நான் எப்போதும் காதி கிராமோத்தியக் கடையில் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், ஓம திரவம் வாங்குவது வழக்கம். விளக்கெண்ணை இரவு தூங்குவதற்கு முன்பு கண்ணில் தடவிக் கொள்வேன். இதேபோல் வேப்பெண்ணையை தினந்தோறும் இரவு காலில் தடிவிக் கொள்வேன்.
கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்து தொப்புளில் தடவிக் இது குளிர்ச்சியாக இருக்கும் சூட்டை தணிக்கும் என்று என் அம்மா பழக்கப்படுத்தியது.
நான் அப்படி நேற்று வாங்கப் போன போது , பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு உல்லன் ஸ்வெட்டர் வாங்க வந்தார் ஒரு இளைஞர்.
கடைக்காரரும் அந்த சிறுமிக்கு ஏற்றபடி ஸ்வெட்டர்களை காண்பித்தார்.
ஒரு குறிப்பிட்ட கலர் ஸ்வெட்டரை தேர்ந்தெடுத்து இதுதான் என் சகதோழியும் வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்ட கலரை தேர்ந்தெடுத்தார் அந்த சிறுமி. அதைப் பிரித்துப் பார்த்த சிறுமி என் தோழி வைத்திருக்கும் ஸ்வெட்டரில் ஒரு பூ போட்டிருக்கும் இதில் அது இல்லை வேண்டாம் என்றார்.
அப்போது அந்த கடைக்காரர் அந்த சிறுமியிடம் அது எம்ராய்டரி பண்ணி இருப்பார்கள் என்று சொல்லிவிட்டு நன்றாகத்தான் இருக்கும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
அப்பொழுது அந்த சிறுமி பிடிவாதமாக அதே மாதிரி தான் வேண்டும் என்றார். அப்போது அந்த கடைக்காரன் அந்த இளைஞரிடம் குழந்தை ஆசைப்பட்டது எல்லாம் நீங்கள் வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணம் உன்னதமானது.
ஆசைக்கு அளவில்லை அந்த எம்பிராய்டரி அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் போட்டிருப்பார்கள் குழந்தைகள் ஆசைப்பட்டது எல்லாவற்றையும் வாங்கி தர வேண்டும் என்று தொடங்கினால் அதற்கு முடிவில்லாமல் போகும்.
நமது வசதி எப்படி இது சரியா இது தேவையா என்பதை பெற்றோர்கள் யோசிக்க வேண்டும் அதை அவர்களுக்கு புரியும் படி எடுத்துச் சொல்ல வேண்டும்.
அவர்கள் வானில் பறக்கும் ஆகாய விமானம் வேண்டும் என்று கேட்டால் வாங்கித் தருவீர்களா உண்மையை புரியும்படி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி பழக்குங்கள் என்று அறிவுரை சொன்னார்.
அப்போது அந்த இளைஞர் கோபப்பட்டு வியாபாரத்தை மட்டும் கவனி எனக்கு அறிவுரை எல்லாம் சொல்லத் தேவையில்லை என்று சொல்லி நீ வாம்மா வேறு கடையில் நீ கேட்ட ஸ்வெட்டர் கிடைக்கும் வாங்கித் தருகிறேன் என்று குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டார்.
அப்போது அங்கிருந்து ஒரு பெரியவர் ஐயா நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை .
இந்த தலைமுறை பெற்றோர்கள் மூளை கிட்டத்தட்ட மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது யோசிக்கும் திறன் இல்லை. அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நீங்கள் வருத்தப்படாதீர்கள் என்று அவருக்கு ஆறுதல் சொன்னார்.
அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் எல்லோருக்கும் நல்லதை சொல்லி பழக்கப்பட்டவன் இவர் கோபப்பட்டு விட்டார் என்பதற்காக நான் என் பழக்கத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக சொன்னார்.
சில நிமிடங்களில் அந்த இளைஞர் குழந்தையுடன் வந்தார் இப்போது அந்த குழந்தையின் அம்மாவும் வந்தார்.
அந்த அம்மா கை கூப்பியபடி அண்ணே என் கணவர் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கு நடந்தது எல்லாம் என் கணவர் சொன்னார். நான் அப்போது அவரிடம் ஏன் நீங்கள் கோபித்துக் கொண்டீர்கள் அவர் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.
உங்கள் நல்லதுக்கு தானே சொல்லி இருக்கிறார் வாருங்கள் மன்னிப்பு கேட்போம் என்று அழைத்து வந்தேன் என்று சொல்லிய அந்தப் பெண்மணி கணவரை பார்க்க அவரும் அண்ணே நான் தப்பா பேசிட்டேன் மன்னிச்சுக்கோங்க நீங்க நல்லது தான் சொல்லி இருக்கீங்க நீங்க அந்த ஸ்வட்டரை தாங்க என் பெண் வாங்கி கொள்வாள் என்று சொல்ல ஆமாம் அங்கிள் அதுவே போதும் இனிமேல் அடுத்தவர்கள் என்ன வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து ஆசைப்பட மாட்டேன் என்று அந்த சிறுமியும் சொல்ல அங்கு இருந்த எல்லோருமே அந்தக் கடைக்காரரை பெருமையாக பார்த்தார்கள்.
Leave a comment
Upload