தொடர்கள்
கவர் ஸ்டோரி
ராணுவ நடவடிக்கை - பிரதமர் எடுத்த முடிவு-விகடகவி நிருபர் குழு

20250416115722475.jpg

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு ஒரு மறக்க முடியாத மரண அடியாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருந்தார்.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மாநிலங்களைப் போர் ஒத்திகைக்கு தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு அதே தினத்தில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

பாகிஸ்தான் தீவிரவாத முகங்கள் தேடித்தேடி இந்தியாவின் விமானப்படையும் ஏவுகணைகளும் அழித்தது.

பிரதமர் மோடியை பொறுத்தவரை அவர் போர் நடத்த வேண்டும் என்று எப்போதும் விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் உக்கிரேன் விஷயத்தில் கூட பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்யலாம் என்றுதான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட பிறகு தீவிரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் தேடிப்பிடித்து தண்டனை தருவோம் என்றார் பிரதமர்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை அப்படித்தான் இருந்தது.

இந்தியாவின் மூன்று நாள் இராணுவ நடவடிக்கை பாகிஸ்தானுக்கு மரண அடி என்பார்கள் அதுதான்.

பிரதமரின் இந்த எச்சரிக்கையை மேலை நாடுகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை மோடி சும்மா சொல்லிக் கொண்டிருப்பார் என்று நினைத்தார்கள்.

குறிப்பாக அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி.

பேச்சு வார்த்தை நடத்தலாம் சமாதானமா போகலாம் என்று டிரம்ப் பேசியதை பிரதமர் மோடி காதில் வாங்கிக் கொள்ளவில்லை

உலகில் உள்ள எல்லா இந்திய தூதரகங்களின் தூதுவர்கள் அந்தந்த நாட்டு தொலைக்காட்சிகளில் பாகிஸ்தான் செய்த தவறு என்ன இந்தியா என்ன செய்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

பிரதமர் ஏற்கனவே சொன்னபடி ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொண்டிருக்கிறோம்.

தீவிரவாதத்திற்கான எதிராக எங்கள் தாக்குதல் தொடரும் என்றார். அதன்படி ஜம்மு காஷ்மீரில் operation keller என்ற பெயரில் பதுங்கி இருக்கும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Keller வனப்பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் தேடி அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது