தொடர்கள்
ஆன்மீகம்
மதுரையில் அழகர் - மாலா ஶ்ரீ

மதுரை, அழகர்கோவிலில் கடந்த 8-ம் தேதி காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின.

கடந்த 10-ம் தேதி மதுரையில் மீனாட்சியம்மனை காண்பதற்காக தங்கப் பல்லக்கில் அழகர் புறப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடந்தது.

மதுரை, வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு அன்றிரவு 11 மணியளவில் அழகர் சென்றிருந்தார்.

அங்கு கடந்த 13-ம் தேதி அழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, பின் சைத்ரயோபசாரம் நடந்தது.

பின்னர் ஏகாந்த சேவையில் எழுந்தருளிய அழகர், வீரராகவ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோலத்தில் புறப்பாடாகிய அழகர், வண்டியூர் பகுதி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டகப் படியில் எழுந்தருளினார்.

அங்கு அவர் நாரைக்கு முக்தி அளித்தும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனூர் மண்டகப் படியை வலம் வந்த அழகர், அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர்.

மாலை ஆஞ்சநேயர் கோயிலில் அழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சண நிகழ்ச்சி நடந்தது.

20250417055306392.jpg

மேளதாளங்கள் முழங்க, மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு அழகர் புறப்பட்டார்.

அம்மண்டபத்தில் கடந்த 13-ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முத்தங்கி சேவை, மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்பட தசாவதாரங்களில் (10 வித அலங்காரங்களில்) அழகர் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

கடந்த 14-ம் தேதி காலை மோகினி அவதாரத்தில் அழகர் வீதியுலாவாக வந்து, அன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருளினார்.20250417073244578.jpg

கடந்த 15-ம் தேதி காலை தல்லாக்குளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அழகர் திருமஞ்சனமாகி, பூப்பல்லக்கில் கள்ளர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதே திருக்கோலத்தில் கருப்பண்ணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன், அங்கிருந்து அழகர்மலைக்குப் புறப்பட்டார்.

20250417071323284.jpg

நேற்று (16-ம் தேதி) காலை அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக மேல் இருப்பிடத்தை அழகர் சென்றடைந்தார்.

இன்று (17-ம் தேதி) அழகருக்கு உற்சவ சாந்தியுடன் மதுரையில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.