விகடகவியின் ஆன்மாவான ஆசிரியர் மதன் சாரின் இல்லத்தில் ஓவியர், அனிமேஷன் கலைஞர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலருமான ரகுநாத் கிருஷ்ணா. அவரது படைப்புகளை மதன் சார் ஆர்வமுடன் பார்வையிட்டு, பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் உச்சமாக, ரகுநாத் கிருஷ்ணா, மதன் சாரை “காரிகேச்சர்” முறையில் வரைய முனைந்தார். அவரது தூரிகை, மதன் சாரின் தனித்துவமான அம்சங்களை நகைச்சுவையுடன் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, ஒரு புதிய சவாலாக, ரகுநாத், மதன் சாரை ஒரு கார்ட்டூன் வரையச் சொன்னார்.
மதன் சார், தனது முத்திரைப் பாணியில், வெறும் 10 செகண்டுகளில் “மிஸ்டர்.பொதுஜனம்” கார்ட்டூனை சரசரவென வரைந்து, கையெழுத்திட்டு ரகுநாத்துக்கு பரிசாக வழங்கினார்.
ரகுநாத் கிருஷ்ணாவுக்கு இது ஒரு நெடுநாளைய கனவு நிறைவேறிய தருணமாக இருந்தது.
மதன் சாரின் படைப்பை நேரில் பெற்ற அவர், மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த அற்புதமான தருணத்தை அருகிலிருந்து காணும் பாக்கியம் பெற்றவர், இந்தக் கட்டுரையை எழுதும் நான்.
இந்தச் சந்திப்பு, விகடகவியின் நகைச்சுவை மரபையும், கலைத்திறனையும் ஒருங்கிணைத்து, இரு கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தியது.
மதன் சாரின் “மிஸ்டர்.பொதுஜனம்” கார்ட்டூன், சமூகத்தின் பிரதிபலிப்பாகவும், நகைச்சுவையின் உச்சமாகவும் திகழ்கிறது.
Leave a comment
Upload