அமைதி கட்டுப்பாடுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி அறிவுறுத்தல்.
நட க்கிறத பேசுங்க !!
அனைவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் ஆட்சி ஸ்டாலின் பெருமிதம்.
அமைச்சர்கள் பற்றி சொல்றார் !!
100 நாள் வேலை திட்ட ஊதியம் 336 ஆக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு.
உயர்வு இருக்கட்டும் பழைய பாக்கி எல்லாம் செட்டில் பண்ணிட்டீங்களா, மத்திய அரசு பணம் தரலேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே !!
அரசு ஊழியர் பண்டிகை கால முன்பணம் அதிகரிப்பு.
யானை பசிக்கு சோளப் பொரியா இது ?
வலுவான கூட்டணியால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியாது முன்னாள் தலைவர் அண்ணாமலை
நீங்க தலைவரா இருந்தா முடியும் அப்படித்தானே !!
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு பெ.சண்முகம்
ஆனா உங்க கூட்டணி தலைவர் அடுத்து நம்ம ஆட்சிதான் அப்படின்னு சொல்றாரு?!!
2026 சட்டசபை தேர்தலில் 'வெற்றிவேல் வீரவேல் 'ஆப்ரேஷன் நயினார் நாகேந்திரன் கருத்து
நல்ல டாக்டரா பாருங்க !!
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 1000 கோடி கடன் உதவி பால்வளத் துறை அமைச்சர் தகவல்
இந்த தகவல் விவசாயதுறை அமைச்சருக்கு தெரியாதா !!
புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
அக்கா புதல்வரோட புதல்வருக்கே அந்த கனவு இருக்கு !!
தாக்கப்பட்ட தலித் மக்கள் போலீசுக்கு திருமா கண்டனம்
ஸ்ட்ரைட்டா போலீஸ் அமைச்சரை கண்டிக்க மாட்டாரோ !!
திராவிடம் போலியானது சீமான் ஆவேசம்
தலைவர் வந்து சொல்றாரு போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் !!
Leave a comment
Upload