சின்னான் குருவிகள் இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் ஒரு பறவை. மைனாவின் அளவிலேயே இருக்கும் இந்த பறவை. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு அடி உயரம் வரை இந்த பறவைகளை காணலாம் என்கிறார் பறவையின ஆராய்ச்சியாளர்களின் தந்தை சலீம் அலி.
தோட்டங்களிலும், சிறிய காடுகளிலும், மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு அருகாமையிலும், தள்ளியும் இந்த பறவைகளை காணலாம் என்கிறார் அவர். இந்தியா தவிர இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளிலும் காணப்படும் இந்த பறவை நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மிக அரிதாக காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இறை உண்ணும் பொழுது அதிக எண்ணிக்கையில் ஒரு இடத்தில் கூடும் இந்த பறவைகள் ஆல மரத்தின் பழங்கள், அத்தி பழங்களை விரும்பி உண்ணுபவை. இவை தவிர இறக்கை கொண்ட ஈசல் போன்ற சிறு பூச்சிகளையும் உண்டு வாழக்கூடியவை இவை என்கிறார் சலீம் அலி.
பிப்ரவரி முதல் மே வரை உள்ள காலங்களே இந்த பறவைகளின் இனப்பெருக்க காலங்களாகும். சிறிய கப் வடிவிலான கூடுகளை சிறு குச்சிகளைக் கொண்டு கட்டும் இந்த பறவைகள். அந்த கோடுகளுக்கு சிலந்தி வலைகளை அரணாக அமைத்துவிடுமாம் சின்னான். இந்த கூடுகளை மரங்களில் மூன்றிலிருந்து முப்பது அடி உயரத்தில் கட்டிவிடும் என்கிறார் அவர். பிங்க் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பறவையின் முட்டைகள். ஒரு நேரத்தில் இரண்டு முதல் மூன்று முட்டைகளை ஈனும் சின்னங்கள் என பதிவிட்டுள்ளார் சலீம் அலி.
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload