்ந்து கொள்ளலாம். ஒரு தொகையிலேயே குடும்பத்தில் உள்ள நால்வரும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் TPA எனப்படும் சேவை நிறுவனங்கள் மூலம் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவ மனைகளுடன் தொடர்பில் உள்ளன. நாம் சிகிச்சை எடுப்பது பற்றி மருத்துவர் ஆலோசனைப்படி முன்னரே முடிவு செய்து விட்டால், cashless எனப்படும் அனுமதி பெற்று விட்டால், சிகிச்சை செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனமே மருத்துவமனைக்கு நேரடியாக செலுத்தி விடுவார்கள். இதற்கென ஒவ்வொரு மருத்துவ மாலையிலும் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் அலுவலர்கள் இருப்பார்கள். அவர்கள் TPA விடம் தொடர்பு கொண்டும் cashless அனுமதியை பெற்று விடுவார்கள்.
இப்போதெல்லாம் ஒரு 3 லட்சத்துக்கோ 5 லட்சத்துக்கோ ஒரு மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்து விட்டு, அதற்கு மேலே இன்னொரு 10 லட்சமோ 20 லட்சமோ டாப் அப் ( TOP UP ) பாலிசி-யும் எடுப்பது பிரபலமாகி வருகின்றது. இந்த டாப் அப் பாலிசி க்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை சற்று குறைவாகவே இருக்கும்
இன்சூரன்ஸ் காப்பீடு எடுக்காமல் ஏதாவது அதிகம் செலவு செய்ய வேண்டிய மருத்துவ செலவுகள் நம் பேங்க் அக்கௌன்ட் டில் இருந்து போக வேண்டாம், பேங்க் அக்கௌன்ட் காலி ஆகா வேண்டாம் என்ற எண்ண ஓட்டம் உள்ளவர்கள் உரிய முறையில் முன் கூட்டியே சரியான தொகைக்கு பட்ஜெட் தூக்கு ஏற்றவாறு மருத்துவ காப்பெடு எடுப்பது ஸ்மார்ட் முடிவாக இருக்கும்.
ஏதோ ஒரு கம்பெனியில் ஊழியராக பணிபுரிபவருக்கு தனக்கும் குடும்ப உறுப்பினருக்கும் சேர்த்து பணி செய்யும் நிறுவனமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும், அதற்கு மேலே ஒரு தொகைக்கு Super Top Up பாலிசி எடுப்பது நல்லது. உதாரணத்துக்கு கம்பெனி-யில் ஒவ்வொரு ஊழியருக்கு 3 லட்சத்துக்கு மெடிக்கல் பாலிசி எடுத்திருந்தால், அதற்கு மேலே ஒரு 3 லட்சத்துக்கோ, 5 லட்சத்துக்கோ அதற்கும் அதிகமாகவோ ( நமது பட்ஜெட்-க்கு தக்கபடி) "சூப்பர் டாப்-அப்" பாலிசி எடுக்கலாமே.
நாம் பணி புரியும் நிறுவனம் எடுத்துள்ள மருத்துவக் காப்பீட்டு பாலிசி ஒரு குறிப்பிட்ட சிறிய தொகைக்கே என்பதால் டாப் உப்பு பாலிசி அவசியமாகிறது. நிறுவனம் எடுத்துள்ள பாலிசியும் நாம் சுயமாக எடுக்கும் டாப் அப் பாலிசியும் வேறு வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளில் எடுக்கலாம் - தவறில்லை. டாப் அப் பாலிசிக்கு செலுத்தும் பிரீமியம் அதே தொகைக்கு எடுக்கும் ரெகுலர் பாலிசி ப்ரீமியத்தை விட குறைவாகவே இருக்கும்
உஷார் : அலுவலகம் எடுக்கும் பாலிசி யில் உள்ள அதனை வசதிகளும் நாம் பெர்சனலாக எடுக்கும் டாப் அப் பாலிசி-யில் இல்லமால் போகலாம். உதாரணம் முன்னமே உள்ள BP சாய்க்கரை நோய் போன்ற சில நோய்கள் அல்லது ஆரோக்கிய குறைபாடுகள் கம்பெனி எடுக்கும் பாலிசியில் ( ஒரு பெரிய குழுவாக எடுப்பதால்) விதிவிலக்கில்லாமல் கவர் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நாம் தனியாக எடுக்கும் பாலிசி யில் அதற்கு கவர் முதல் நான்கு ஆண்டுகளுக்கு கவர் கிடையாது.
Leave a comment
Upload