நாட்டின் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்திட , ஆபரேஷன் சிந்தூர் செயல் படுத்தப்பட துவங்கியது .
பஹல்காம் வன்முறைக்கு பதிலடி கொடுக்கவும் , தீவிர வாத அமைப்புகளை ஒடுக்கவும் இந்திய ராணுவம் துல்லியமான திட்டத்தைத் தீட்டி செயல் படுத்தியது.
இந்திய ராணுவத்தின் கட்டுக்கோப்பான திறனும் , படை வியூகமும் பாகிஸ்தானை அலற வைத்தது. அதனால் வெகு விரைவிலேயே போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள வைத்தது .
இந்த வெற்றி தீர்மானிக்கப்பட்ட வெற்றி மட்டுமல்ல .
பல பத்தாண்டுகளாக அரசும் ,ராணுவமும் ,தொழிற்நுட்பமும் தம் மனதில் கனவாக கண்டு உருவாக்கிய வெற்றி. "திடும்" என மூளும் போர் அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் , எதிரிப் படைகளின் முகாம்களை வேரிலிருந்து அகழ்ந்து எடுத்து வீசி எறியவும் முன்னெச்சரிக்கையாக திட்டமிட்ட வெற்றி இது .
இப்போரில் பெருஞ் சாதனைகளைச் செய்த ஆகாஷ் ஏவுகணை பற்றியே உலகெங்கும் பேச்சாக உள்ளது. இந்திய மண்ணில் இந்திய அறிஞர்களால் கட்டமைக்கப்பட்ட இதன் செயல்பாடு உலகை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது
இம்மாதம் 8, 9 தேதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்களை அழித்த ஆகாஷ் ஏவுகணையின் வீரியத்தைக் கண்டு பெருமையுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
அதனை உருவாக்கிய பிரகலத ராமராவ் என்னும் 78 வயது விஞ்ஞானி .
அக்னி, பிருத்வி என்னும் இந்திய ஏவுகணைகளை உருவாக்கிய இந்தியாவின் ஏவுகணை மனிதர் (Missile Man ) என்று அழைக்கப்படும் அப்துல் கலாமின் ஆய்வுக் குழுவில் இருந்த இந்த விஞ்ஞானி,கலாமின் வழிகாட்டுதலில் ஆகாஷை வடிவமைக்க முன்வந்தார் .
அவரது தலைமையில் ஒரு வான் தடுப்பு சாதனமாக ஆகாஷை வடிவமைத்து ,அதை நாட்டுக்கு அர்ப்பணித்ததார் பிரகலதா . 1999 ஆம் ஆண்டு ஆகாஷ் 1S உருவாக்கப்பட்டது .
2021 ஆம் ஆண்டு அது மேம்படுத்தப்பட்டு ஆகாஷ் ப்ரைம் உருவானது . பின்னர் உருவான ஆகாஷ் என்.ஜி நவீன தொழிற்நுட்பத்தின் உச்சம் தொட்டது. வான், தரை ,கடல் , நீர் மூழ்கி ,விமானம் , ஆளில்லா விமானம் என்னும் ஆறுவகை தளவாடங்களை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகாஷ் .
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defence Research and Development Organisation -DRDO ) BEL என்னும் இரு மகத்தான ஆய்வு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு ஆகாஷ்.
இருபதே நொடிகளில் எதிரிகளின் ஏவுகணையை 20 கிலோமீட்டர் சென்று தாக்கும் வலிமையுடையது. ஆகாஷ் ஏவுகணையை மீறி எதிரி நாட்டுவான்வெளி விமானங்கள் உள்ளே நுழைய முடியாது என்பது நடந்து முடிந்த தாக்குதல்களில் தெரிய வந்துள்ளது.
போர்க்களத்தில் 'பறந்து, பறந்து' அடிக்கும் ஒரு பெரிய படைக்கு சமமானது ஆகாஷ்.
இந்தியாவின் உறுதியான பாதுகாப்புக்கு ஆகாஷ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வெறும் 20 நொடிகளில் எதிரிகளின் ஏவுகணையை 20 கிலோமீட்டர் சென்று தாக்கும் வலிமையுடையது.
இந்த வான் பாதுகாப்பு ஏவுகணையை மீறி இது வரை எதிரி நாட்டு ஏவுகணை உள்ளே நுழைய முடியவில்லை என்பது உண்மை.
ஒரே நேரத்தில் பலதிறப்பட்ட செயல்களைப் புரியும் வண்ணம் வுருவக்கப்பட்டுள்ளது.
ரேடார், செயற்கை கோள் உதவியுடன் , நிலத்தில் இருந்து விண்ணைத்தாக்கும் ஆற்றல் மிக்கது .
ஒரே சமயத்தில் வானில் பறக்கும் எதிரி நாட்டு விமானங்களை மற்றும் ட்ரோன்களை கண்டு பிடிக்கவும், குறி பார்க்கவும், சுட்டு வீழ்த்தவும் வல்லமை மிக்கது.ஒலியின் வேகத்தை விஞ்சும் சூப்பர்சானிக் வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணை 9 தீவிர வாத அமைப்புகள் , 11 விமானத்தளங்களை அழித்து சாதனை படைத்துள்ளது
இப்போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் ,துருக்கியும் களம் இறங்கின . துருக்கியின் சார்பாக பங்கு கொண்ட பைகார் யிஹா 3 ட்ரோன்கள் ஆயிரக்கணக்கில் நமது எல்லைப்பகுதியில் பறந்தன. அவை எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன .
சீனாவின் சார்பில் இயக்கப்பட்ட பிஎல் 15 எல்ஆர் ரக ஏவுகணைகளையும் ஆகாஷ் விட்டு வைக்கவில்லை.
இந்திய மண்ணில் , இந்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் செயல்திறன் , உலக நாடுகளை அதிர வைத்துள்ளது .
எப்போதும் விழிப்புணர்வுடனும் ,தயார் நிலையிலும் இருக்கும் இந்திய ராணுவத்தின் கடமை உணர்வும், வல்லமையும் கண்டு உலகம் அதிசயிக்கிறது . இனி பாகிஸ்தான் மட்டுமல்ல , வேறு எந்த நாடும் இந்தியாவைத் தொட தயங்கும் .
இந்தியா போரைத் தவிர்க்க நினைக்கும் அமைதியான நாடு . சீண்டினால் ஆகாஷ்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு அழித்து விடுவார்கள்.
சிந்தூர் கற்றுத்தந்த பாடம் இது.!
Leave a comment
Upload