ஒரு கிரிக்கெட் வீரர் தரவரிசை பட்டியலில் முதன்மை இடம் பிடிப்பதற்கு அவரது விளையாட்டு திறன் மட்டுமே போதுமானதாகும். மக்களின் மனதில் இடம் பெற இந்த ஒரு தகுதி மட்டுமே போதுமா என்றால் இல்லை. திறமையுடன் கூடிய நற்பண்புகளே மக்களிடம் அவர்களை கொண்டு சேர்க்கிறது.இந்த வகையில், மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கிரிக்கெட் வீரர், ரோஹித் சர்மா. இவர், தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தருணத்தில் ஏன் இந்த அறிவிப்பு என்பதும் பலரது கருத்து.
30 வயதாகும் ரோஹித், கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் புரிந்தவர். தன்னலமற்ற இவரது விளையாட்டு, அமைதி, தனி மனித ஒழுக்கம், இந்திய அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டு அணியை வழி நடத்திய விதம் என இவரது தனித்தன்மைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாலாயிரம் ரன்களுக்கு மேலாக எடுத்து, 40 ரன்கள் சராசரி, பன்னிரண்டு முறை நூறு ரன்கள், 24 தடவை அணியின் தலைவராக பொறுப்பேற்று அதில் 12 போட்டிகளில் வென்று சாதனையும் படைத்துள்ளார்.
2010 ஆம் தனது டெஸ்ட் விளையாட்டை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த போது, தனது உடல்நலக்குறைவால் அது தள்ளிபோடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக துவங்கிய இவரது கிரிக்கெட் விளையாட்டு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. 2019இல் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஒபெனராக களமிறங்கி, சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதித்தார். அதனை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பல உயரங்களையும், சரிவுகளையும் கண்டார். இருப்பினும் இவரது நிதானம், அணியை வழிநடத்தி சென்ற விதம் என, ஒரு தலைவருக்குரிய அனைத்து ஆளுமைகளையும் கொண்டு விளங்கினார். ரோஹித் சர்மா என்றவுடன் இந்த பண்புகளே நம் கண் முன் வந்து தோன்றும்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, பல கிரிக்கெட் பிரபலங்களும் தனது வாழ்த்துகளை இவருக்கு தெரிவித்துள்ளனர். பிபிசிஐ சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோட்ஜ்ர் பின்னி, ஜே ஷா, கபில் தேவ், சேவாக், கிரிக்கெட் ஆர்வலர் ஹர்ஷா போக்லே என அனைவரும் ரோஹித்தின் திறமையை பாராட்டியுள்ளனர். கபில் தேவ் கூறும் பொழுது, "இந்தியாவில் ரோஹித் மாதிரி கிரிக்கெட் விளையாடியவர்கள் மிகச் சிலரே" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் ரோஹித் ஷர்மாவிற்கு சாதகமாக அமையவில்லை. இந்த நேரத்தில் இவர் எடுத்த இந்த முடிவு சரியானதே என்று கூறும் கிரிக்கெட் ஆர்வலர்களும் உண்டு. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்துள்ள ரோஹித்திற்கு, அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி விளையாட இந்த முடிவு உதவியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
ரோஹித், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, மக்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடம் பிடித்து, பல சாதனைகள் புரிந்த ஒரு நட்சத்திர வீரர். இதனை தொடர்ந்து என்ன என்பதை காலத்தின் கையில் விட்டு விட்டு, இப்போதைக்கு இவரது ஒரு நாள் போட்டிகளை ரசிக்கலாம், வாழ்த்
Leave a comment
Upload