ஊட்டிக்கு தமிழக முதல்வர் விஜயம் செய்து 6 ஆம் தேதி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையை திறந்து வைத்தார் .
ஊட்டி மலர் கண்காட்சிக்கு முதல்வர் வரவேண்டும் என்று முதல்வரிடம் பேசி முடிவு செய்தார் நீலகிரி எம் பி ராசா .
முதல்வரின் ஊட்டி விசிட் உறுதி செய்த பின் 16 ஆம் தேதி துவங்க இருந்த 127 ஆவது மலர்கண்காட்சியை 15 ஆம் தேதிக்கு மாற்றி அமைத்தார் ராசாவும் தமிழக அரசு கொறடா ராமச்சந்திரனும் .
முதல்வரின் ஊட்டி விசிட் ஜாலி மற்றும் கூலான விசிட்டாக ஏற்பாடு செய்தார் ராசா .
குடும்பத்துடன் 12 ஆம் தேதி மாலை கோத்தகிரி வழியாக ஊட்டி வந்த முதல்வர் தமிழக மாளிகையில் தங்கினார் .
முபாரக் ஷால் கொடுக்க ஊட்டி நகர மன்ற துணை தலைவர் ரவி குமார் உல்லன் மப்ளர் கொடுத்து வரவேற்றனர் .
13 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு விசிட் .
ஊட்டியில் மதியம் பலத்த மழை.
மழை விட்டவுடன் முதல்வர் முதுமலை புறப்பட்டு சென்றார் .
க்ரே கலர் ஸ்வட்டர் ரவி குமார் கொடுத்த மப்ளர் அணிந்து கொண்டு சென்றார் .
மசினகுடியில் பழங்குடி மக்களை பார்த்து பேசினார் .
காட்டில் பூத்து குலுங்கும் ஆவாரம் பூவை கொடுத்து வரவேற்றனர் பழங்குடி வாசிகள் .
ஒரு ஆதிவாசி பெண் நூறு நாள் வேலை பற்றி கேட்க , விரைவில் நடைமுறை படுத்த படும் என்று கூறினார் .
தெப்பக்காட்டில் யானைகளுக்கு கரும்பை முதல்வரும் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் வழங்கினார்கள் .
ஆஸ்கர் தம்பதி பொம்மன் பெள்ளியை சந்தித்து பேசி அனைத்து மாவுத்துகளுடன் ஒரு கிளிக்கு போஸ் கொடுத்தனர் முதல்வர் தம்பதியினர்.
காலை கார்டன் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதல்வர் ,ராசா மற்றும் துர்க்கா ஸ்டாலின் வாக்கிங் மேற்கொண்டனர்.
அங்கு புட்பால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுடன் புட்பால் கிக் செய்து விளையாடினார் .
முதல்வர் சிக் என்று செக் ஷர்ட் அணிந்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிரடியாக விசிட் செய்தார் .
நேராக நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து மருத்துவமனையின் வசதிகள் கவனிப்பு பற்றி கேட்டறிந்தார் .
தமிழகத்தின் உயரமான சிகரமான தொட்ட பெட்டா உயரத்தில் இருந்து ஊட்டியை பார்த்து ' அடேங்கப்பா என்ன அழகு ' என்று கூறி பிரமித்து போனார் முதல்வர் .
துர்க்கா ஸ்டாலின் கோத்தகிரிக்கு அருகில் உள்ள எடப்பள்ளி கிராமத்தில் வீற்றிருக்கும் சாயிபாபா கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார் உடன் நடிகை சரண்யா வந்திருந்ததை ஆச்சிரியமாக பார்த்தனர் கிராமத்து பெண்கள் .
முதல்வரின் விசிட்டை முன்னிட்டு தோட்டக்கலை இணைஇயக்குனர் சிப்லா மேரி பாகுபலி அரண்மனை , அரச சிம்மாசனம் , கல்லணை என்று வரலாற்று சிறப்பு மிக்க வடிவங்கள் லட்சக்கணக்கான மலர்களால் அமைத்து களைகட்டியிருந்தது .
15 ஆம் தேதி காலை முதல்வர் தமிழக மாளிகையில் இருந்து ஹில் பங்க் வந்து வழிநெடுகிலும நீண்ட ரோடு ஷோவை நடத்தினார் .
முதல்வர் பொட்டானிக்கல் கார்டன் வந்து 127 வது மலர்கண் காட்சியை தன் துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து மலர்களை ரசித்து பார்த்தனர் .
பின்னர் சிகப்பு கார்னேஷன் மலர்களால் அலங்கரிக்க பட்ட ராஜா சிம்மாசனத்தில் முதல்வர் தம்பதியினரை அமர செய்து அழகுபார்த்தனர் .
முதல்வர் தன்னுடன் வந்த தன் சகோதரர் தமிழரசனின் மகள் பூங்குழலியை அருகில் அழைத்து அமர வைத்து போஸ் கொடுத்தார் .
முதல்வர் பார்வையாளருடன் அமர்ந்து கலைநிகழ்ச்சியை பார்த்து ரசித்து விட்டு தமிழக மாளிகைக்கு சென்றார் .
வெள்ளிக்கிழமை காலை மீண்டும் எச் ஏ டி பி விளையாட்டு மைதானத்திற்கு வந்த முதல்வர் எம் பி ராசாவுடன் வாக்கிங் சென்று விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ,
" மலர் கண்காட்சி சிறப்பாக இருந்ததாகவும் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக இருந்தது .
காங்கிரஸ் தலைவர் பா சிதம்பரம் இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதாக கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அது அவருடைய கருத்து என்று கூறினார்.
2026 தேர்தல் குறித்து கேட்டதற்கு 2026 மட்டுமல்ல 2031, 2036 தேர்தல்களில் திராவிட மாடல் ஆட்சியே நிலைத்து நிற்கும் என தெரிவித்து முதல்வர் விடைபெற்றார் .
Leave a comment
Upload