பிரிட்டிஷ் கலெக்டர் ஜான் சல்லிவன் உருவாக்கின ஊட்டி 200 வருடத்தை கடந்துவருகிறது .
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி இயற்கை சூழுந்து காணப்படும் அழகிய மலை நகரம் .
மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் மலை உச்சி தான் தொட்டபெட்டா சிகரம் .
வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் குளு ...குளு சீசன் மே மாதம் கடைசிவரை தொடர்கிறது வழக்கம் .
இந்த வருடம் சீசன் எப்படி என்று ஒரு ரவுண்டு அப் அடித்தோம் .
இ பாஸ் மற்றும் ஒருவழி பாதை என்பதால் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை போக்குவரத்து நெரிசல் மிக குறைவாக இருக்கிறது . அதே சமயம் எப்படியோ சில சுற்றுலா பயணிகளின் கார்கள் நழுவி செல்வதை பார்க்க முடிந்தது ஊட்டி நகரினுள் நுழையும் போது தான் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .
ஏப்ரல் 15 ஆம் தேதி ஊட்டி மாரியம்மன் கோயில் விழாவுடன் சீசன் களைகட்டியது .
பள்ளி தேர்வுகள் முடிய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது .
வழக்கமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி குதிரை பந்தயம் துவங்குவது வழக்கம் தமிழக அரசு குதிரை பந்தய மைதானத்தை அரசு உடைமையாக்கியதை தொடர்ந்து ஊட்டி ரேஸ் மிஸ்ஸிங் .
சுற்றுலாக்களின் விசிட் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் , படகு இல்லம் , ரோஸ் கார்டன் அவலாஞ்சி என்று சுற்றி வருகின்றனர் .
நாமும் பொட்டானிக்கல் கார்டனுள் விசிட் அடித்தோம் .
முதல்வரின் விசிட்டால் மிக துரிதமாக மலர்க்கட்சி வேலைகள் நடந்து கொண்டிருந்தன .
வரலாற்று சிறப்பு மிக்க இத்தாலியன் பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது .
அதை பார்த்தவுடன் " ஊட்டி வரை உறவு " என்ற படத்தின் ' பூமாலையில் ஓர் மல்லிகை ' என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது .
சுற்றுலாக்களின் கூட்டம் கார்டனை மொய்த்து கொண்டிருந்தது .
மலர்களை பார்த்து மெய்சிலிர்த்து போயினர் .
ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஸ்ரீதர் ,
" ஊட்டி சூப்பரான இடம் எல்லோரும் ஒரு முறை பார்க்கவேண்டிய இடம் . கிளைமேட் அருமை இதமாக இருக்கிறது . ஒரு விஷயம் எங்குமே பிளாஸ்டிக் பாட்டில் பார்க்க முடியவில்லை .75 சதவிகிதம் பிளாஸ்டிக் இல்லை இது நல்ல விஷயம் .
நாங்கள் நடந்து சென்றவரை குப்பை பார்க்கவில்லை .உணவு பொருத்தவரை நோ ப்ரொப்ளம் ஹோட்டல்களில் பணிபுரிபவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசினால் நல்லது இந்த இடம் இன்டர்நேஷனல் டூரிஸ்ட் ஸ்பாட் தானே .
நாங்கள் இங்கு உள்ள மலர்களை பார்த்து பிரமித்து நிற்கிறோம் ஊட்டி ஒரு சொர்க்க பூமி " என்கிறார் உணர்ச்சிவசப்பட்டு .
தெலுங்கானாவில் இருந்து குடும்பத்துடன் விசிட் செய்த் சிவபிரசாத்தை சந்தித்து பேசினோம் ,
" நாங்கள் மூன்றாவது முறையாக ஊட்டிக்கு வருகிறோம் இதுவரை சலிக்கவில்லை .என் மனைவி தாராணிக்கு பிடித்த இடம் .
ரோஸ் கார்டன் , தொட்டபெட்டா , கர்நாடக கார்டன் எல்லாம் அருமையான இடம் பெரிய கார்டன் அது . தங்கும் இடம் தான் ரொம்ப காஸ்டலி .
கிளைமேட் மிக அருமை .ஒரு வாரமாக இங்கு தான் இருக்கிறோம் .அடுத்த வருடம் ஒரு மாதம் தங்குவதாக பிளான் பாப்போம் " என்கிறார் கூலாக ..
நாம் ரோஸ் கார்டன் பக்கம் விசிட் செய்தோம் சுற்றுலாக்கள் மொய்த்து கொண்டிருந்தனர் .
வருடந்தோறும் பூக்கும் ரோஜாக்கள் பூக்கவில்லை .
மழையால் ரோஜாக்கள் உதிர்ந்து விட்டன என்கிறார் ஒரு ஊழியர் .
20 வது ரோஜா கண்காட்சி நடந்து முடிந்து பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் தான் !.
ஆமை , டால்பின் , மெர்மைட் மலர் அலங்காரம் அருமையாக இருக்கிறது . " Save Aquatic World" ' கடல் சூழல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் ' என்ற பொருளுடன் மலர் அலங்காரம் அமைந்திருந்தன .
முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நேரடி பார்வையில் 20-5-1995 ஆம் வருடம் திறக்க பட்ட ரோஜா பூங்கா .
தோட்டக்கலை அதிகாரிகள் முருகன் மற்றும் மணி ஆகியோரின் கைவண்ணத்தில் 4000 வகை ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன .
திருச்சியிலிருந்து இருந்து குடும்பத்துடன் வந்திருந்த நாகராஜ் ரோஜா கார்டனை பார்த்து மெசிலிர்த்து போயிருந்தார் .
ஊட்டி வந்து ரோஜா கார்டானுள் நுழைந்தவுடன் மனத்திற்கு இதமாக இருக்கிறது . மலர் அலங்காரங்கள் சூப்பர் சுற்றுலா துறைக்கு நன்றி சார் .
நம்ம முதல்வரும் ஊட்டியை ரசித்து கொண்டிருக்கிறார் என்னும் பொழுது சரியான நேரத்தில் வந்துள்ளோம் எங்க குழந்தைகள் ரொம்பவே என்ஜாய் பண்ணுகிறார்கள் ".
கேரளா எர்ணாகுளத்தில் இருந்து வந்த ஆதிரா கூறும்போது , "இப்படிப்பட்ட பெரிய இவ்ளோ ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்கும் ரோஸ் கார்டனை முதல் முறையாக பார்க்கிறோம் .
ரொம்பவே அழகாக இருக்கிறது இந்த கார்டன் .
ஊட்டி கிளைமேட் சூப்பர் ....
ஊட்டி சீசன் களைகட்டியிருக்கும் இந்த சூழலில் நகரில் சுற்றுலா பயணிகள் அவசரமாக செல்ல ஒரு டாய்லெட் வசதி கூட இல்லை .
நகரில் மாநில நகராட்சி துறை சார்பாக புதிய டாய்லெட்டுகள் கட்டப்பட்டு திறக்காமல் இருக்கிறது .
போக்குவரத்து நெரிசல் ஊட்டி நகர் , தொட்டபெட்டா ஜங்ஷன் , குன்னூர் ரயில்வே கேட் அருகில் தொடர்கிறது .
ஊட்டியில் ஒரு ஹோட்டலில் கூட தரமான சுவையான உணவு கிடைப்பதில்லை என்பது ஒரு தொடர் கதை ...
ஊட்டி நகரில் சுற்றுலா தலங்களை பார்வையிட தமிழக போக்குவரத்து கழகத்தால் சர்க்யூட் பஸ்கள் விடப்பட்டுள்ளன அது சுற்றுலாக்களுக்கு மலிவான பயணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
அதே சமயம் உள்ளூர் டூரிஸ்ட் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் தடைபட்டுள்ளது என்ற வேதனையில் தவிக்கிறார்கள் .
ஊட்டி படகு இல்லத்தில் நடைபெற்ற படகு போட்டியில் சுற்றுலா தம்பதிகள் கலந்து கொண்டு கலங்கினார்கள் .
ஒரு சுற்றுலா பயணி நீச்சல் வீரர் என்று கூறிக்கொண்டு ஊட்டி ஏரியில் குதித்து நீச்சல் அடிக்க உடல் விரைத்து உயிருக்கு போராடியவரை ஒரு படகு ஓட்டி அனசாத் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .
ஊட்டி படகு இல்ல சாலை வழியாக எந்த அதிகாரியும் செல்வதில்லை போலும் .
காலையில் வாக்கிங் சென்றால் அங்கு குவிந்திருக்கும் குப்பை மற்றும் குதிரை கழிவு ,அந்த பகுதி மிக அசுத்தமாக இருப்பதை பார்த்து உள்ளூர் வாசிகள் முகசுளிக்கவைக்கிறது.
ஊட்டி சீசன் முடிவதற்குள் தென் மேற்கு பருவமழை துவங்க இருக்கிறது .
தினமும் கோடை மழை வெளுத்து வாங்குவது இதமாக இருந்தாலும் சுற்றுலா பயணிகள் நனைந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் குளிரில் .
Leave a comment
Upload