ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பயங்கரவாதத்திற்கு என்னுடைய பதில் இதுதான் என்பதை தெளிவுபடுத்தி விட்டார் பிரதமர் மோடி.
பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு தற்காலிகமாக ஓய்வு தந்து இருக்கிறோம். பாகிஸ்தான் தான் எங்களிடம் கெஞ்சியது என்றும் தனது தொலைக்காட்சி உரையில் சொல்லி இருக்கிறார் பிரதமர். தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது உலகம் தெரிந்து கொண்டு விட்டது. உலக நாடுகளிடமும் கெஞ்சியது பாகிஸ்தான். இந்தியாவிடம் இனி சேட்டை செய்ய மாட்டோம் என்றது பாகிஸ்தான். பத்தாம் தேதி நமது ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குனரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள் பயங்கரவாத செயல்கள் இருக்காது என கூறியது. நாம் அதை பரிசீலித்து தற்போதைக்கு தாக்குதல் நிறுத்தி உள்ளோம் என்றும் சொல்லி இருக்கிறார் பிரதமர்.
தீவிரவாதமும் அமைதிப் பேச்சு வார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது. அமைதியே மிகப்பெரும் சக்தி. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அதேபோல் பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்று அமெரிக்காவுக்கும் தெளிவுபட பதில் சொல்லிவிட்டார் பிரதமர். பிரதமரின் நடவடிக்கையில் கட்சி பார்க்காமல் எல்லோரும் துணை நிற்க வேண்டும். அதுதான் சரியும் கூட.
Leave a comment
Upload