தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

20250410084439219.jpeg

ஊர்வசி ரவுட்டாலா

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை 12 கோடிக்கு வாங்கி இருக்கிறார் ஊர்வசி ரவுட்டாலா.

20250410071010274.jpg

போட்டா போட்டி

சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு அரசியலுக்குப் போன தளபதி இடத்தை பிடிக்க தனுஷ் சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டி. இருவரும் தளபதியை வைத்து இயக்கிய இயக்குனர்களை பிடித்து தளபதிக்கு சொல்லியது போல் எங்களுக்கும் ஒரு நல்ல கதை சொல்லுங்கள் என்று நச்சு பண்ணுகிறார்கள்.

20250410084517578.jpeg

கிருத்திசனோன்

நாலாவதாக நடிக்கும் இந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடி கிருத்திசனோன்.

20250410084800605.jpeg

ரெட்ரோ ருக்கு

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே ருக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது அந்த ருக்கு என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போது ருக்கு தான் ட்ரெண்டிங்.

20250410085437396.jpeg

சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டி குட்டி ட்ரவுசரில் குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு நிறைய லைக்குகள் வந்தாலும் சிலர் பட வாய்ப்பு இல்லை ஏதும் போலும் என்று கிண்டல் அடித்து இருக்கிறார்கள்..

தமிழ் கூறும் நல்லுலகிற்காக அந்த வரலாற்று நடனம் இங்கே..... கிளிக்கவும்.

20250410084616730.jpeg

170 கோடி

மோகன்லால் ,ஷோபனா நடித்த மலையாள படம் துடரும் ஏப்ரல் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பெரிய அளவில் இந்த படத்துக்கு விளம்பரங்கள் எதுவும் இல்லாது இருந்தாலும் இதுவரை 170 கோடி வசூல் சாதனை படுத்திருக்கிறது. இந்த வாரம் தமிழில் வெளியாகிறது.

20250410085136913.jpeg

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த ஷிவானி நாராயணனுக்கு தற்சமயம் சினிமா வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே மாடர்ன் உடையில் கேட்வாக் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்ய இதுவரை 6 லட்சம் பேர்கள் பார்த்திருக்கிறார்கள். இனிமேல் மாடலிங் இன்ஸ்டாகிராம் என்று கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் அம்மணி.

20250410085218729.jpeg

மலையாளத்தில் வாய்ப்பு

பரியேறும் பெருமாள், மதயானை கூட்டம் ,சூழல் ,கிருமி போன்ற படங்களில் நடித்தாலும் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும் படி பேசப்படவில்லை. ஆனாலும் அவர் நடிப்பை பார்த்து மலையாளத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இவர் நடிக்கும் படத்தில் மிஷ்கினும் நடிக்கிறார்.

20250410085334322.jpg

கோலிவுட்டிற்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவுக்கு வெளிநாட்டில் அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் நல்ல வசூல் உள்ளது. ஆனால் ஹாலிவுட் சினிமாவை காப்பாற்றுகிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாட்டு திரைப்படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் செய்தால் அதற்கு 100 % சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது தமிழ் படவசூலை பெரிய அளவு பாதிக்கும்.

20250410084720656.jpeg

அடுத்த குத்தாட்டத்துக்கு ரெடி

புஷ்பா 2 படத்தில் 'கிஸ்ஸிக் ' பாடலில் ஸ்ரீ லீலா நடனம் ஆடிய பிறகு அவரது புகழ் பட்டித் தொட்டி எல்லாம் பரவியது. தற்போது தமிழ் இந்தி தெலுங்கு என்று பிசியான ஆகிவிட்டார் ஸ்ரீலீலா. .இப்போது ராம் சரணின் பொத்தி படத்தில் இன்னொரு குத்தாட்டம் போட இருக்கிறார் ஸ்ரீலீலா.